Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 33
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. பூச்சி உண்ணும் தாவரங்கள் என்று அழைக்கப் படுவதற்கு காரணம்

A) எல்லா பூச்சிகளும் இந்த வகைத் தாவரங்களை உண்ணக்கூடியது

B) இந்தத் தாவரங்கள் உணவுக்கு பூச்சிகளை உண்ணக்கூடியது

C) அவைகள் தாவர உண்ணிகள்

D) உருவத்தில் பூச்சிகளை ஒத்து இருப்பதால்

 

 

2. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி. 

உறுதி (A): ஆக்ஸிஜனின் முதன்மை செயலியல் சம்பந்தப்பட்ட பணியானது தாவரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள செல்களை நீட்சியடையத் தூண்டுகிறது.

காரணம் (R): ஆக்ஸிஜனானது மொட்டுகளில் ஓய்வு. நிலையை மீளச் செய்கிறது.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

A) (A)ம் (R)ம் சரி, (R)என்பது (A)விற்கு சரியான விளக்கம்

B) (A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R)என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி, ஆனால் (R) தவறு

D) (A) தவறு, ஆனால் (R) சரி

 

 

3. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.

உறுதி (A). : வைட்டமின் K காணப்படும் முதன்மை பொருள்களில் சில பச்சை காய்கறிகள், சோயா எண்ணெய், தக்காளி மற்றும் சில உள்ளன.

காரணம் (R) : வைட்டமின் K-யானது உயர் விலங்குகளில் ஏற்படும் தோல் அரிப்பைத் தடுக்கிறது.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

A) (A)-ம் (R) – ம் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

B)(A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி, ஆனால் (R) தவறு

D) (A) தவறு, ஆனால் (R)சரி

 

 

4. கொழுப்புப் பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது

A) கிளைக்காலைசிஸ்

B). டி.சி.ஏ.

C) குளுக்கனியோஜெனிசிஸ்

D) சப்போனிபிக்கேசன்

 

 

5. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?

A) 1980

B) 1984

C) 1986

D) 1990

 

 

6. செல்லின் இடைச்சுவரில் மிகவும் அதிகமாக காணப்படக்கூடிய பொருள்

A) சிலிகா

B) பெக்டின்

C) குயிட்டின்

D)லிக்னின்

 

 

7. உட்கருவின் உள்ளே காணப்படும் புரோட்டோபிளாசத்திற்கு 

A) நியூக்ளியோபிளாசம் 

B) அமைலோபிளாஸ்ட்

C) இலையோபிளாஸ்ட் 

D) சைட்டோபிளாசம்

 

 

8. சாறுண்ணிக்கு ஒரு எடுத்துக்காட்டு

A) நெப்பந்திஸ்

B) யுட்ரிகுளேரியே

C) டையோனேயே

D) மானோட்ரோபா

 

 

9. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு?

A) பிரஸிக்கோ

B)கஸ்குட்டா

C) மியூகர்

D) நெப்பந்திஸ்

 

 

10. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.

பட்டியல் – I                  பட்டியல் – II 

a) ஜெனிட்டிக்ஸ். – 1) பூஞ்சைகள் பற்றி படிப்பது

b) சைட்டாலஜி. – 2) பாக்டீரியா பற்றி படிப்பது

c) மைகாலஜி – 3) செல்கள் பற்றி படிப்பது

d) பாக்டீரியாலஜி – 4) மரபு பற்றி படிப்பது

குறியீடுகள் :

1 2 3 4 

4 3 2 1 

4 3 1 2 

1 2 4 3

 

 

11. குட்டை நீரின் மேல் அடுக்கு

A) எபிலிம்னியான்

B) தெர்மோக்ளைன்

C) ஹைபோலிம்னியான் 

D) யூரிதெர்மல்

 

 

12. நீலப் பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்

A) ஏகைனீட்ஸ்

B) ஹெட்டிரோசிஸ்ட்

C) ஏபிளனோஸ்போர்கள் 

D) பார்த்திளோஸ்போர்கள்

 

 

13. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.

 பட்டியல் I                        பட்டியல் II 

a) டீலோ சென்ட்ரிக்  -1) குச்சிவடிவ இரு கரங்களைக் கொண்டது

b) அக்ரோ சென்ட்ரிக். – 2) ‘L வடிவம்

c) மெட்டாசென்ட்ரிக். – 3) குச்சி வடிவம் ஒரு கரம் கொண்டது

d) சப்மெட்டா சென்ட்ரிக் – 4) ‘V’ வடிவம்

 குறியீடுகள் :

A) 3 1 2 4 

B) 3 1 4 2

C) 2 1 3 2

D) 1 4 3 2

 

 

14. ஒரு கிராம் தோட்ட மண்ணில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை

A) 1 மில்லியன்

B) 100 மில்லியன்

C) 500 மில்லியன்

D) 1 பில்லியன் மற்றும் அதிகமாக

 

 

15. கிளைக்காலைஸிஸ் என்பது ___ன் மாற்றமாகும்

A) குளுக்கோஸில் இருந்து கிளைக்கோஜன்

B) கிளைக்கோஜனில் இருந்து குளுக்கோஸ்

C) குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்

D) குளுக்கோஸில் இருந்து சிட்ரிக் அமிலம்

 

 

16. பின்வரும் கூற்றுகளை கவனி.

