SCIENCE TEST ANSWER KEY
1. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் மனிதனுடைய இரத்த அளவு என்பதில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1. மனிதனுடைய மொத்த இரத்த அளவு சராசரியாக 5 லிட்டர் இருக்கும்
2. மனிதனுடைய இரத்த அளவு சராசரி உடல் எடையிலிருந்து கணக்கிடப்படுகிறது
3. மனிதனுடைய இரத்த அளவு உடல் எடையில் 1 கிலோகிராமுக்கு சராசரியாக 70 ml இரத்தம் என கணக்கிடப்படுகிறது.
A) 1 மட்டும்
B) 1 மற்றும் 2 மட்டும்
C) 2 மற்றும் 3 மட்டும்
D) 1, 2 மட்டும் 3
விடை: D) 1, 2 மட்டும் 3
2. ஆண் இனப்பெருக்க உறுப்பில் செமினிபிரஸ் செல்லுக்கு பக்கபலமாக இருக்க கூடிய சிறப்பு பணிகளை செய்யக்கூடிய செல்கள்
A) செரட்டோலி செல்கள்
B) லேபியோல் செல்கள்
C) லிக்டிக் செல்கள்
D) விதைப்பையில் உள்ள செல்கள்
விடை: A) செரட்டோலி செல்கள்
3. உயிரின பன்மையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
1. உயிரின பெருக்கத்தை கட்டுப்படுத்துதல்
2. பல்லுயிரின மரபுப்பண்புகளை பாதுகாத்தல்
3. இயற்கை வளங்களை நிர்வாகித்தல் கீழ்வருவனவற்றில் எது சரி என தேர்ந்தெடுக்க.
A) 1 மட்டும்
B) 1 மற்றும் 2 மட்டும்
C) 2 மற்றும் 3 மட்டும்
D) 1, 2 மற்றும் 3
விடை: B) 1 மற்றும் 2 மட்டும்
4. நிறக்குருடு ஏற்படுவதற்கு காரணம்
A) ரெட்டினாவில் ராடு செல் இல்லாததால்
B) ரெட்டினாவில் கோன் செல் இல்லாததால்
C) லென்சில் ஈரப்பதம் இல்லாததால்
D) கண்களில் நிறமிகள் இல்லாததால்
விடை: B) ரெட்டினாவில் கோன் செல் இல்லாததால்
5. கீழ்வருவனவற்றில் கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படுவது எது?
A) டயாட்டம், ஃபியுகஸ்
B) கான்ட்ரஸ், கேரா
C) குளோரெல்லா, கிளாமிடோமோனாஸ்
D) கான்ட்ரஸ், கிராசிலேரியா
விடை: C) குளோரெல்லா, கிளாமிடோமோனாஸ்
6. பின்வருவனவற்றுள், புரதச் சத்து குறைபாடான ‘குவாஷியார்கர்’ -ன் அறிகுறி யாது?
A) கொழுப்பு நிறைந்த கல்லீரல்
B) புறா மார்பு கூடு
C) பாத எரிச்சல்
D) பானை போன்ற வயிறு
விடை: D) பானை போன்ற வயிறு
7. திசு அல்லது உறுப்பு மாற்றம் செய்யும் போது எவ்வகையானவைகளை ஏற்றுக்கொள்ளும்
1. ஒரே உயிரினத்தில் இருந்து எடுக்கப்படும்போது
2. இரட்டையர்களிடமிருந்து எடுக்கும் போது
3. இருவேறுபட்ட உயிரினங்களிலிருந்து எடுக்கும் போது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 1 மற்றும் 2 சரி
D) 3 மட்டும் சரி
விடை: C) 1 மற்றும் 2 சரி
8. சுழல் மண்டலம் என்பது
A) உயிருள்ளவை
B) வாழிடத்தில் உள்ள உயிருள்ளவை மற்றும் உயிரிலிகள்
C) உயிரிலிகள்
D) இனக்குழுக்கள்
விடை: B) வாழிடத்தில் உள்ள உயிருள்ளவை மற்றும் உயிரிலிகள்
9. கீழ்க்கண்டவற்றில் மிகப்பெரிய இரத்த வெள்ளையணுக்கள் எவை?
