
SCIENCE TEST QUESTIONS
1. பைரித்திரம் எத்தாவர மஞ்சரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும்
A) கிரைசாந்திமம்
B) சிட்ரஸ்
C) அக்ரோபாக்டீரியம்
D) பேசில்லஸ்
2. ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி வகை
A) ட்ரூப்
B) பிளவுகனி
C) ரெக்மா
D) சூலக அறை வெடிகனி
3. சூரிய கதிர்களில் காணக்கூடிய ஒளி, ஒளி சேர்க்கைக்கான சக்தியை வழங்குகிறது. அவற்றின் அலைநீளம் குறிப்பிடுக.
A) 300 nm to 720 nm
B) 720 nm to 820 nm
C) 280 nm to 300 nm
D) 1100 nm to 1900 nm
4. மனம் மற்றும் உடல் இறுக்கத்திலிருந்து விடுபட பயன்படுத்தப்படும் ‘ ஜின்செங்’ என்ற மருந்து கிடைக்கும் தாவரம்
A) பானாக்ஸ் ஜின்செங்
B) சிங்கோனா அஃபிசினாலிஸ்
C) பப்பாவர் சாம்னிஃபெரம்
D) எஃபிட்ரா சைனிகா
5. உலகளவில் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையில் திசுவளர்ப்பு அறிவியலார்களைக் கொண்டுள்ள நாடு
A) அமெரிக்கா
B) இந்தியா
C) சீனா
D) ஜப்பான்
6. கரோலஸ் லின்னேயஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?
A) ஸ்பீஸிஸ் பிளாண்டாரம்
B) ஜெனிரா பிளாண்டாரம்
C) சிற்றினங்களின் தோற்றம்
D) டை நேச்சர்லிக்கன் ஃபிளான்ஸன்
7. தாவரம் சுவாசித்தலின் போது வெளிப்படும் வாயு
A) ஆக்ஸிஜன்
B) ஹைட்ரஜன்
C) நைட்ரஜன்
D) கார்பன்டைஆக்ஸைடு
8. ஒளிச்சேர்க்கை நடைபெறும் முக்கிய தாவர உறுப்பு
A) வேர்கள்
B) தண்டு
C) இலைகள்
D) மலர்கள்
9. குளோன் தேர்வு முறை என்பது
A) பால் முறை இன்ப்பெருக்கம்
B) தாவர இனப்பெருக்கம்
C) புறத்தோற்றத்தை அடிப்படையாக
D) ஜீன் அமைப்பினை அடிப்படையாக
10. பொருத்துக: உயிரினத்தின்பெயர் ஒற்றைமய குரோமோசோம்
(a) அரபிடாப்சிஸ் தாலியானா – 1. 7
(b) நெல் – 2. 5
(c) தோட்டப்பட்டாணி – 3. 40
(d) கரும்பு – 4. 12
A) 2 4 1 3
B) 1 2 3 4
C) 3 2 4 1
D) 4 1 2 3
11. சைட்டோகைளின் எதை ஊக்குவிக்கிறது?
A) செல் நீட்சியுறுதல்
B) கனி உருவாக்கத்தை தூண்டுதல்
C) செல் பிரிதல்
D) வேறுபாடு அடைதல்
12. எத்தாவரம் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட களைத் தாவரம் பிளாஸ்டிக்கு (பாலிஹைட்ராக்சி பியூரேட்-PHB) இயற்கையில் சிதைவுறச் செய்கிறது?