I) சைலக் குழாய்கள் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் காணப்படுகின்றன.

II) சைலக் குழாய்கள் ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படவில்லை.

III)சைலக் குழாய்கள் நீரை கடத்துகின்றன.

IV) சைலக் குழாய்கள் தாவரத்திற்கு வலிமையைக் கொடுக்கிறது.

இவற்றுள்

A) (I) மட்டும் சரியானது

B) (I), (II) மற்றும் (III) சரியானவை

C) (I), (III) மற்றும் (IV) சரியானவை

D) அனைத்தும் சரியானவை

 

 

17. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி.

துணிபு (A) : பூஞ்சைகள் தரையில் (வாழிடம்) இருந்து உணவைப் பெறுகின்றன.

காரணம் (R) : பூஞ்சைகள் ஜீரண நொதிகளை வாழிடத்தில் சுரக்கின்றன.

கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மற்றும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல

C) (A) சரி, ஆனால் (R) தவறு

D) (A) தவறு, ஆனால் (R) சரி

 

 

18. கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

A) தனி சைம். – மியூஸா

B) சையாத்தியம் – யூபோர்பியா

 C) தனி ரசீம். – ஹைபிஸ்கஸ்

D) ஸ்பேடிக்ஸ். – குரோட்டலேரியா

 

 

19. கிரிகர்மெண்டல் கலப்புயிரி சோதனைகளை எதில் செய்தார்?

A) பைசம் சடைவம்

B) பழப்பூச்சி

C) முயல்கள்

D) அந்துப்பூச்சிகள்

 

 

20. சயனைடுகள் எந்த தாவரத்தின் மூலம் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன?

A) ஜிப்ரெல்லா பியூசாரியம் 

B) ஜெரோபைட்ஸ்

C) சூடோமோனாஸ்

D) ஈஸ்ட்

 

 

21. செல்லின் ஆற்றல் சாலை என அழைக்கப்படுவது

A) மைட்டோகாண்டிரியா

B) பிளாஸ்டிட்

C) ரைபோசோம்

D) கோல்கை உறுப்புகள்

 

 

22. தாவரத் தொகுதிகளில் அடியில் கண்ட எந்தத் தொகுதி நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது?

A) ஜிம்னோஸ்பெர்ம்

B) பிரையோஃபைட்டுகள்

C) ஆஞ்சியோஸ்பெர்ம்கள் 

D) டெரிடோஃபைட்டுகள்

 

 

23. லைசோசோம்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவற்றில் உள்ள நொதிகள்

(A) கார்பாஸைலேட்டிங் 

B) சுவாசித்தல்

C) ஆக்ஸிஜனேற்றம் 

D) செரித்தல்

 

 

24. பூவாத தாவரங்களில் விதைகளைப் பெற்றுள்ள ஒரே தொகுதி

A) டெரிடோஃபைட்டுகள் 

B) பிரையோஃபைட்டுகள்

C) ஆஞ்சியோஸ்பெர்ம்கள் 

D) ஜிம்னோஸ்பெர்ம்கள்

 

 

25. தாவர செல்லில் DNA காணப்படும் பகுதி

A) பசுங்கணிகம்

B) மைட்டோ காண்ட்ரியா

C) உட்கரு

D) இவை அனைத்தும்

 

 

26. ஒரு தாவரசெல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

A) குரோமோசோம்

B) செல்சுவர்

C) செல்சவ்வு

D) உட்கரு

 

 

27. கீழ் உள்ள ஒளி அலைகளில் எது ஒளிச் சேர்க்கையில் அதிக திறன் கொண்டது?

A) நீலம்

B) பச்சை 

C) ஆரஞ்சு

D) மஞ்சள்

 

 

28. ஒரு மரத்தின் வயதினை கணக்கிடுவது எவ்வாறு?

A) அதன் உயரத்தினை அளத்தல்

B) அதன் விட்டத்தை அளத்தல்

C) அதன் செல் சாறினை ஆய்வு செய்தல்

D) அதன் வளர்ச்சி வளையங்களை எண்ணுதல்

 

 

29. இலையின் வெளிப்புறத்தில் உள்ள புறத்தோலில் காணப்படும் சிறு துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் செய்கிறது. அத்துளைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

A) ஹைடதோடுகள்

B) ஸ்டிக்மேடா

C) இலைத் துளைகள்

D) ஸ்ட்ரோமா

 

 

30. வாஸ்குலார் கற்றையில் புரோட்டோசைலம் மையத்தை நோக்கி காணப்பட்டால் அது பின்வருமாறு அழைக்கப்படும்.