A) லிம்போசைட்டுகள்
B) பேசோஃபில்கள்
C) மோனோசைட்டுகள்
D) நியூட்ரோஃபில்கள்
விடை: C) மோனோசைட்டுகள்
10. எச்.ஐ.வி-யின் பருமன் சுமார் ………
Α) 10 – 140 μm
Β) 10 – 100 µm
C) 140 – 100 μm
D) 100 – 140 μm
விடை: D) 100 – 140 μm
11. புலி பாதுகாப்பு திட்டம் துவக்கப்பட்ட ஆண்டு
A) 1973
B) 1900
C) 1980
D) 1983
விடை: A) 1973
12. சுவாசித்தலில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தளப்பொருள்
A) புரதம்
B) வைட்டமின்
C) கார்போஹைட்ரேட்
D) கொழுப்பு
விடை: C) கார்போஹைட்ரேட்
13. கிராபியன் பாலிகிள் என்பது …………. ன் விலங்கினத்தின் பண்பாக உள்ளது
A) தவளையின் அண்டகம்
B) பாலூட்டியின் அண்டகம்
C) பாலூட்டியின் தைராய்டு
D) பாலூட்டியின் விந்தகம்
விடை: B) பாலூட்டியின் அண்டகம்
14. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
சியமஸ் இரட்டையர் என்பது
i) இரட்டையர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் முழுமையாக பிரியாதிருத்தல்
ii) இரட்டைகளிடையே வேறுபாடு காணப்படுவதில்லை
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A) (i) சரி (ii) தவறு
B) (i) தவறு (ii) சரி
C) (i) மற்றும் (ii) சரி
D) (i) மற்றும் (ii) தவறு
விடை: C) (i) மற்றும் (ii) சரி
15. தடய அறிவியலில், ஒரு மனிதனை அடையாளம் காணுதல் மற்றும் உறவின் முறையை கண்டறிய உதவும் தொழிற்நுட்பம்
A) DNA விரல்ரேகை பதிவு
B) ஆண்டிசென் RNA technique (RNA தொழிற்நுட்பம்)
C) விலங்கின குளோனிங்
D) திசு வளர்ப்பு
விடை: A) DNA விரல்ரேகை பதிவு
16. 19 ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை பெருக்கம் அபரிமிதமானதற்கு காரணம்
A) தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு
B) மருந்துகளின் கண்டுபிடிப்பு
C) மிதமிஞ்சிய இனப் பெருக்கம்
D) தடுப்பூசி மற்றும் மருந்துகளின் கண்டுபிடிப்பு
விடை: D) தடுப்பூசி மற்றும் மருந்துகளின் கண்டுபிடிப்பு
17. பொருத்துக
a) கார்பஸ் லூட்டியம் – 1. டெஸ்டோஸ்டீரோன்
b) கிராஃபியன் ஃபாலிக்கிள் – 2. இன்ஹிபிடின்
c) செர்ட்டோலி செல்கள் – 3. தீக்கா இன்டர்னா
d) லீடிக் செல்கள் – 4. கார்பஸ் அல்பிகன்ஸ்
A) 2 1 3 4
B) 4 3 2 1
C) 1 2 3 4
D) 3 4 1 2
விடை: B) 4 3 2 1
18. ரேபிசுக்குரிய புதிய தடுப்பூசி மருந்து எந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது?
A) 1905
B) 1912
C) 1985
D) 1980
விடை: D) 1980
19. மனித உடலின் மிக நீளமான எலும்பு
A) மேற்கை எலும்பு
B) முதுகெலும்பு
C) தொடை எலும்பு
D) கால் முன்னெலும்பு
விடை: C) தொடை எலும்பு
20. பிளேக் நோயின் முக்கிய கடத்தி எது?
