தாவரவியல்
1. கீழ்வருவனவற்றுள் எது பசுமை இல்ல வாயு
A) ஆக்ஸிஜன்
B) நைட்ரஜன்
C) கார்பன்டை ஆக்ஸைடு
D) ஒசோன்
விடை: C) கார்பன்டை ஆக்ஸைடு
2. உயரமான உயிர் உள்ள மரம் எது?
A) யூகலிப்டஸ்
B) பனை மரம்
C) செக்கோயா
D) மர பெரணி
விடை:C) செக்கோயா
3. கீழ்க்கண்டவற்றுள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பலன் தரும் தாவரம் எது?
A) வாழை
B) அன்னாசி
C) பலா
D) கேரட்
விடை:D) கேரட்
4. கடல் தாவரங்களிலிருந்து பெறப்படும் முக்கியமான வேதி
A) இரும்பு
B) குளோரின்
C) புரோமின்
D) அயோடின்
விடை:D) அயோடின்
5. போலியோ ஏற்படுவதற்கு முக்கிய காரணம்
A) நுண்ணுயிரி
B) பூஞ்சை
C) வைரஸ்
D) பூச்சிகள்
விடை:C) வைரஸ்
6. “ஓசோன்” எனப்படுவது
A) புற ஊதாச் சூரியக் கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாக்கிறது
B) பல வேதியியல் வினைகளில் வினையூக்கியாக செயல்படுகிறது
C) பசுமை இல்ல விவசாயத்திற்கு பயன்படுகிறது
D) இவ்வாயுவை உட்சுவாசித்தால் பல்வேறு கெடுதல்கள் ஏற்படுகிறது
விடை:A) புற ஊதாச் சூரியக் கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாக்கிறது
7. சூழ்நிலை மாற்றங்கள், மண் அரிப்பு மற்றும் மழை அளவு குறைதல் ஆகிய மாற்றங்கள் உண்டாகப் பெரிதும் காரணமான நிகழ்ச்சி
A) சூழ்நிலை தொகுப்பு மாற்றம்
B) காடுகளை அழித்தல்
C) உலகம் வெப்பமடைதல்
D) பசுமை இல்ல விளைவு
விடை:B) காடுகளை அழித்தல்
8. அக்மார்க் என்பது
A) கூட்டுறவு சங்கம்
B) ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்
C) விவசாயிகளின் கூட்டுறவு
D) வேளாண்மை பண்டங்களின் தரத்திற்கு அளிக்கப்படும் உத்திரவாதம்
விடை:D) வேளாண்மை பண்டங்களின் தரத்திற்கு அளிக்கப்படும் உத்திரவாதம்
9. குளிர்பதன முறை என்பது
A) பாக்டீரியாக்களை அழிப்பது
B) பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது
C) பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்வது
D) பாக்டீரியாக்களின் செல்சுவர்களை சுருங்க வைப்பது
விடை:B) பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது
10. நீலப்பச்சை பாசிகள்
A) ஒளி மாற்று ஊட்ட உயிரிகள்
B) ஒளி சார்பு சுயஜீவிகள்
C) வேதி சார்பு சுயஜீவிகள்.
D) வேதி மாற்று ஊட்ட உயிரிகள்
விடை:B) ஒளி சார்பு சுயஜீவிகள்
11. கீழ்க்கண்டவற்றுள் எது கோஎன்சைமாக செயல்படுகிறது?
A) துத்தநாகம்
B) லிப்பேஸ்
C) பைரிடாக்ஸின்
D) லைசின்
விடை:A) துத்தநாகம்
12. ஒற்றைக் கலப்பின் புறத்தோற்ற விகிதமென்ன?
A) 1 : 1 : 1 : 1
B) 1 : 2 : 1
C) 3 : 1
D) 1 : 1
விடை:C) 3 : 1
13. செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவு
A) மைக்ரான்
B) மில்லி மீட்டர்
C) ஆங்க்ஸ்ட்ராம்
D) ரெம்
விடை:C) ஆங்க்ஸ்ட்ராம்
14. ஆக்ஸிஜன் இல்லாத சூழ்நிலையில் ஆரம்ப காலத்தில் உயிர் தோன்றியதாக நம்பப்படுகிறது. கீழே கொடுக்கப் பட்டுள்ள உயிரினங்களில் எந்த உயிரி இந்தச் சூழ்நிலையில் வாழமுடியும்?
