Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 45
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1.பின்வரும் வகைப்பாட்டின் பொது அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக.

I. Family

II. Order

III. Species

IV. Variety

V. Genus

A) II, I, III, IV, V

B) V, IV, III, II, I

C) III, V, IV, II, I

D) IV, III, V, I, II

 

 

2.நிறக்குருட்டு பெண்ணிற்கும், இயல்பான பார்வை கொண்ட ஆணிற்கும் திருமணம் நடந்தால், இவர்கள் பெற்றெடுக்கும்

A) மகன்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்

B) மகன்கள் நிறக்குருட்டுத்தன்மை உடையவர்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்

C) மகன்கள் இயல்பான பார்வை உடையவர்கள் மற்றும் மகள்கள் நிறக் குருட்டுத்தன்மை உடையவர்கள்

D) மகன்கள் மற்றும் மகள்கள் நிறக்குருட்டுத் தன்மை உடையவர்கள்.

 

 

3. மேலண்ணச் சுரப்பி …………. ஆல் பாதிக்கப்படுகிறது.

A) A(H₁N₁) வைரஸ் 

B) ஹெபாட்டிட்டிஸ் B – வைரஸ்

C) இளம்பிள்ளை வாத வைரஸ்

D) பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்

 

 

4. வளரும் விந்து செல்களுக்கு ஊட்டம் அளிப்பது

A) செர்டோலி செல்கள்

B) இடையீட்டு செல்கள்

C) அண்ட செல்கள்

D) பாலிக்கிள் செல்கள்

 

 

5.மீடியாஸ்டீனம் எனப்படுவது?

A) நுரையீரலைச் சுற்றியுள்ள படலம்

B) இதயத்தை சுற்றியுள்ள படலம்

C) சிறுநீரகத்தை சுற்றியுள்ள படலம்

D) இரண்டு நுரையீரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி

 

 

6.பட்டியல் I ஐ, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

பட்டியல் I    பட்டியல் II  பட்டியல் III

1. டைபாய்டு ஜுரம் a) ஹீமோஃபில்லஸ் இன்ஃப்ளுயன்ஸா i) நிணநீர் நாளங்களில் நாட்பட்ட வீக்கம் 

2. நிமோனியா b) டிரைக்கோஃபைடான் ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள்

3. ஃபைலேரியாசிஸ் C) சால்மானல்லா டைபி iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது.

4. படர்தாமரை d) உச்சரேரியா மலாயி iv) குடல் ரணமாதல் 

A) 1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii

B) 1-c-iv; 2-b-ii; 3-a-iii; 4-d-i

C) 1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii

D) 1-c-iv; 2-d-ii, 3-a-i; 4-b-iii

 

 

7.மனித சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் எந்த பொருளை கொண்டுள்ளது?

A) கேல்சியம் ஆக்சலேட்

B) சோடியம் அசிடேட்

C) மேக்னிசியம் சல்பேட்

D) கேல்சியம்

 

 

8.பட்டியல் I யினை பட்டியல் Ilவுடன் பொருத்தி, கீழ்க்கண்ட விடைகளில் சரியானவற்றை குறிப்பிடுக.

a) பாக்டீரியல் நோய் 1. சிஃபிலிஸ்

b) வைரஸ் நோய் 2. காலா அசார்

c) ஒட்டுண்ணி நோய் 3.ரேபிஸ்

d) பால்வினை நோய் 4. டிஃப்தீரியா

A) 3 2 1 4

B) 4 3 2 1

C) 2 1 4 3

D) 4 2 3 1

 

 

9.கால்சியம் பாஸ்பேட் ஒழுங்குபாட்டில் ஈடுபடக் கூடிய ஹார்மோன்

A) பாரதார்மோன்

B) குளுக்கோகான்

C) தைராக்சின்

D) ஆக்ஸிடாசின்

 

 

10.இன்சுலின் ஹார்மோன் கணையத்தில் காணப்படும் இவ்வகை செல்களால் சுரக்கப்படுகின்றது

A) α – செல்கள்

B) β – செல்கள்

C) γ – செல்கள்

D) T – செல்கள்

 

 

11. பின்வரும் செரிமான நொதிகளில் உமிழ்நீரில் காணப்படுவது எது?

A) அமைலேஸ்

B) லிப்பேஸ்

C) டையலின்

D) ட்ரிப்ஸின்

 

 

12. ஒரு விந்துவின் மத்திய பகுதியில் உள்ளது

A) நியூக்ளியஸ் மற்றும் மைட்டோகாண்ட்ரியா

B) சென்ட்ரியோல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா

C) நியூக்ளியஸ் மற்றும் சென்ட்ரியோல்

D) மைட்டோகாண்ட்ரியா மட்டும்

 

 

13.இன்சுலின் மனிதனின் எந்த உடல் உறுப்பு அல்லது சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது?

