
SCIENCE TEST QUESTIONS
1. பொருத்துக :
a) பெனரோகேம்கள் -1. பாசிகள்
b) வாஸ்குலார் கிரிப்டோ கேம்கள். -2. லிவர்ஃவொர்டுகள்
c) வாஸ்குலார் அற்ற கிரிப்டோகேம்கள் -3.கோனிஃபர்கள்
d) தாவரங்களில் இரு வாழ்விகள். -4. பெரணிகள்
A)3 4 1 2
B)3 4 2 1
C)4 2 1 3
D)4 3 1 2
2. கரும்பு எவ்வாறு இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது
A) ஒட்டுப்போடுதல்
B) துண்டுகள்
C) விதை
D) பதியம் போடுதல்
3. ஐந்துலக வகைபாட்டினை முன்மொழிந்தவர்
A) விட்டேக்கர்
B) லின்னேயஸ்
C) எங்ளெர்
D) ஜான் ரேய்
4. எந்த பாக்டீரியா பூச்சிகளை எதிர்க்கும் தன்மை பெற்ற அயல் ஜீன் தாவரங்களை உருவாக்குகிறது?
A) பேசில்லா ராமோஸிஸ்
B) தையோபாசிலஸ் தையோ ஆக்சிடன்ஸ்
C) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
D) பேசில்லஸ் அன்திராஸிஸ்
5. வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: வரிசை I வரிசை ll
a) டெர்பீன்ஸ் -1. யாம்
b) பைட்டோஸ்டீரால் -2. தக்காளி
c) பினாயில் -3. பூண்டு
d) தியோல் -4. கத்திரிக்காய்
A) 4 1 3 2
B) 1 2 3 4
C) 2 1 4 3
D) 3 2 1 4
6. கீழ்க்கண்ட எந்த உயிரினத்தில் RNA காணப்படுவதில்லை?
A) டிஎம்வி (TMV)
B) பாக்டீரியா
C) பாசிகள்
D) DNA வைரஸஸ்
7. தண்டு மற்றும் இலை வெட்டும் பூச்சிகள் பின்வரும் எதை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது?
A) குளோரோப்ரைபாஸ்
B) லிண்டேன்
C) மாலத்தியான்
D) (B) மற்றும் (C)
8. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
கூற்று (A):பூச்சி உண்ணும் தாவரங்களால்’புரதம் தயாரிக்க முடியாது.
காரணம் (R ) : நைட்ரஜன் குறைபாட்டால் புரதம் தயாரிக்க முடியவில்லை. சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (A) மற்றும் (R ) சரியானவை
B) (A) சரி (R )தவறு
C) (A) தவறு (R )சரி
D) (A) மற்றும் (R )தவறானவை
9. உயிரி பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள்
A) சோள மாவு, உருளைக்கிழங்கு, தாவர எண்ணெய் மற்றும் கொழுப்பு
B) அதிக அடர்த்தி பாலிஎத்திலீன், குறை அடர்த்தி பாலிஎத்திலீன்
C) பாலிபுரொப்பிலீன், பாலிவினைல் குளோரைடு
D) 1,3-பியூட்டாடையீன், அக்ரிலோநைட்ரைல்
10. மான்ட்ரியல் உடன்படிக்கை மூல வரைவு______உடன் தொடர்புடையது.
A) உயிர்பல்வகைமை பாதுகாத்தல்
B) ஓசோன் அடுக்கு பாதுகாத்தல்
C) வனவிலங்கு பாதுகாத்தல்
D) பேரிடர் மேலாண்மை
11. புதுப்பிக்கத்தகாத ஆற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
A) காற்று
B) எளிபொருள் அல்லது தாது
C) சூரிய ஒளி
D) நீர்
12. கீழ்வருவனவற்றுள் எந்த ஆஞ்சியோஸ்பெர்மின் குணம் ஜிம்னோஸ்பெர்மிலிருந்து வேறுபட முக்கிய பங்கு வகிக்கிறது?
A) சைலத்தில் உள்ள குழாய்கள்
B) ஃபுளோயத்தில் உள்ள துணைச் செல்கள்.
C) விதைகள் கனிகளால் மூடப்பட்டிருக்கும்
D) அழகான அல்லிகளைக் கொண்ட மலர்கள்
13. அலியுரான் மணிகள் எனப்படுபவை
A) எண்ணெய் உடலங்கள்
B) ஸ்டார்ச் உடலங்கள்
C) கொழுப்பு திவலைகள்
D) புரோட்டீன் உடலங்கள்
14. பின்வருவனவற்றுள் எது ‘உயிரியலாளர்களின் சொர்க்கம்’ என்று கருதப்படுகிறது?
A) நீலகிரி
B) சுந்தர்பன்ஸ்
C) மன்னார் வளைகுடா
D) நந்தா தேவி
15. இனசெல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டைமய செல் இவற்றுள் எது?
