Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 43
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. இயற்கை தேர்வு கொள்கையை வெளியிட்டவர் யார்?

A) லமார்க்

B) லின்னேஸ்

C) ஹுக்கர்

D) சார்லஸ் டார்வின்

 

 

2. கீழ்க்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியானதைத் தேர்வு செய்க.

கூற்று (A) : ஜீன்களுக்கும் நொதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பினை பீடில் மற்றும் டாட்டம் என்பவர்கள் நியூரோஸ்போரா என்ற பூஞ்சையில் கண்டறிந்தனர்

காரணம் (R) : இந்த அரிய கண்டு பிடிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்.

B) (A) மட்டும் சரி (R) தவறு

C) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

D) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமல்ல.

 

 

3. பன்னிரெண்டாவது அகில உலக தாவரவியல் கூட்டம் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின் கிராட் என்னுமிடத்தில் ஜூலை ________ ஆம் ஆண்டு கூடியது.

A) 1930 

B) 1976 

C) 1975 

D) 1965

 

4. யூக்கலிப்டஸ் மரங்களின் பூர்வீகம் எது ?

A) ஆசியா

B) அண்டார்டிகா

C) ஆப்பிரிக்கா

D) ஆஸ்திரேலியா

 

 

5. ஒடுக்கப்பட்ட இலைகள் மற்றும் மறைவிட இலைத்துளைகள் எவற்றின் குணாதிசயப் பண்புகளாகும்.

A) தொற்றுத் தாவரங்கள்

B) நீர்வாழ்த் தாவரங்கள்

C) இடைநிலைத் தாவரங்கள்

D) வறள் நிலத் தாவரங்கள்

 

 

6. தாவரத்தில் தொடு உணர்வால் நேரிடக் கூடிய அசைவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) திக்மோடிராபிக் அசைவு

B) ஹைட்ரோடிராபிக் அசைவு

C) கீமோடிராபிக் அசைவு

D) ஏரோடிராபிக் அசைவு

 

 

7. I. ஓபிலியாவின் பாலிப்கள் நகர முடியாததாகவும் ஒட்டிக் கொண்டும் காணப்படும்

II. ஒபிலியாவின் முதிர்ந்த மெடுசா – தனியாக நீந்தக் கூடியவை

மேற்கூறிய கூற்று சரியா ? தவறா ?

A) (I) மட்டும் சரி

B) (II) மட்டும் சரி

C) (I) மற்றும் (II) சரியானவை

D) (I) மற்றும் (II) தவறானவை

 

 

8. _______ ஒன்று அல்லது பல கூட்டுச் சிற்றினங்களைக் கொண்ட, கலப்பினக் கலவி செய்யாத தாவரக் குழுவாகும்.

A) குடும்பம்

B) கம்பேரியம்

C) ஹெர்பேரியம்

D) சூழ்நிலைச் சிற்றினம்

 

 

9. விண்வெளிப் பயணத்தின் போது கார்பன்- டை – ஆக்ஸைடு மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் ஆல்கா எது?

A) வால்வாக்ஸ்

B) குளோரேல்லா

C) யூடோரைனா

D) கிளாமிடோமோனஸ்

 

 

10. கிளைக்காலிஸிஸ்-வினைகள் நடைபெறுவது

A) மைட்டோகான்ட்ரியாவில் மற்றும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில்

B) பசுங்கணிகத்தில் மற்றும் ஆக்சிஜன் தேவையில்லாத நிலையில்

C) சைட்டோபிளாசத்தில் மற்றும் ஆக்சிஜன் தேவையில்லாத நிலையில்

D) பெராக்சிஸோமில் மற்றும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில்

 

 

11. மாங்குருவ் தாவரங்கள் மண்ணிலுள்ள அதிகப் படியான ஆஸ்மாடிக் அழுத்தத்தை எதிர் கொள்கின்றன. நீர் உறிஞ்சுதலை சரிசெய்ய அவைகள்

A) எலக்ட்ரோலைட்டுகளை செல்லின் காற்று வெற்றிடங்களில் குவிக்கின்றன.

B) வேர் மற்றும் தண்டு விகிதத்தை அதிகரிக்கின்றன.

C) சுவாச அளவை குறைக்கின்றன.