A) தைராய்டு

B) அட்ரீனல்

C) கணையம்

D) நுரையீரல்

 

 

14.கோலிசின் உருவாக்கக்கூடிய ஜீன் தொகுப்பினை கொண்ட பிளாஸ்மிட்கள்

A) கருவள பிளாஸ்மிட்கள் / பெர்டிலிடி பிளாஸ்மிட்கள்

B) எதிர்ப்பு/ பிளாஸ்மிட்கள்

C) கோல் பிளாஸ்மிட்கள்

D) விருலன்ஸ் / நச்சுத்தன்மை பிளாஸ்மிட்கள்

 

 

15.கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

(a) தைமோஸின் – 1. BMR கட்டுப்பாடு

(b) கால்சிடோனின் – 2. தசை விலகல்

(c) தைராக்ஸின் – 3. T- செல் வளர்ச்சி

(d) ரிலாக்ஸின் – 4. தாதுக்கள் வரையறைப்படுத்துதல்

A) 4 1 2 3

B) 3 4 1 2

C) 4 2 1 3

D) 2 3 4 1

 

 

16.டையஸ்டோலும், ஸிஸ்டோலும் பொதுவாக ஒரே சமகால அளவில் நடைபெறுகின்றது. இவற்றுள் ஒவ்வொன்றின் காலமானது

A) 0.2 நொடி

B) 0.4 நொடி

C) 0.5 நொடி

D) 0.6 நொடி

 

 

17.மனிதனின் சிறுநீரகம் மூலமாக சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருட்கள் யாவை?

A) அதிகமான நீர் மற்றும் உப்புகள்

B) கார்பன்-டை-ஆக்ஸைடு, நீர் ஆவியாதல்

C) யூரியா, யூரிக் அமிலம், கிரியாட்டினின்

D) ஆக்ஸிஜன் மற்றும் அதிக கார்பன்-டை-ஆக்ஸைடு

 

 

18.அண்டத்தின் உள் ஒன்றுக்கு மேற்பட்ட விந்துக்கள் நுழைவதை ……………. தடுக்கின்றது.

A) ஃபாலிக்குலார் சவ்வு

B) கரோனா ரேடியேட்டா

C) கருசவ்வு

D) தீக்கா இன்டர்னா

 

 

19. விபத்தினால் ஒரு மனிதனின் தலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான காயத்திற்கு செய்யப்படும் உடனடி சிகிச்சை முறை எது?

A) வெள்ளையணுக்கள் எண்ணிக்கை காணுதல்

B) சிறுநீர் சோதனை

C) கம்ப்யூட்டட் டோமோகிராபி தேர்ந்தாராய்தல்

D) உயிர்திசு நோக்கு சோதனை

 

 

20.மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய இரத்த வெள்ளையணுக்கள் யாவை?

A) மோனோசைட் மற்றும் லிம்போசைட்

B) நியூட்ரோபில் மற்றும் இயோசினோபில்

C) பேசோபில் மற்றும் லிம்போசைட்

D) லிம்போசைட் மற்றும் மோனோசைட்

 

 

21.கீழ்க்காண்பவற்றில் நமது உடம்பில் காணப்படும் மிகக் கடினமான உறுப்பு யாது?

A) பற்களில் உள்ள எனாமல் என்னும் படலம்

B) எலும்புகள்

C) நாக்கு

D) மூளை

 

 

22.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.

கூற்று (A) : மனிதன் நல்ல கடத்தி.

காரணம் (R) : நமது உடல் 70% நீர் மற்றும் அதில் கரைந்துள்ள பல்வேறு பொருட்களால் ஆனது. 

சரியான விடையைத் தேர்ந்தெடு.

A) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

B) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A)- விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி ஆனால் (R) தவறு

D) (A) தவறு ஆனால் (R) சரி

 

 

23.AIDS நோயைக் கண்டறியப் பயன்படும் ஆய்வு யாது?

A) எலைசா ஆய்வு

B) APB ஆய்வு

C) ECG ஆய்வு

D) திரையிடல் ஆய்வு

 

 

24.பூப்பெய்தியவுடன் இருவிந்து சுரப்பிகளிலும் ஒரு நாளைக்கு தொடர்ந்து விந்து செல்கள் உற்பத்தியாகும் அளவு 

A) 125 மில்லியன்கள்

B) 120 மில்லியன்கள்

C) 130 மில்லியன்கள்

D) 115 மில்லியன்கள்

 

 

25.புகைபிடித்தல் எந்த உறுப்பை பாதிக்கும்?