A) முதன்மை துருவ உறுப்பு
B) ஸ்பெர்மாட்டிட்
C) ஸ்பெர்மட்டோகோனியா
D) இரண்டாம் நிலை துருவ உறுப்பு
16. வரிசை I, உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க வரிசை 1 வரிசை II
a) கிளைகாலிசிஸ் -1) ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
b) கிரெப் சுழற்சி -2) ATP கள் உருவாகின்றன
c) எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி. -3) பைருவிக் அமில ஆக்சிஜனேற்றம்
d)நொதித்தல் -4) சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது
17. பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க :
I. தாளோபைட்டா -ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள்
II. டிரக்கியோபைட்டா-வாஸ்குலார் திசுக்கள் உடைய அனைத்து தாவரங்கள்
III. பிரையோபைட்டா-லிவர்வோட்ஸ் மற்றும் பூஞ்சைகள்
IV.டெரிடோபைட்டா -மாஸ்கள் மற்றும் காளான்கள் மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
A) III மற்றும் IV
B) I மற்றும் II
C) I மற்றும் IV
D) II மற்றும் III
18. கடல்நீரின் மேற்பரப்பை செந்நிறமாக மாற்றும் தாவர வகை
A) டைனோப்லாஜிலேட்ஸ்
B) தங்க நிற கடல்பாசி
C) பச்சை நிற கடல்பாசி
D) சிவப்பு நிற கடல்பாசி
19. வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டுத்தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I வரிசை ll
a)குளோரோப்ளாஸ்ட் -1. கிரப் சுழற்சி
b) ரைபோசோம். -2.ஆட்டோலைசிஸ்
c) லைசோசோம் -3 புரதச் சேர்க்கை
d) மைட்டோகாண்ட்டிரியா-4. ஒளிச்சேர்க்கை
குறியீடுகள் :
A)4 3 2 1
B)2 3 4 1
C)3 4 1 2
D)4 1 2 3
20. இருவித்திலை தாவரங்களின் பண்புகளை கருத்தில் கொள்க.
I) இலைகள் இணைப்போக்கு நரம்பமைப்பு உள்ளவை.
II) வாஸ்குலர் கற்றைகள் திறந்தவை.
III) மூன்று அங்க மலர்களைக் கொண்டவை.
IV) விதைகள் இருவித்திலைகளை உடையவை. மேலே குறிப்பிட்டுள்ள கருத்துகளில் எவை சரியானவை?
A) I மற்றும் III
B) II மற்றும் III
C) II மற்றும் IV
D) l மற்றும் IV
21. பொருத்துக :
a) விளக்கெண்ணெய் -1. சிசாமம் இண்டிகம்
b) நல்லெண்ணெய் -2. அசாடிரெக்டா இண்டிகா
c) வேப்ப எண்ணெய் -3. அராக்கிஸ் ஹைபோஜியா
d) கடலை எண்ணெய் -4. ரெசினஸ் கம்யூனிஸ்
A)1 3 4 2
B)3 2 1 4
C)4 1 2 3
D)2 4 3 1
22. தாவர மரபுத் தொழில் நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
A) க்ளாஸ்டிரிடியம் செப்டிகம்
B) சேந்தோமோனாஸ் சிட்ரை
C) பேசில்லஸ் கோயாகுலன்ஸ்
D) அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
23. மண் அரித்தலை தடுக்கும் காரணிகள்
A) அதிக மேய்ச்சல்
B) உயிர்காரணிகள் நீக்கம்
C) காடுகள் வளர்ப்பு
D) காடுகள் அழித்தல்
24. கார்போஹைட்ரேட்டின் சுவாச ஈவு
A) ஒன்று
B) ஒன்றை விட அதிகம்
C) ஒன்றை விட குறைவு
D) முடிவிலி
25. காற்று சுவாசத்தில் உற்பத்தியாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
A) 3
B) 36
C) 38
D) 30
26. ஒளிச்சுவாசம் மூன்று செல் நுண்ணுறுப்புகளில் நடைபெறுகிறது அவை எவை ?
A)பசுங்கணிகங்கள், மைட்டோகாண்ட்ரியாக்கள்,பெராக்ஸிசோம்கள்
B) லைசோசோம், பசுங்கணிகங்கள், பெராக்ஸிசோம்கள்
C)கால்ஜி,மைட்டோகாண்ட்ரியாக்கள், பசுங்கணிகங்கள்
D) லைசோசோம், பெராக்ஸிசோம்கள், மைட்டோ காண்ட்ரியாக்கள்
27. காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம்இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
A) கிளைக்காலைஸிஸ்
B) கிரப்ஸ் சுழற்சி
C) ஆல்கஹால் உருவாதல்
D) லாக்டிக் அமிலம் உருவாதல்
28. கரிமதிசுவியல் என்பது பின்வருபவற்றுள் எவற்றை விளக்குவதாகும்?