A) கொசு
B) ஈ
C) ஃபிளி
D) நத்தை
விடை: C) ஃபிளி
21. இரத்த மேட்ரிக்ஸ் எனப்படுவது
A) பிளாஸ்மா
B) இரத்த புரதம்
C) இரத்த சிவப்பு மற்றும் வெள்ளையணுக்கள்
D) இரத்த வெள்ளையணு மற்றும் இரத்த தட்டுக்கள்
விடை: A) பிளாஸ்மா
22. சிக்கில் செல் அனிமியாவிற்கு காரணமாக இருப்பது
A) வைரஸ்கள்
B) ஜீன்கள்
C) ஹார்மோன்கள்
D) பாக்டீரியாக்கள்
விடை: B) ஜீன்கள்
23. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மருந்துகளுக்கு அடிமையாகும் பழக்கம் ……………. எனப்படும்
A) நியுரோஸிஸ்
B) அடிக்ஷன்
C) மயக்கம் /செடேஷன்
D) இன்டிகேஷன்
விடை: B) அடிக்ஷன்
24. டி.என்.ஏ. துண்டுகளை ஓட்டுவதற்கு பயன்படுத்தப்படும் நொதி
A) ரெஸ்டிரிக்ஷன் என்டோ நியூக்லியேஸ்
B) லைப்பேஸ்
C) லைகேஸ்
D) பெராக்ஸிடேஸ்
விடை: C) லைகேஸ்
25. இரத்தத்தில் உள்ள செல்வெளித் திரவம்
A) இரத்த சிவப்பணுக்கள்
B) இரத்த வெள்ளையணுக்கள்
C) பிளாஸ்மா
D) லிம்ப்
விடை: C) பிளாஸ்மா
26. பொருத்துக:
ஹார்மோன் நோய்கள்
a) வளர்ச்சி ஹார்மோன் குறைவதால் – 1. டையாபெடீஸ் இன்சிபிடஸ்
b) வாஸோப் பிரஸ்ஸின் குறைவதால் – 2. கிரேவின் நோய்
c) தைராக்ஸின் குறைவதால் – 3. குள்ளத்தன்மை
d) தைராக்ஸின் அதிகமாவதால் – 4. கிரிட்டினிஸம்
A) 2 3 4 1
B) 3 1 4 2
C) 3 2 1 4
D) 1 2 3 4
விடை: B) 3 1 4 2
27. முதல்நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் எத்தனை சதவீதம் திடக்கழிவுகள், மிதக்கும் திடப்பொருட்கள் நீக்கப்படுகின்றன?
A) 50-65%
B) 45-55%
C) 30-40%
D) 90-95%
விடை: A) 50-65%
28. இந்நோய் கண்டவர்கள் கடந்த நிகழ்வுகளை நினைவு கூற இயலாது கால
A) பக்கவாதம்
B) அம்னீசியா
C) அல்ஸீமியர் நோய்
D) மூளைக் காய்ச்சல்
விடை: B) அம்னீசியா
29. கூற்று 1: காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிப்படும் போது ஹீமோஸ்டாசிஸ் தோன்றுகிறது.
கூற்று 2: துரோம்பின்ஃபைபிரினோஜனை ஃபைபிரினாக மாற்றுகின்றது.
கூற்று 3: இரத்தக் குழாயினுள் இரத்தம் உறைதல் எனப்படும் துரோம் போசிஸ்
கூற்று 4: பேசோபில்களில் ஹிப்பாரின் உள்ள இரத்தம் உறைதலை தடை செய்யும்
மேற்கூறப்பட்ட கூற்றுகள் சரியானவையா என கண்டறி.