A) எலிகாது அல்லி இதழ் தாவரம்
B) சியா மேஸ்
C) ஓரைசா சட்டைவா
D) அவினா சட்டைவா
13. C⁴ தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெறு இடம்
A) இலையிடைத் திசு மற்றும் கற்றை உறைசெல்கள்
B) இலையிடைத் திசுவில் மட்டும்
C) அற்றை உறை செல்களில் மட்டும்
D) இலையின் அனைத்து பகுதிகளிலும்
14. ராவனெலா மடகாஸ்கரியென்ஸிஸ் தாவரத்தின் மஞ்சரி
A) கூட்டு சைம்
B) கூட்டு ரெசிம்
C) கிளைத்த ஸ்பேடிக்ஸ்
D) தனித்த ரெசீம்
15.’ பயணிகளின் பனை ‘ என அழைக்கப்படுவது
A) மியூஸா பாரடிஸியாகா
B) ஸ்டெரிலிட்சியா ரெஜினோ
C) ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ்
D) ஹெலிகோனியா சிற்றினம்
16. முளைத்தலுக்கு ஒளித் தேவைப்படும் விதைகள், முழு இருளிலேயே முளைக்கதூண்டும் ஹார்மோன்
A) ஆக்ஸின்
B) எத்திலின்
C) ஜிப்ரலின்
D) சைட்டோகைனின்
17. இது ஒரு உயிரற்ற திசுவாகும்
A) பாரன்கைமா
B) கோலன்கைமா
C) ஸ்கிளீரன்கைமா
D) குளோரன்கைமா
18. மையவிலக்கல் முறையின் போது கீழ்க்கண்டவற்றில் எது கடைசியாக படியக்கூடியது
A) நியூக்ளிய்
B) ரிபோசோம்
C) மைட்டோகாண்டிரியா
D) குளோரோபிளாஸ்ட்
19. போட்டோட்ரரப்பிஸம் என்றால் என்ன?
A) செடிகளின் வேதி பொருள் நோக்கிய இயக்கம்
B) செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்
C) செடிகளின் மண் நோக்கிய இயக்கம்
D) செடிகளின் ஒளி காலத்து வினை
20. உயர்வகை தாவரங்களின் ஸ்போரோபைட்டிக் நிலை சைகோட்டின் வளர்ச்சி மாற்றத்தால் உருவாகிறது.எந்த வகை செல் பிரிவு இதில் செயல்படுகிறதுஎன்பதை சுட்டிக்காட்டு
A) மைட்டாஸிஸ்
B) மியாஸிஸ்
C) ஏமைட்டாஸிஸ்
D) சைகோட்டிக் மியாஸிஸ்
21. திசு என்பது
A) தனி செல்
B) இரண்டு செல்கள்
C) செல்களின் தொகுப்பு
D) மூன்று செல்கள்
22. குளாவர் இலை வடிவத்தைக் கொண்டுள்ள RNA
A) tRNA
B) sRNA
C) mRNA
D) rRNA
23. குரோமோசோமின் நுனிப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) சாட்டிலைட்
B) சென்ட்ரோமியர்
C) டீலோமியர்
D) கைனட்டோகோர்
24. tRNA வின் குளாவர் இலை வடிவ மாதிரியை வெளியிட்டவர்
A) R.W. ஹோலி
B) வாட்சன் மற்றும் கிரிக்
C) வில்கின்ஸ் மற்றும் ஃபிரான்கிளின்
D) மீசில்சன் மற்றும் ஸ்டால்
25. குள்ஸ் குழாய் எந்த நிகழ்வை நிரூபிக்கும்
A) நொதித்தல்
B) விதை மூளைத்தல்
C) தாவர வளர்ச்சி
D) காற்றுடைய சுவாசித்தல்
26. சூழ்நிலை மண்டலத்தின் மாசுக்களை காட்டும் உயிருள்ளவை இவை
A) ஒட்டுண்ணிகள்
B) சாறுண்ணிகள்
C) பூஞ்சை
D) லைக்கன்ஸ்
27. கீழ்க்கண்டவற்றுள் எது’ நீல தாமிரப் புரதம் ‘கிடையாது?
A) ஸ்டெல்லாசயனின்
B) ஃபெர்ரிட்டின்
C) பிளாஸ்டோசயனின்
D) அஜுரின்
28. பூச்சியுண்ணும் தாவரங்களின் தகவமைப்பானது முதன்மையாக மண்ணில் குறைந்த அளவு இருப்பதை ஈடுசெய்வதற்காக
A) பொட்டாசியம்
B) நைட்ரஜன்
C) பாஸ்பேட்
D) கால்சியம்
29. கீழ்க்கண்டவற்றில் வளிமண்டல மாசுகாட்டி எது?