A) ஹிஸ்டோன்ஸ்
B) செல்கள்
C) திசுக்கள்
D) நுண்ணுறுப்புகள்
29. வெங்காயத்தில் உணவானது எவ்வாறு சேமிக்கப்பட்டுள்ளது?
A).சர்க்கரை
B) புரதம்
C) செல்லுலோஸ்
D) அல்கலாய்டு
30. பழம் மற்றும் பூக்களின் அழகிய நிறத்திற்குக் காரணம்
A) குரோமோபிளாஸ்ட்
B) குளோரோபிளாஸ்ட்
C) அமைலோபிளாஸ்ட்
D) லுயுக்கோபிளாஸ்ட்
31. கிளைக்கோலிசிஸ் படிநிலைகளில் எண்களால் குறிக்கப்பட்ட வேதிப் பொருள்களைக் கண்டுபிடி.
குளுக்கோஸ் → (1) → (2) → ஃப்ரக்டோஸ் 1,6 பிஸ்பாஸ்பேட்
A) (1) பைருவேட் (2) சிட்ரேட்
B) (1) குளுகோஸ்-6-பாஸ்பேட் (2) பைருவேட்
C) (1) குளுகோஸ்-6-பாஸ்பேட் (2) ஃப்ரக்டோஸ் -6-பாஸ்பேட்
D) (1) பாஸ்போகிளிசரேட் (2) கிளிசரிக் அமிலம்
32. சதுப்பு நிலத் தாவரங்களில் சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளருகின்றன. இவைகள் ____ வேர்கள் என அழைக்கப்படும்.
A) சுவாசிக்கும் வேர்கள்
B) தூண் வேர்கள்
C) ஒட்டுண்ணி வேர்கள்
D) தொற்று வேர்கள்
33. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையங்கள் என்று அழைக்கப்படுகிறது.
காரணம் (R): சுவாசித்தலின் போது உணவு ஆக்ஸிகரணம் அடைய தேவையானநொதிகள் மைட்டோகாண்ட்ரியாவில் உள்ளன.மேலும் ATP மூலக்கூறுகள் வடிவில் ஆற்றல் வெளிப்படுகிறது.
A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது(A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது(A) விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
D) (A) தவறு ஆனால் (R) சரி
34. சுவாசித்தலில் Co, வெளியேற்றப்படும் அளவிற்கும், ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ளப்படும் அளவிற்குமான விகிதம் இவ்விதமாக அழைக்கப்படும்.
A) ஒளிச்சுவாசம்
B) சுவாச ஈவு
C) பாஸ்பாரிலேஷன்
D) ஆக்ஸிகரணம்
35. கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரி/ தவறு எது/ எவை? 1. நைட்ரோஜினஸ் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ள இடங்களில் வாழும் தாவரங்கள் சிறு பூச்சிகளைப் பிடித்து ஜீரணிக்கின்றன. இவை பூச்சி உண்ணும் தாவரங்கள் ஆகும். 2. இத்தாவரங்கள் இலைகளையும் வேர்களையும் பெற்றுள்ளதால் மேற்கூறிய ஒழுங்கற்ற உணவு முறையைப் பகுதி அளவே சார்ந்துள்ளன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 1 மற்றும் 2 சரி
D) 1 மற்றும் 2 தவறு
36. பொருத்துக :
(a) வளர்சிதை மாற்றம். -1. சுவாசம்
(b) ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரீகரணம் -2. ஒளிச்சேர்க்கை
(c) ஆக்ஸின்கள் -3. நொதிவினைகளின் கூட்டுத் தொகை
(d) நீரின் ஒளிப்பிளத்தல். -4.வளர்ச்சி
A)2 3 4 1
B)4 2 1 3
C)3 1 4 2
D)3 4 2 1
37. தாவர செல்லின் சைட்டோபிளாசத்தின் உட்புறம் எந்த சவ்வு அல்லது உறையால் முடிவுற்றிருக்கிறது?
A) பிளாஸ்மா சவ்வு
B) டோனோபிளாஸ்ட்
C) பிளாஸ்மா டெஸ்மேட்டா
D) நியூக்ளியர் உறை
38. பின்வருவனவற்றுள் தாவரங்களின் பொதுவான சுவாசத் தளப் பொருளாவது யாது?