A) வெளிநோக்கியது 

B) உள்நோக்கியது

C) நான்கு முனை சைலம் 

D) பல்முனைச் சைலம்

 

 

31. கீழ்க்காண்பவைகளில் எது கூட்டுத்திசு?

A) புளோயம்

B) பாரன்கைமா

C) கோலன்கைமா

D) குளோரன்கைமா

 

 

32. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு ___ எனப்படும்.

A) மைக்காலஜி

B) சைட்டாலஜி

C) நுண்ணுயிரியல்

D) ஆல்காலஜி

 

 

33. விலங்குகளால் நடைபெறும் மகரந்த சேர்க்கை ___ எனப்படும். 

A) அனிமோபில்லி

B) ஆர்னிதோபில்லி

C) என்டமோபில்லி

D) சூபில்லி

 

 

34. கருவுறுதலுக்குப் பின் உறைகள் வளர்ந்து ___ மாறுகிறது.

A) விதையுறை

B) எண்டோஸ்பெர்ம்

C) மைக்ரோபைல்

D) ராஃபே

 

 

35. தமக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள்

A) தற்சார்பு பாக்டீரியங்கள்

B) பிறசார்பு பாக்டீரியங்கள்

C) ஒட்டுண்ணி பாக்டீரியங்கள்

D) சாறுண்ணிகள்

 

 

36. செல்லின் ஆற்றல் நிலையம் எனக் கருதப்படுவது

A) மைட்டோகாண்ட்ரியா

B) கோல்கை உறுப்புகள்

C) எண்டோபிளாஸ்மிக் வலை

D) பசுங்கணிகம்

 

 

37. கீழ் உள்ளவற்றில் எவை தாவரங்களின் சுவாச உறுப்பு?

A) பூக்கள்

B) இலை

C) வேர்

D) எதுவுமில்லை

 

 

38. காளானின் குடை போன்ற விரிந்த பகுதி

A) நுண்தட்டு

B) ஆனுலஸ்

C) ஸ்டைப்

D)பைலியஸ்

 

 

39. செல்லின் ஆற்றல் சாலை என அழைக்கப்படுவது

A) மைட்டோகாண்டிரியா 

B) பிளாஸ்டிட்

C) ரைபோசோம்

D) கோல்கை உறுப்புகள்

 

 

40. செல்லின் சொரசொர்ப்பான எண்டோபிளாச வலை அடியிற் கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாகச் செய்கிறது?

A) நியூக்ளியோடைடு உருவாக்குதல்

B) புரோட்டீன் உருவாக்குதல்

C) கொழுப்பு உருவாக்குதல்

D) ஸ்டார்ச் உருவாக்குதல்

 

 

41. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம்

A) குளோரோபிளாஸ்ட்

B) பெராக்ஸிசோம்ஸ்

C) மைட்டோகாண்டிரியா 

D) சைட்டோபிளாசம்

 

 

42. பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை

A) மைட்டோஸிஸ்

B) மியோஸிஸ்

C) ஏமைட்டோஸிஸ் 

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

43. குறுக்கு ஏறும் முறை அடியிற்கண்ட எந்த நிலையில் ஏற்படுகிறது?

A) லெட்டோடீன்

B) சைகோட்டீன்

C) பாக்கிட்டீன் 

D) டையாகைனஸிஸ்

 

 

44. அதிகமாக உபயோகிக்கப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது

A) ஆல்கா

B) பாக்டீரியம்

C) பூஞ்சை

D) தாவரம்

 

 

45. சுவாசித்தல் என்பது ஒரு

A) வளர் மாற்றச்செயல் 

B) சிதை மாற்றச் செயல்

C) வேதிச்செயல்

D) இவை அனைத்தும்

 

 

46. இவற்றில் காற்றில்லா சுவாசம் நடைபெறுவது

A) ரைபோசோம்களில்

B) நியூக்ளியஸில்

C) சைட்டோபிளாசத்தில்

D) வாக்யோலில்

 

 

47. இந்த செயலில் ஆக்ஸிஜன் நேரிடையாகப் பயன்படுத்தப்படுகிறது.

A) கிளைகாலைசிஸ்

B) நொதித்தல்

C) கிரப் சுழற்சி

D) எலக்ட்ரான் மாற்றத்தொடர்

 

 

48. ஒரு செல்லின் உயிருள்ள பகுதி என்று அழைக்கப்படுவது

A) செல்சுவர்

B) புரோட்டோபிளாசம்

C) ஹையலோ பிளாசம்

D) செல்சாறு

 

 

49. ஒவ்வொரு உயிருள்ள செல்லும் ____ பெற்றுள்ளன

A) செல்சவ்வு

B) உணவுக் குமிழ்

C) பசுங்கணிகம்

D) செல்சுவர்

 

 

50. யூகேரியாட்டிக் உட்கருக்களில் காணப்படும் ஹிஸ்டோன் புரதத்தின் பண்புகள் கீழ்க்கண்ட தன்மையை உடையன.

A) அமிலம்

B) காரம்

C) நியூட்ரல்

D) அம்போடேரிக்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Join the conversation