D) நீராவிப் போக்கின் அளவை குறைக்கின்றன

 

 

12. ஒளிச்சேர்க்கையின்’ கால்வின் சுழற்சியில் RUBP ஒரு கார்பன்டையாக்ஸைடு (CO2) நிலை நிறுத்தப்படும் போது பயன்படுத்தப்படும் ATP மற்றும் NADPH2 யாது?

A) 1 ATP மற்றும் 1 NADPH2

B) 2 ATP மட்டும்

C) 2 NADPH2 மட்டும்

D) 3 ATP மற்றும் 2 NADPH2

 

 

13. சொலானம் நைக்ரம் சொலானேசி குடும்பத்தைச் சார்ந்தது. அகாலிபா இண்டிகா – யூபோர்பியேசி குடும்பத்தை சார்ந்தது. சிசஸ் குவாட்ராங்குலாரிஸ் எந்த குடும்பத்தைச் சார்ந்தது?

A) வைட்டேசி

B) வெர்பிளேசி

C) வையோலேசி

D) ரூட்டேசி

 

 

14. மகரந்த குழாய் வளர்ச்சியடைந்து சூல் தண்டினை நோக்கி வருவதற்கு

A) நீர்நாட்டம்

B) உள்றெதிருணர்வு இயக்கம்

C) பற்று நாட்ட இயக்கம்

D) வேதி நாட்டம்

 

 

15. காற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப் பெறுவது

A) அசிடைல் Co-A 

B) எத்தில் ஆல்கஹால்

C) பைருவிக் அமிலம் 

D) சக்சினிக் அமிலம்

 

 

16. கோல்டன் அரிசி என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆகும். இதில் ஒருங்கிணைந்த மரபனு உயிரிய செறிவுக்கானது

A) விட்டமின் A

B) விட்டமின் B

C) விட்டமின் C

D) விட்டமின் D

 

 

17. பின்வருவனவற்றில் எந்த தாவரம் இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்டக் கூடியது?

A) மஞ்சள்

B) துளசி

C) எலுமிச்சம் புல்

D) கடுகு

 

 

18. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை மரபுசாரா உற்பத்தி பொருளாக காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.

A) மூங்கில்

B) சவுக்கு

C) கரும்பு சக்கை

D) யூகலிப்டஸ்

 

 

19. பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) விதை ஒரு வித்திலையை கொண்டது

B) இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது

C) சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது

D) ஐந்தங்க மலர் காணப்படுகிறது

 

 

20. பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?

I. தெளிவான உட்கரு கிடையாது.

II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது

III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது

IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது

A) I மற்றும் II சரி

B) I மற்றும் IV சரி

C) II மற்றும் III சரி

D) III மற்றும் IV சரி

 

 

21. மாலிஸ்ச் சோதனை _________ ஐ கண்டுபிடிக்க பயன்படுகிறது.

A) அமினோ அமிலம் 

B) புரோட்டீன்

C) கார்போஹைட்ரேட்

D) நியூக்ளிக் அமிலம்

 

 

22. தாவர செல்களில் மட்டும் இருக்கும் நுண்ணுறுப்பு எது?

A) பெராக்ஸிசோம்

B) கிளையாக்ஸிசோம்

C) டெஸ்மோசோம்

D) ரைபோசோம்

 

 

23. தாவரங்களில் கழிவு பொருளாதார சிஸ்டோலித் எனப்படுவது இவ்வாறு பொதுவாக அழைக்கப்படும்

A) கால்சியம் கார்பனேட் படிகங்கள்

B) கால்சியம் ஆக்ஸலேட் படிகங்கள்

C) ஸ்டெல்லாட் கால்சியம் ஆக்ஸலேட் படிகங்கள்

D) கொத்தான படிகங்கள்

 

 

24. பட்டியல் ஒன்றுடன் (வண்ணக் கணிகங்கள்) பட்டியல் இரண்டை (நிறமிக்கூறுகள்) பொருத்தி கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க

பட்டியல் I                     பட்டியல் II

a) பசுங்கணிகங்கள்.     – 1) ஃபைகோசயனின்

b) பழுப்புக்கணிகங்கள் – 2) ஃபைகோஎரித்ரின்

c) சிவப்புக்கணிகங்கள் – 3) ஃப்யூகோசாந்தின்  

d) நீலப் பச்சை வண்ணக் கணிகங்கள் – 4) பச்சையம் ஏ மற்றும் பி

A) 2 3 1 4

B) 3 2 4 1

C) 4 3 2 1

D) 4 2 1 3

 

 

25. பின்வருவனவற்றுள் சில மரங்களில் காணப்படக்கூடிய ஒட்டும் தன்மையுள்ள, நீரில் கரையக்கூடிய கழிவுப்பொருள் எது?