A) காற்றில்லாச் சூழ்நிலையில் நிர்ப்பந்தம் நிறைந்த பாக்டீரியாக்கள்
B) கட்டாயமாக வாழும் ஹேலோபைட்ஸ்
C) லைக்கென்ஸ்
D) வெப்பம் நாடும் பாசிகள்
விடை:A) காற்றில்லாச் சூழ்நிலையில் நிர்ப்பந்தம் நிறைந்த பாக்டீரியாக்கள்
15. பாலினப் பெருக்கம் கீழ்க்கண்ட எந்த பூஞ்சைகளில் இல்லை?
A) டியூடிரோமைஸீட்ஸ்
B) பெஸிடியோமைஸீட்ஸ்
C) ஃபைகோமைஸீட்ஸ்
D) அஸ்கோமைஸீட்ஸ்
விடை:A) டியூடிரோமைஸீட்ஸ்
16. அஸ்னியாவில் பொதுவாக பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுவது இதனால்
A) பிராக்மென்டேஷன்
B) சொரிடியா
C) ஜெம்மா
D) ஹார்மோகோனியா
விடை:B) சொரிடியா
17. கீழ்க்கண்ட எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்வுக்கு பயன்படுத்தப்படுகிறது?
A) அஸ்டர்ஜில்லஸ்
B) நியூரோஸ்போரா
C) ஜிப்பெரெல்லா
D) பெனிஸிலியம்
விடை:B) நியூரோஸ்போரா
18. ஹெட்டிரோடிரைக்கஸ் பழக்கத்தை காட்டுவது
A) வாச்சிரியா.
B) டிக்டியோட்டா
C) எக்டோகார்பஸ்
D) ஸ்பைரோகைரா
விடை:C) எக்டோகார்பஸ்
19. ஒளிச்சேர்க்கை கீழ்க்கண்ட ஒளியில் நடைபெறுவது இல்லை
A) சிகப்பு ஒளி
B) நீல ஒளி
C) புறஊதா ஒளி
D) பச்சை ஒளி
விடை:C) புறஊதா ஒளி
20. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
i) பைனஸில் பிளவு பல்கரு வளர்ச்சி காணப்படுகிறது.
ii) பைனஸில் தனி பல்கரு வளர்ச்சி மற்றும் பிளவு பல்கருவளர்ச்சி ஆகிய இரண்டுமே காணப்படுகின்றன.
iii)பைனஸில் பல்கரு வளர்ச்சி காணப்படவில்லை
iv) பைனஸில் கருவளர்ச்சி தெளிவாக இல்லை.
A) IV மட்டும் சரியானது
B) III மட்டும் சரியானது
C) 1 மட்டும் சரியானது
D) II மட்டும் சரியானது
விடை:B) III மட்டும் சரியானது
21. காடு அழிதலுக்கான காரணம் யாது?
A) அழிதல்
B) மனித மற்றும் கால்நடைகளின் விரைவான பெருக்கம்
C) பசுமை வளத்தின் இழப்பு
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை:B) மனித மற்றும் கால்நடைகளின் விரைவான பெருக்கம்
22. நில அரிமானம் எப்படி ஏற்படுகிறது?