A) செதில் இறக்கை
B) லைகோபெர்சிகான்
C) மரப்பாசிகள்
D) லைக்கோப்போடியம்
30. ப்ரோகேரியாட்டிக் செல் குறித்து எது உண்மை இல்லை?
A) மைட்டாசிஸ் செல் பகுப்பு கிடையாது
B) குரோமோசோம்களில் டி.என்.ஏ.- வுடன் புரதம் இணைந்திருப்பதில்லை-
C) மைட்டோகாண்ட்ரியா போன்ற செல் உறுப்புகள் இருப்பதில்லை
D) சவ்வினால் சூழப்பட்ட உட்கரு
31. C⁴, வழித்தடம் மூலம் கரியமில வாயு நிலை நிறுத்துதலை கண்டறிந்தவர்
A) ஆர்னான்
B) ஹேட்ச் மற்றும் ஸ்லாக்
C) கால்வின்
D) ஹில்
32. தேயிலையானது கொதிக்கும் நீரில் அதிக நேரம் வைத்திருந்தால் கசப்புத் தன்மையை பெறக் காரணம்
A) ஆவியாகக்கூடிய எண்ணெய் இலையிலிருந்து வெந்நீரில் கரைவதால்
B) டேனின் (டானின்) வெந்நீரில் கரைவதால்
C) தீயின் வெந்நீரில் கரைவதால்
D) இலையின் குறைபாடு காரணமாக
33. புரதங்களை நீராற்பகுக்கும் போது கிடைப்பது
A) æ -அமினோ அமிலம் மட்டும்
B) B-அமினோ அமிலம் மட்டும்
C) y- அமினோ அமிலங்கள் மட்டும்
D) அனைத்து அமினோ அமிலங்களும்
34. தாவரங்களில் சேமிக்கப்படக்கூடிய கார்போ ஹைட்ரேட்டாகவும், உணவில் ஆற்றலின் முதன்மை ஆதாரமாகவும் விளங்குவது
A) ஸ்டார்ச்
B) குளுகோஸ்
C) கிளைகோஜன்
D) செல்லுலோஸ்
35. கொடுக்கப்பட்டுள்ள பொருளாதார முக்கியத்துவம் பெற்ற தாவரங்களின் அறிவியல் பெயரினை கண்டறிக.
a) பருத்தி – 1. கர்குமா டொமஸ்டிகா
b) மஞ்சள் – 2. விதாளியா சோமினி பெர்ரா
c) அஸ்வகந்தா – 3. காசிபியம் ஹெர்பேசியம்
d) இந்தியா ரோஸ்வுட் – 4.கெமெலியா சைனைன் சிஸ்
e) தேயிலை – 5. டால்பர்ஜியா லேடிபோலியா
A) 3 1 2 5 4
B) 3 1 2 4 5
C) 3 2 1 5 4
D) 3 4 5 2 1
36. சில கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களில் உருவாகும் அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட பொருட்களானது
A) கிரானுயூல்கள்
B) குளோபுயூல்கள்
C) எண்டோஸ்போர்கள்
D) பிளாஸ்மிட்
37. நொதித்தல் இதற்கு இணையானதாகும்.