A) கோந்து

B) கஃபீன்

C) டானின்கள்

D) இன்றியமையாத எண்ணெய்கள்

 

 

26. உயிர் தொடர்புவியலில், செல்களுக்கு உள்ளேயான தகவல் தொடர்பு என்பது

A) செல்லிற்கு ‘உள்ளேயும், செல்களுக்கு இடையேயும் ஏற்படுகிற தொடர்பாகும்.

B) ஒரே மாதிரியான தாவரங்களிலும், வேறுபட்ட தாவரங்களுக்கு இடையே ஏற்படும் தொடர்பாகும்.

C) பாக்டீரியங்களுக்கு இடையே காணப்படுகிற தொடர்பாகும்.

D) நீரின் அழுத்தத்தினால் ஏற்படுகிற தொடர்பாகும்.

 

 

27. மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

A) உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது

B) மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது

C) ‘2n’ குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது

D) இரு இருமயசெல்கள் தோன்றுகின்றன

 

 

28. கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்

A) வேறுபட்ட செல் சேர்க்கை

B) மாறுபட்ட செல் சேர்க்கை

C) இளம் செல் சேர்க்கை

D) முழு சேர்க்கை

 

 

29 . தவறான இணை/இணைகளைக் கண்டுபிடி:

1. வளர்சிதை மாற்றம் – ஓட்டுமொத்த நொதிகளின் வினைகள்

2. ஆக்ஸின் – ஒளிச்சேர்க்கை

3. நீரின் ஒளிப்பிளத்தல் – வளர்ச்சி

4. ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரீகரணம் – சுவாசம்

A) 1 மற்றும் 2

B) 2 மட்டும்

C) 2 மற்றும் 3

D) 3 மற்றும் 4

 

 

30. இவற்றுள் எந்த தாவரம் ‘எண்ணெயினை விலக்கும் திறன்’ உடையது?

A) புகையிலை

B) சோளம்

C) செம்பருத்தி

D) கற்றாழை

 

 

31. ஃபிளாவனாய்டுகள் பொதுவாக திரண்டு காணப்படுவது இதில்

A) குளோரோபிளாஸ்ட் 

B) குரோமோபிளாஸ்ட்

C) வாக்குயோல் 

D) சிஸ்டால்

 

 

32. சீனாவிலிருந்து நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் தற்போது பஞ்சாபில் No.1 வகையாக பயிரிடப்படுகிறது? அத்தாவரத்தின் பெயர்

A) பேஸியோலஸ் முங்கோ

B) சீயாமேஸ்

C) சொலானம் டியூபரோஸம்

D) லைகோபெர்சிகம் எஸ்குலாண்டம்

 

 

33. கூற்று : இன்னும் சில ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து சென்னை போன்ற கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

காரணம்: அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டால் கண்ணாடி வீடு விளைவு ஏற்படுவதால்

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று சரி காரணம் சரி

C) கூற்று தவறு காரணம் சரி

D) கூற்று தவறு காரணம் தவறு

 

 

34. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக. குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :

 பட்டியல் I                 பட்டியல் II 

a) குளோரைடு – 1. பிளாஸ்டோசயனின் உட்பொருள்

b) ஜிங். – 2. ஒளிப்பிளத்தலின் நொதி செயல்படுவதற்கு

c) காப்பர் – 3. சர்க்கரை இடர் பெயர்விற்கு இன்றியமையாதது

d) போரான். – 4. IAA உயிரியல் சேர்க்கைக்கு முக்கியமானது

A) 2 4 3 1

B) 2 4 1 3

C) 4 2 3 1

D) 4 3 2 1

 

 

35. எண்டோஸ்போர் உருவாக்கம் காணப்படுவது

A) பாசிகள்

B) பூஞ்சைகள்

C) பாக்டீரியாக்கள்

D) வைரஸ்கள்

 

 

36. அந்தி மந்தாரை மலர் பகலில் மூடி இரவில் மலர்ந்து இருக்கும் நிகழ்விற்கு

A) ஒளி வளர்ச்சி

B) மேல் பக்க வளர்ச்சி

C) அடிப்பக்க வளர்ச்சி 

D) இரவு வளர்ச்சி

 