A) வயிறு

B) குடல்

C) நுரையீரல்

D) கல்லீரல்

 

 

26.மெண்டலின் ஒற்றைப் பண்பு கலப்பின விகிதம்

A) 9:3:3:1

B) 2:3:3:1

C) 1:2:1

D) 1:2:3:1

 

 

27.கீழ்க்கண்டவற்றுள் எது சாக்கஸ் நோயை உண்டாக்குகிறது?

A) மூட்டைப்பூச்சி

B) கொசுக்கள்

C) டிரையாடோமினே பூச்சி 

D) கரப்பான் பூச்சிகள்

 

 

28.கீழ்க்கண்டவற்றில் புரோத்தராம்பின் படியெடுத்தல் எவற்றில் காணப்படுகிறது?

A) இரத்தத் தட்டுக்கள்

B) இரத்த பிளாஸ்மா

C) கல்லீரல்

D) எலும்பு மஜ்ஜை

 

 

29. கிளைக்கோலிசிஸ் எங்கு நடைபெறுகிறது?

A) கால்ஜி

B) சைட்டோபிளாசம்

C) வியாகியோல்

D) மைட்டோகாண்ட்ரியா

 

 

30.லாங்கர்ஹான் திட்டுகள் கீழ்க்கண்டவற்றில் எதில் காணப்படுகிறது?

A) மண்ணீரல் 

B) கணையம் 

C) கல்லீரல் 

D) பிட்யூட்டரி சுரப்பி

 

 

31. எலும்பு மஜ்ஜை என்பது

A) வெள்ளை அணுக்களின் தொட்டில்

B) சிவப்பு அணுக்களின் தொட்டில்

C) தட்டை அணுக்களின் தொட்டில்

D)மேலே குறிப்பிட்டுள்ளவை ஏதும் இல்லை

 

 

32. ரிசஸ் குரங்கிலிருந்து ஆண்டிஜன் (நோய் எதிர் பொருள்) கண்டுபிடித்தது யார்?

A) ருடால்ப் வீர்ச்சாவ்

B) வில்லியம் ஹர்வே

C) லேண்ட்ஸ்டீனர் மற்றும் வெய்னர்

D) பெஸ்ட் மற்றும் டேலர் 

 

 

33.த்ரோம்போபிளாஸ்டின் எதனோடு தொடர்புடையது

A) இதயம்

B) மண்ணீரல்

C) இரத்த தட்டுக்கள்

D) கல்லீரல்

 

 

34. மனிதனில் கொரியானிக் கொணடோரோப்சின் அளவு மிகுதியாக காணப்படுவது

A) கர்ப்ப கால ஆரம்ப நிலை

B) கர்ப்ப காலம் முடிவு நிலை

C) குழந்தை பிறக்கும் பொழுது

D) மாதவிடாய்க்கு பின்

 

 

35.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I.ஊர்வன மண்டையோட்டின் குழிவுகளின் அடிப்படையில் வகைபாடு செய்யப்பட்டுள்ளன.

II. இருவாழ்விகள் அவற்றின் தாடை இணைப்பின் அடிப்படையில் வகைபாடு செய்யப்பட்டுள்ளன

III.நீர்வாழ் பாலூட்டிகள் ஃபெலிடே குடும்பத்தைச் சார்ந்தவை

IV.பெட்ரோமைசான் ஒரு தாடையற்ற உயிரி

A) II மட்டும்

B) III மற்றும் IV

C) I மற்றும் II 

D) I மற்றும் IV

 

 

36.கீழ்க்கண்டவற்றுள் மனித ஆணின் துணை இனப் பெருக்க சுரப்பி எது?

A) பிராஸ்டேட் சுரப்பி

B) காஸ்டிரிக் சுரப்பி

C) கௌப்பர்ஸ் சுரப்பி

D) இங்குமினல் சுரப்பி

 

 

37.ஒரு மரபியல் கலப்பின் போது F1 -ல் புறத்தோற்ற பண்பின் விகிதம் 1:1:1:1 ஆக இருந்தால் பெற்றோர்களின் ஜீன் அமைப்பு இதுவாகும்.