A) காற்றுச் சுவாசம்
B) காற்றிலாச் சுவாசம்
C) ஒளிச்சேர்க்கை
D) நீராவிப்போக்கு
38. செல் சுவர் உருவாகும் போது டீலோபேஜ்நிலையில் செல் பகுப்படையும் போது தோன்றும் சிறுமணி போன்ற அமைப்பிற்கு
A) பிளாஸ்மா டெஸ்மேட்டா
B) பிராக்மோபிளாஸ்ட்
C) சிம்பிளாஸ்ட்
D) அபோ பிளாஸ்ட்
39. கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
(a) நீ கரோட்டின் – 1. தானியங்கள்
(b) செம்பு – 2. பப்பாளி
(c) இரும்பு. – 3.காளான்கள்
(d) செலினியம் துத்தநாகம் – 4. பருப்பு
A) 1 3 4 2
B) 2 3 4 1
C) 3 4 2 1
D) 4 3 2 1
40. தூண்டப் பட்ட திடீர் மாற்றத்தை முதலில் ஏற்படுத்தியவர்
A) ஹீயூகோ டி விரிஸ்
B) டி.எச். மார்கன்
C) மெண்டல்
D) எச்.ஜெ.முல்லர்
41. காற்றுச் சுவாசத்தில் அநேக அளவு ஆற்றல் இதில் உற்பத்தி செய்யப்படுகிறது.
A) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி
B) இனிப்பு பிளத்தல்
C) கிரெப் சுழற்சி
D) பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
42. நீர்வாழ்த் தாவரங்கள், தமது அநேக வளர்சிதைமாற்றக் கழிவுகளை மூலம் அவற்றின் சுற்றுப்புறத்தில் இழக்கிறது.
A) ஆவியாதல் மூலம்
B) அயனிகளுடன் சேர்ந்து எறிவதன் மூலம்
C) நேரடியான பரவல் மூலம்
D) கால இடைவெளியில் அவற்றின் பாகங்கள் கீழே விழுவதன் மூலம்
43.கானான்ஸ், ரெஸ்பிரோமீட்டர் எதை அளவிட்டு காட்டும்?
A) ஒளிச்சேர்க்கை திறன்
B) சுவாச மூலக்கூறுகளின் R.Q.
C) Q10 ன் சுவாச வளர்சிதை மாற்றம்
D) சுவாசித்தலின் CO2 வெளிவிடும் அளவு
44. மைட்டோகான்டிரீயாக்களை ஏன் சக்தி (அல்லது) ஆற்றல் வீடுகள் என்று அழைக்கப்படுகிறது?
A) சக்திமிக்க ATP யை வழங்குவதால்
B) தேவையான CO, வழங்குவதால்
C) ஒளிச்சிதைவிலிருந்து செல்கள் பாதுகாப்பதால்
D) தன்னைத்தானே தின்னும் குமிழிகளாகச் செயல் படுவதால்
45. கடல் சுற்று சூழலின் முதன் நிலை தயாரிப்பாளர்கள் யாவை?
A) கடல் அனிமோன்
B) கடல் புற்கள்
C) பைட்டோபிளாங்டன்கள்
D) மிதவை பிராணிகள்
46. ஒரு குளுக்கோஸ் கிரப்ஸ் சுழற்சி மூலம் சிதைக்கப் படும்பொழுது எத்தனை ATP மூலக்கூறுகளை கொடுக்கிறது?
A) 30
B) 38
C) 4
D) 8
47. ‘ தேவதூதர்களின் கனி’ என குறிப்பிடப்படுவது
A) மா
B) பலா
C) வாழை
D) பப்பாளி
48. நியூரோஸ்போரா பூஞ்சையானது, எந்த படிப்பிற்கு ஆய்வு பொருளாக அதிக அளவில் பயன்படுகிறது?
A) உடல் செயலியல்
B) நோயியல்
C) செல்லியல்
D) மரபியல்
49. இணைவு வாழ்க்கை மேற்கொள்ளும் இரண்டு உயிரினங்களுக்கிடையே உள்ள உறவில்
A) இரண்டும் நேரடியாக இணைந்து வாழும்
B) இரண்டும் பயன் பெறும்
C) ஒன்று பயனாளி மற்றொன்று உதவியும் செய்யாது தீங்கும் விளைவிக்காது
D) ஒன்று பயனாளி மற்றொன்று தீங்கானது
50. தாவர வளர்ச்சிக்கு தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துக்கள்
A) N, P, K
B) Ca, Mg, Fe
C) Mn, Zn, Cu
D) C, H, O