 

37. கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

தாவரங்கள் அசைவுகள்

a) தொட்டால் சிணுங்கி – 1. ஃபோட்டோனாஸ்டிக் அசைவு

b) மலைப்புளிச்சான். – 2. சிஸ்மோனாஸ்டிக் அசைவு

c) டிரோசிரா. – 3. தெர்மோனாஸ்டிக் அசைவு

d) துலிப் – 4. திக்மோனாஸ்டிக் அசைவு

A) 2 1 4 3

B) 4 2 1 3

C) 2 3 1 4

D) 3 1 2 4

 

 

38. C3 தாவரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு

A) மக்காச்சோளம்

B) கரும்பு

C) ட்ரிபுலஸ்

D) கோதுமை

 

 

39. C4 தாவரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு

A) கரும்பு 

B) உருளை

C) கோதுமை

D) நெல்

 

 

40. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:

உயிரினத்தின் பெயர் செயல்

a) BGA மற்றும் ரைசோபியம் – 1. அமோனியமாக்கல்

b) பாக்ட்ரீயா மற்றும் பூஞ்சைகள் – 2. நைட்ரஜன் நிலை நிறுத்தல்

c) சூடோமோனாஸ் பாக்ட்ரீயா – 3. நைட்ரிபிகேஷன்’

d) நைட்ரோ பாக்ட்ரீயா. – 4. டி-நைட்ரிபிகேஷன்

A) 2 1 4 3

B) 2 1 3 4

C) 2 3 4 1

D) 2 3 1 4

 

 

41. ஃபைட்டோ பிளாங்டன் உற்பத்தி குறையக் காரணம்

A) ஹைட்ரோ கார்பன்களை எரித்தல்

B) காடுகளின் அழிவு

C) ஓசோன் படல சீரழிவு

D) வானிலை மாற்றப்படுதல்

 

 

42. கீழ்க்கண்ட தாவரங்களில் எது குறுகிய பரவு நிலையைக் கொண்டது?

A) ஜிங்கோ

B) யூகலிப்டஸ்

C) தேக்கு

D) வேம்பு

 

 

43. R.H. விட்டேக்கர் என்பவர் அனைத்து உயிரினங்களையும் ___________ உலகங்களாக வகைப்படுத்தினார்.

A) 2

B) 3

C) 4

D) 5

 

 

44. யூனிசெக்கவல்ஸ் என்ற வரிசையில் உள்ள குடும்பம்

A) சொலானேசி

B) யூஃபோர்பியேசி

C) மால்வேசி

D) மியூசேசி

 

 

45. பச்சைய நிறமிகள் உற்பத்திக்கு தேவையான தனிமம் எது?

A) ‘a’ பச்சையம்

B) ‘b’ கரோட்டினாய்டுகள்

C) மெக்னீசியம்

D) சாந்தோஃபில்

 

 

46. மோனாண்ட்ரியா வகுப்பில் ________ மற்றும் _________ குடும்ப தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

A) சிஞ்ஜிபெரேசி ; அனகார்டியேசி

B) ரூபியேசி ; ஆஸ்ட்ரேசி

C) சிஞ்ஜி பெரேசி; ஆஸ்ட்ரேசி

D) அளகார்புயேசி; ரூபியேசி

 

 

47. இயற்கையில் அமோணிகரணம் நடைபெறும் இடம்

A) ஏரி

B) கடல்

C) நதி

D) சாக்கடை

 

 

48. குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான பொருத்தத்தைத் தருக.

a) காஃபீன். – 1) புகையிலை

b) ஓபியம். – 2) காபி

c) நிகோடின் – 3) சிங்கோனா

d) குவினைன் – 4) பாப்பி

குறியீடுகள் :

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 2 4 1 3

D) 4 3 1 2

 

 

49. ஸ்போர் என்பது ஒரு

A) பரலினப் பெருக்க செல்

B) பாலிலா இனப்பெருக்க செல்

C) உடல் செல்

D) தாவரம்

 

 

50. DNA அமைப்பைக் கண்டுபிடித்தவர்

A) வாட்சன் கிரிக்

B) ஹர்கோபிந்த் குரானா 

C) லேண்ட்ஸ்டெய்னர்

D) கிரிகர் மெண்டல்

 

 

Join the conversation