A) எஞ்சியவைகளின் சேகரிப்பு மூலம்
B) எஞ்சியவைகளை அகற்றுவதன் மூலம்
C) வெள்ளப்பெருக்கு மற்றும் மழைப்பொழிவின் மூலம்
D) இயங்கு செயல்முறைகள் மூலம்
விடை:C) வெள்ளப்பெருக்கு மற்றும் மழைப்பொழிவின் மூலம்
23. ஹெச். ஐ. வி. என்னும் மனித நோய் எதிர்ப்பு குறை வைரஸின் உருவமானது
A) கோள வடிவமானது
B) தண்டு போன்றது
C) சுருள் போன்றது
D) கமா போன்றது
விடை:A) கோள வடிவமானது
24.பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1). பட்டியல் (2)
a) வைரஸ். – 1) ராபர்ட் ஹூக்
b) பாக்டீரியா. – 2) ராபர்ட் பிரவுன்
c) உட்கரு. – 3) டிமிட்ரி இவனோவ்ஸ்கி
d) செல் – 4) அன்டோன் வான் லியு வெண்ஹாக்
குறியீடுகள்
A) 3 4 2 1
B) 4 2 3 1
C) 1 2 3 4
D) 2 3 4 1
விடை:A) 3 4 2 1
25. பாலிப்பிளாய்டி மிகச் சாதாரணமாகக் காணப்படுவது
A) விலங்குகளின் உலகில்
B) தாவர உலகில்
C) பூஞ்சைகளில்
D) புரோட்டிஸ்டாக்களில்
விடை:B) தாவர உலகில்
26. ஒளிச்சேர்க்கையில் ஒளிக்கிரியையை ஹில்கிரியை என்றும் இருள் கிரியை இவ்வாறும் அழைக்கப்படும்
A) இருள் கிரியை
B) கருப்பு கிரியை
C) பிளாக்மான் கிரியை
D) டார்க்மன் கிரியை
விடை:C) பிளாக்மான் கிரியை
27. டி.என்.ஏ. வின் அமைப்பை முதலில் விளக்கியவர்
A) காட்சிசைட்
B) லெடர்பர்க்
C) நிரன்பர்க்
D) வாட்சன், க்ரிக்
விடை:D) வாட்சன், க்ரிக்
28. இது ஒரு சைமோஸ் மஞ்சரியின் எடுத்துக்காட்டு ஆகும்
A) தெஸ்பேசியா
B) அக்கிரான்தஸ்
C) குரோட்டலேரியா
D) சீசல்பினியா
விடை:C) குரோட்டலேரியா
29. இந்திய மக்களின் நல்லதொரு உணவு அரிசி ஆகும். அரிசியாக உடைக்கும் போது இறுதியில் தீட்டப்படும் அரிசியில் அதிகமாக உள்ள பொருள்
A) செல்லுலோஸ்
B) சர்க்கரை
C) ஸ்டார்ச்சு
D) கைடின்
விடை:C) ஸ்டார்ச்சு
30. 9:3:3:1 எனும் விகிதம் இதைக் குறிக்கிறது.
A) ஒற்றைக் கலப்பினம்
B) இரட்டைக் கலப்பினம்
C) மூன்று கலப்பினம்
D) பின் கலப்பினம்
விடை:B) இரட்டைக் கலப்பினம்
31. கீழ்க்கண்டவைகளில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) மனிஹாட். – கனி
B) கோதுமை. – விதையிலை
C) ஆமணக்கு. – முளை சூழ்தசை
D) கரும்பு. – தண்டு கிழங்கு
விடை:C) ஆமணக்கு. – முளை சூழ்தசை
32. நீட்டம் ஒரு______
A) சிறுகொடி
B) குறுஞ்செடி
C) கொடி
D) மரம்
விடை:C) கொடி
33. பூமியில் காணும் மிக உயர்ந்த மரம்
A) யூகலிப்டஸ்
B) ஜயண்ட் ஓக்
C) செக்கோயா
D) ஜூனிபெரஸ்
விடை:C) செக்கோயா
34. புரோட்டோனீமா இவற்றின் வாழ்க்கைச் சுற்றில் தோன்றுகிறது.
A) ரிக்சியா
B) மார்கான்சியா
C) ஃபுனேரியா
D) ஆந்தோசெராஸ்
விடை:A) ரிக்சியா
35. சர்க்கரை பெறப்படுவது
A) கரும்பு
B) பீட்
C) பனை
D) இவை அனைத்தும்
விடை:D) இவை அனைத்தும்
36. ஒரு தாவர செல் சர்க்கரை கரைசலில் வைக்கப்படும் பொழுது ____ நிகழ்கிறது.
A) ஆஸ்மாஸிஸ்
B) பிளாஸ்மாஸிஸ்
C) டிஃப்யூஷன்
D) இம்பைபிஷன்
விடை:B) பிளாஸ்மாஸிஸ்
37. தாவரங்களில் காணும் ரைபோ நியூக்ளிக் அமிலத்தின் வகைகளாவன
A) 2.
B) 3
C) 4
D) 5
விடை:B) 3
38. வெர்னேஷன் என்பது இவ்வித இலையின் அமைப்பு ஆகும்.