A) புரதங்கள்
B) லிபிடுகள்
C) கார்போஹைட்ரேடுகள்
D) கொழுப்பு அமிலங்கள்
39. தாவரங்களுக்கு இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) அடால்ஃப் எங்ளர்
B) கரோலஸ் லினேயஸ்
C) டால்டன் ஹுக்கர்
D) ஜார்ஜ் பெந்தம்
40. செல்லின் ஆற்றல் நிலையம் எனப்படுவது
A) நியூக்கிளியஸ்
B) பசுங்கணிகம்
C) மைட்டோகாண்டிரியா
D) ரைபோசோம்கள்
41. ஓசோன் பற்றிய கூற்றை கூர்ந்து ஆய்க.
(i) ஓசோன் வளிமண்டலத்தில் ட்ரோபோஸ்பியர் பகுதியில் காணப்படுகிறது.
(ii) பெரும்பாலும் காணப்படும் ஓசோன் குறைப்புப் பொருட்கள் ஃப்ரியான் வாயுக்களாகும்.
(iii) ஆக்ஸிஜன் மீது சூரிய ஒளி செயல்பட்டு தொடர்ந்து சிறிதளவு ஓசோன் உற்பத்தியாகி கொண்டே உள்ளது.
(iv) ‘ஓசோன் பொத்தல்’ என்பது வளிமண்டலத்தின் மேல் காணப்படும் ஒரு உண்மையான பொத்தல். மேற்கண்டவற்றில் எது சரியான கூற்று?
A) (i), (ii), (iii), iv) அனைத்தும் சரியானது
B) (ii), (iii) மட்டுமே சரியானது
C) (i), (ii), (iii) சரியானது
D) (iii) மட்டுமே சரியானது
42. பின்வருவனவற்றில் எவை பூஞ்சான் கொல்லி?
A) சிங்க்
B) கோபால்ட்
C) போர்டாக்ஸ் கலவை
D) நைட்ரஜன்
43. கிரான்ஸ் அனாடமி எந்த தாவரங்களில் காணப்படுகிறது?
A) C3
B) C3மற்றும் C4
C) C4
D) CAM
44. கீழ்க்கண்டவற்றில், உயிர் வேதியல் ஆக்ஸிஜன் பற்றாக் குறையை அளவிடுவது எது ?
A) தொழிற்சாலை மாசுபாடு
B) காற்று மாசுபாடு
C) கழிவுப் பொருட்களின் மாசுபாடு
D) நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை உபயோகித்துநுண்ணுயிர்கள் உயிர் கழிவுகளை சிதைவடைய செய்தல்
45. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)புரோட்டோபிளாஸ்ட் என்பது செல்சுவரற்ற பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்ட செல்லாகும் ..புரோட்டோபிளாஸ்டுகள் முழுத்திறன் பெற்றவை அல்ல.
b)இரு வேறுபட்ட சிற்றினங்களின் உடலச் செல்களை இணைத்தல் மூலம், சைபிரிட்டுகளை உருவாக்கலாம்.
A) (a) சரி (b) தவறு
B) (a) மற்றும் (b) தவறு
C) (a) மற்றும் (b) சரி
D) (b) சரி மற்றும் (a) தவறு
46. பின்வரும் கூற்றினை கருத்தில் கொள்க.
கூற்று : விவசாயிகள் விவசாயத்திற்கு முன் வயல்களில் அவரை குடும்ப தாவரங்களை வளர்த்து அதை மண்ணில் சேருமாறு உழுதுவிடுகின்றனர். காரணம் : அவரை குடும்ப தாவரங்கள் வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை ‘ரைசோபியத்தின் உதவியுடன் மண்ணில் நிலைநிறுத்துகின்றது.
A)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் கூற்றுக்கு ஏற்ற சரியான விளக்கம்.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் கூற்றுக்கு ஏற்ற சரியான விளக்கமல்ல.
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D) கூற்றும் காரணமும் தவறு
47. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு வழியாக நொதித்தல் மூலம் கிடைக்கும் மொத்த நிகர லாப ATP மூலக் கூறுகளின் எண்ணிக்கை
A) 1
B) 2
C) 3
D) 4
48. DNA வில் காணப்படாத நைட்ரஜன் பேஸ்
A) அடினைன்
B) சைடோசைன்
C) யுராசில்
D) குவானைன
49. ஒட்டுண்ணித் தாவரங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உறிஞ்சிக் கொள்ள பெற்றுள்ள சிறப்பான வேர்களின் பெயர் என்ன?
A) உணர்நீட்சி
B) பற்றுவேர்
C) ஹாஸ்டோரியா
D) மட்குண்ணித் தாவரங்கள்
50. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
I. கிளைகாலிசிஸ் நிகழ்விற்கு ஆக்ஸிஜன் தேவையில்லை
II. கிளைகாலிசிஸ் நிகழ்வில் CO, வெளியேறும். மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த வாக்கியம்/வாக்கியங்கள் தவறு?
A) I மற்றும் II இரண்டும்
B) I மட்டும்
C) II மட்டும்
D) I அல்லது II