A) AABBxAaBb

B) AaBBxAabb

C) AaBbxaabb

D) Aabbxaabb

 

 

38.சரியாக பொருத்துக.

a) இடப்பெயர்வு புரதம் – 1. கொலஜன்

b) சேமிப்பு புரதம் – 2. உயிர் எதிரினிகள்

c) அமைப்பு புரதம் – 3.பெர்ரிடின்

d) தற்காக்கும் புரதம் – 4. ஹீமோகுளோபின்

A) 4 3 1 2

B) 3 4 2 1

C) 1 2 3 4

D) 2 1 4 3

 

 

39. பாக்டீரியோபாஜ் என்பது

A) கிராம் பாசிடிவ் பாக்டீரியம்

B) கிராம் நெகடிவ் பாக்டீரியம்

C) மண் பாக்டீரியம்

D) வைரஸ்

 

 

40.மனிதனின் ஒரு செல்லில் இருக்கும் மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை

A) 48

B) 40

C) 30

D) 66

 

 

41.தொழுநோயை உருவாக்குவது எது?

A) மானோஸிஸ்டிஸ்

B) புகையிலை மொசைக் வைரஸ்

C) மைகோ பேக்டீரியம்

D) ஸால்மனெல்லா 

 

 

42.”சோதனை குழாய் குழந்தை” நிகழ்ச்சியில் பின்படுத்தப்படும் தொழில் நுட்பம்

A) GIFT

B) ZIFT

C) [CS]

D) IVI

 

 

43. வகை 1 ஒவ்வாமையின் பொழுது உருவாக்கப்படும் ஆண்டிபாடிகள்

A) IgA

B) IgD

C) IgE

D) IgM

 

 

44. பொருத்துக:

a) ஆண்டனி வான் லியுவென்ஹாக் – 1. டிஎம்வி

b) வாக்மென் – 2. ரேபிஸ்

c) லூயிஸ் பாஸ்ட்சர் – 3. ஸ்ட்ரெப்டோமைசின்

d) ஐவனோஸ்கி – 4. எளிய நுண்ணோக்கி

A) 2 3 4 1

B) 4 3 2 1

C) 4 3 1 2

D) 3 4 2 1

 

 

45. பின்வருவனவற்றுள் எதில் உட்கரு காணப்படுவதில்லை?

A) அண்டம்

B) விந்து

C) இரத்த சிவப்பணுக்கள்

D) இரத்த வெள்ளை அணுக்கள்

 

 

46.ஒருவருடைய உடல் சுகாதாரம் பாதிப்படைய காரணம்

1. மரபியல் கோளாறுகள்

2. விட்டமின் மற்றும் மினரல்கள் குறைபாடு

3. தொற்றுகள் மட்டும்

4. ஒருவருடைய வாழ்க்கை முறைகள்

A) 1, 2, 3 மட்டும்

B) 2, 3, 4 மட்டும் 

C) 3, 4 மட்டும்

D) 1, 2, 3, 4 சரியானது

 

 

47.உட்கருவில் இருந்து ரைபோசோம்களுக்கு தகவல்களை எடுத்து செல்லும் ரைபோ நியூக்ளிக் அமிலங்கள் (ஆர்.என்.ஏ) இவை 

A) எச்.என்/எட்டிரோ நியுக்ளியர் எம்.ஆர்.என்.ஏ.

B) எம்.ஆர்.என்.ஏ.

C) டீ.ஆர்.என்.ஏ.

D) ஆர்.ஆர்.என்.ஏ.

 

 

48.Rh இரத்த வகையை கண்டுபிடித்தவர் யார்?

A) டேவன்போர்ட்

B) கிரிகார் மென்டல்

C) ஹட்சீசன்

D) லாண்ஸ்டீனர் மற்றும் வியனர்

 

 

49.ஆக்ஸிடாசின் ஹார்மோன் எந்த சுரப்பியின் ஹார்மோன்

A) தைராய்டு சுரப்பி

B) அட்ரினல் சுரப்பி

C) பிட்யூட்டரி சுரப்பி

D) பாராதைராய்டு சுரப்பி

 

 

50. பட்டியல் I லிலுள்ள வைட்டமின்களை பட்டியல் IIல் அவை குறைவினால் ஏற்படும் வியாதிகளோடு ஒப்பிடு. 

பட்டியல் I                     பட்டியல் II

a) வைட்டமின் – B12 – 1. மலட்டுத்தன்மை

b) வைட்டமின் – B6 – 2. இரத்தப் போக்கு நிலைமை

c) வைட்டமின் – E – 3. தீவிர இரத்தச் சோகை

d) வைட்டமின்- K – 4. தோல் வியாதி

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 3 4 1 2

D) 3 4 2 1

 

Join the conversation