A) தண்டின் மேல்
B) வேரின் மேல்
C) மொட்டினுள்
D) மொட்டிற்கு வெளியே
விடை:A) தண்டின் மேல்
39. தாவரங்களில் சக்தி வெளிப்படும் செயல்
A) நீராவிப் போக்கு
B) ஒளிச்சேர்க்கை
C) சுவாசித்தல்
D) நீர் உறிஞ்சுதல்
விடை:C) சுவாசித்தல்
40. இலைகள் மஞ்சளாவதற்கு இந்த மூலக் குறைபாடே காரணம் ஆகும்.
A) இரும்பு
B) கோபால்ட்
C) செம்பு
D) துத்தநாகம்
விடை:D) துத்தநாகம்
41. தாவரங்களின் பரிணாமத்தில் சரியான வரிசை முறையினைக் கண்டுபிடி.
A) டெரிடோபைட் – ஜிம்னோஸ்பெர்ம் – தாலோபைட்- ப்ரயோபைட்
B) ஜிம்னோஸ்பெர்ம் – டெரிடோபைட் – ப்ரயோபைட் –தாலோபைட்
C) ப்ரயோபைட் – டெரிடோபைட் – ஜிம்னோஸ்பெர்ம் – தாலோபைட்
D) தாலோபைட் – ப்ரயோபைட் – டெரிடோபைட் – ஜிம்னோஸ்பெர்ம்
விடை:D) தாலோபைட் – ப்ரயோபைட் – டெரிடோபைட் – ஜிம்னோஸ்பெர்ம்
42. சைக்காஸ் இலைக் காம்பில் காணப்படும் சாற்றுக் குழாய்த் திரள்கள் இவ்வடிவில் இருக்கும்.
A) T – வடிவம்
B) L – வடிவம்
C) c – வடிவம்
D) கவிழ்ந்த ஒமேகா (J) வடிவம்
விடை:D) கவிழ்ந்த ஒமேகா (J) வடிவம்
43. கீழ்கண்டவைகளில் எது சரியாகப் பொருத்தப் பட்டுள்ளது?
A) நெல் – ப்ளாஸ்ட் நோய்
B) கரும்பு. – வளைய நோய்
C)உருளை. – இலைப் புள்ளி
D) கடலை. – சிவப்பு அழுகல்
விடை:A) நெல் – ப்ளாஸ்ட் நோய்
44. மண்ணில் அங்ககக் குப்பைகள் அதிகமாக இருக்கும் பொழுது அது இவ்வாறு அழைக்கப்படும்.
A) ஹுமஸ் மண் (இலமட்டு மண்)
B) கிளே மண் (களி மண்)
C) லோம் மண் (தோட்ட மண்)
D) ஆர்கானிக் மண் (அங்கக மண்)
விடை:A) ஹுமஸ் மண் (இலமட்டு மண்)
45. ஒரு தாவரம் வேறு வகையிலான மற்றொரு தாவரத்துக்குள் இணைந்து வாழ்வதற்குப் பெயர்
A) ஒட்டுண்ணி
B) சாறுண்ணி
C) பாதி – ஒட்டுண்ணி
D) என்டோஃபைட்,
விடை:D) என்டோஃபைட்
46. “பலவானே வெல்வான்” என்று தன்னுடைய பரிணாமக் கொள்கையில் இவர் கூறியுள்ளார்.
A) டார்வின்
B) மெண்டல்
C) லாமார்க்
D) டி விரிஸ்
விடை:A) டார்வின்
47. தீட்டப்பட்ட பின் உள்ள அரிசியில்
A) பயனுள்ள ஏதுமில்லை
B) அதே அளவு சத்து நிறைந்தது
C) அரிசியின் இரண்டு மடங்கு சத்து
D) ஏதும் இல்லை
விடை:D) ஏதும் இல்லை
48. இந்த டெரிடோஃபைட் இருவகை ஸ்போர்களை உண்டாக்குகின்றது
A) லைகோபோடியம்
B) செலாஜினெல்லா
C) ஸைலோட்டம்
D) அடியாண்டம்
விடை:B) செலாஜினெல்லா
49. லெபிடோடென்ட்ரான் என்னும் தொல்லுயிர் படிமம் இதனைக் குறிக்கின்றது.