A) 1 தவறு, 2 சரி, 3 தவறு, 4 சரி
B) 1 சரி, 2 சரி, 3 தவறு, 4 தவறு
C) 1 தவறு, 2 தவறு, 3 சரி, 4 சரி
D) 1 சரி, 2 சரி, 3 சரி, 4 சரி
விடை: D) 1 சரி, 2 சரி, 3 சரி, 4 சரி
30. மனித உடற்கூறியல் பற்றிய நமது புரிதலை மாற்றக்கூடிய புதிதாக கண்டறியப்பட்ட உறுப்பு
A) லங்கிவிடஸ்
B) பன்ஸிடியம்
C) இன்டஸ் டினியம்
D) இன்டர்ஸ் டினியம்
விடை: D) இன்டர்ஸ் டினியம்
31.மனிதனில் முதன்முதலாக இதய மாற்று அறுவைச் சிகிச்சையினை பேரா. கிறிஸ்டியான் பெர்னார்டு செய்த ஆண்டு
A) 1959
B) 1969
C) 1967
D) 1957
விடை: C) 1967
32. பொருத்துக:
a) அண்ட நாளம் – 1. பெலோப்பியன் குழல்
b) விந்து நாளம் – 2. கலவிக் கால்வாய்
c) இனச்செல் அண்ட – 3. வாசெக்டமி நாள உட்செலுத்துதல்
d) கருத்தடை திரை – 4. டியூபெக்டமி சவ்வு
A) 2 1 4 3
B) 3 4 2 1
C) 1 2 3 4
D) 4 3 1 2
விடை: D) 4 3 1 2
33. காலா அசர் நோய்க் காரணி
A) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
B) லீஸ்மேனியா டோனாவானி
C) லீஸ்மேனியா டிராபிக்கா
D) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
விடை: B) லீஸ்மேனியா டோனாவானி
34. மனித இரத்த சிவப்பு அணுக்களில் போதுமான அளவு ………. நொதி உள்ளது.
A) கார்பானிக் கினேஸ்
B) கார்பானிக் அமிலேஸ்
C) கார்பானிக் லிகேஸ்
D) கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
விடை: D) கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
35. ஜீனின் அமைப்பு அலகு என்பது
A) சிஸ்ட்ரான்
B) ரீக்கான்
C) மியூட்டான்
D) கோடான்
விடை: A) சிஸ்ட்ரான்
36. அழியும் தருவாயிலுள்ள முதுகெலும்பிகள் அதிக எண்ணிக்கையில் எந்த தொகுதியில் காணப்படுகிறது?
A) மீன்கள்
B) பாலூட்டிகள்
C) ஊர்வன
D) பறப்பன
விடை: A) மீன்கள்
37. கீழ்க்காண்பவற்றில் எது ‘சூப்பர்மேன்’ எனப்படும் மயக்க மூட்டும் மருந்து?
A) கோகெய்ன்
B) ஆம்ஃபிடமைன்
C) ஹெராயின்
D) ஆல்கஹால்
விடை: B) ஆம்ஃபிடமைன்
38. நியூரோஹைப்போ பைசிஸ்சால் சுரக்கப்படும் ஹார்மோன்கள்
A) வாசோபிரசின் மற்றும் ஆக்ஸிடாசின்
B) எப்.எஸ்.எச். மற்றும் டி.எஸ்.எச்.
C) நியூரோஹார்மோன் மற்றும் டெரடோ ஹார்மோன்
D) ஏ.சி.டி.எச். மற்றும் சி.சி.டி.எச்.
விடை: A) வாசோபிரசின் மற்றும் ஆக்ஸிடாசின்
39. ஒரு வில்லையின் திறன் + 5D, அதன் குவிய நீளம் என்ன?
A) + 0.2 செ.மீ
B) – 0.2 செ.மீ
C) + 20 செ.மீ
D) -20 செ.மீ
விடை: C) + 20 செ.மீ
40. உலக உயிரினப் பரவலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ………. ஆகும்
A) புயல் போன்ற இயற்கை பேரழிவு
B) இயற்கை வளங்களை மிகைச் சுரண்டல்
C) பிறப்பிட உயிரிக்கும் அயல் உயிரிக்கு மிடையே ஏற்படும் போட்டி
D) வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்
விடை: D) வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்
41. சோயாபீனில் காணப்படும் பாலிபினாலிக் கூட்டுப் பொருள் எது?
A) ஆன்ட்ரோஜன்
B) ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்
C) லைசின்
D) வாலின்
விடை: B) ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்
42. ஸ்ட்ரெப்டோமைசின் ………… க்கு எதிராக செயல்படுவது ஆகும்.
A) கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா
B) கிராம் நெகட்டிவ் பாக்டீரியா
C) வைரஸ்கள்
D) பூஞ்சைகள்
விடை: B) கிராம் நெகட்டிவ் பாக்டீரியா
43.உணர்ச்சியற்றிருப்பது, கான்ஜெனிட்டல், டிரவுமாடிக் வளர்சிதை மாற்றம் மற்றும் மருந்து, புகை மற்றும் குடிப்பழக்கத்தோடு தொடர்புடைய நோய்
A) குண்டாக இருப்பது
B) காட்ராக்ட்
C) குளுக்கோமா
D) நீரழிவு
விடை: B) காட்ராக்ட்
44. மனிதனில், மலேரியா ஒட்டுண்ணியினால் எந்த வகை செல்கள் பாதிக்கப்படுகிறது ?
A) கல்லீரல் செல் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள்
B) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள்
C) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் TH செல்கள்
D) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் எபிடெர்மிஸ் செல்கள்
விடை: A) கல்லீரல் செல் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள்
45. சுவாச ஈவு (RQ) என்பது
A) பயன்படுத்தப்படும் O₂ அளவு
————————————————–
வெளிப்படும் CO₂ அளவு
B) வெளிப்படும் CO₂ அளவு
————————————————–
பயன்படுத்தப்படும் O₂ அளவு
C) வெளிப்படும் O₂ அளவு
————————————————–
பயன்படுத்தப்படும் CO₂ அளவு
D) பயன்படுத்தப்படும் CO₂ அளவு
————————————————–
வெளிப்படும் O₂ அளவு
விடை: B) வெளிப்படும் CO₂ அளவு
————————————————–
பயன்படுத்தப்படும் O₂ அளவு
46. ஊட்டச்சத்து அட்லஸ் மற்றும் உணவு அட்லஸ் இவற்றை வெளியிட்டது
A) ICMR
B) UNICEF
C) WHO
D) FAO
விடை: A) ICMR
47. மக்கள் தொகை என்பது குழுக்களான
A) சமுதாயத்திலுள்ள இனங்கள்
B) சூழ்நிலை மண்டலத்திலுள்ள உயிரினச் சமுதாயம்
C) உயிரினத்தின் உயிரிகளின் எண்ணிக்கை
D) குடும்பத்தின் உயிரிகளின் எண்ணிக்கை
விடை: C) உயிரினத்தின் உயிரிகளின் எண்ணிக்கை
48. திரவ-மொசைக் மாதிரியின் படி, பிளாஸ்மா சவ்வானது ……… ஆல் ஆனது.
A) செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ்
B) பாஸ்போலிபிட்டுகள் மற்றும் ஹெமி செல்லுலோஸ்
C) பாஸ்போலிபிட்டுகள் மற்றும் உள்ளார்ந்த புரதங்கள்
D) பாஸ்போலிபிட்டுகள், உள்ளார்ந்த புரதங்கள் மற்றும் வெளிப்புறப் புரதங்கள்
விடை: D) பாஸ்போலிபிட்டுகள், உள்ளார்ந்த புரதங்கள் மற்றும் வெளிப்புறப் புரதங்கள்
49. ஆண்களுக்கான ஓர் நிலையான கருத்தடை முறையாகும்
A) டியூபெக்டமி
B) வாசெக்டமி
C) தைரோக்டமி
D) ஹைசர்க்டமி
விடை: B) வாசெக்டமி
50. கூற்று: செயற்கை பேஸ் மேக்கர் பொருத்தப்பட்ட ஒருவருக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் பேஸ்மேக்கருக்கான பாட்டரியினை மருத்துவர் மாற்றி பொருத்துகின்றார்.
காரணம் : பேஸ் மேக்கரில் உள்ள லித்தியம் பாட்டரி 7 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை செயல்படக்கூடியது
A) கூற்று சரி காரணம் தவறு
B) கூற்று சரி காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
C) கூற்று சரி காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகின்றது
D) கூற்று தவறு காரணம் தவறு
விடை: C) கூற்று சரி காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகின்றது