A) வேர்
B) தண்டு
C) கனி
D) இலை
விடை:B) தண்டு
50. இந்த செல்கள் எல்லாம் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்
A) பாரன்கைமா
B) கோலன்கைமா
C) ஸ்கிளிரன்கைமா
D) ஏரன்கைமா
விடை:A) பாரன்கைமா
51. கூடுதல் ஒளிச்சேர்க்கை நடைபெறும் ஒளி
A) வெள்ளை
B) சிவப்பு
C) பச்சை
D) சிவப்பும் நீலமும்
விடை:A) வெள்ளை
52. ரீஸுபினேஷன் என்னும் பண்பு இக்குடும்ப மலர்களுக்கே ஒரு சிறப்பான அம்சம் ஆகும்.
A) ஒலியேசியே
B) மிர்டேசியே
C) ஆர்க்கிடேசியே
D) மால்வேசியே
விடை:C) ஆர்க்கிடேசியே
53. மாற்று உணவில் கீழ்க்காணும் ஒன்று அடங்கி இருக்கும்
A) கொழுப்பு
B) தண்ணீர்
C) கார்போஹைட்ரேட்
D) புரதம்
விடை:C) கார்போஹைட்ரேட்
54. ஜெம்மா கப்கள் எவற்றில் காணப்படுகின்றன?
A) ரிக்சியா
B) மார்கான்சியா
C) ஆந்தோசெராஸ்
D) ஃபினேரியா
விடை:A) ரிக்சியா
55. கீழ்க்கண்டவைகளில் எது சரியாகப் பொருத்தப் பட்டுள்ளது?
A) உளுந்து – மரம்
B) தேக்கு – கொடி
C) வாழை – செடி
D) கொத்துகடலை புதர்
விடை:D) கொத்துகடலை புதர்
56. தாவர செல்களில் எத்தனை’ வகை செல்-பிரிவுகள் உண்டு?
A) 1
B) 2
C) 3
D) 4
விடை:C) 3
57. பூக்கள் நறுமணம் கமழ்வதன் காரணம்
A) காற்றை சுத்தமாக்க
B) ஈக்களை விரட்டியடிக்க
C) பூச்சிகளை அழைக்க
D) இவை அனைத்தையும் செய்ய
விடை:C) பூச்சிகளை அழைக்க
58. மிக அண்மையில் எத்தாவரத்திற்கு காப்புரிமை அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது?
A) இஞ்சி
B) மஞ்சள்
C) வெங்காயம்
D) பூண்டு
விடை:B) மஞ்சள்
59. எப்பிரிவிற்குப் பின் குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைகிறது?
A) மைட்டாசிஸ்
B) ஏமைட்டாசிஸ்
C) மியாசிஸ்
D) பிணைதல்
விடை:C) மியாசிஸ்
60. சைக்காஸின் ஆண் கூம்பு எவற்றைக் கொண்டிருக்கும்?
A)மைக்ரோஸ்போரோஃபில்கள்
B) மெகாஸ்போரோஃபில்கள்
C) மைக்ரோஸ்பொராஞ்சியா
D) மெகாஸ்பொராஞ்சியா
விடை:C) மைக்ரோஸ்பொராஞ்சியா
61. நெல்லின் தாவரவியல் பெயரானது
A) ட்ரிட்டிகம் வல்கார்
B) சொலானம் நைக்ரம்
C) ஒரைசா சடைவா
D) எல்யூசின் கோரகானா
விடை:C) ஒரைசா சடைவா
62. ஊடோகோனியத்தின் ஆண் இழை எவ்வாறு அழைக்கப்படும்?
A) கைனான்டிரியம்
B) நன்னாண்டிரியம்
C) மைக்ராண்டிரியம்
D) மெகாண்டிரியம்
விடை:B) நன்னாண்டிரியம்
63. காப்பு செல்கள் இலைத்துளைக்கு செய்யும் உதவி
A) நீராவிப் போக்கு
B) சுவாசித்தல்
C) ஒளிச்சேர்க்கை
D) மேற்கூறிய அனைத்தும்
விடை:A) நீராவிப் போக்கு
64. ஸின்ஜெனிஸிஸ் என்பது எதன் இணைவு ஆகும்?
A) மகரந்தப்பைகள்
B) மகரந்தகற்றை
C) மகரந்தத்தாள்
D) ஆணகம் மற்றும் பெண்ணகம்
விடை:A) மகரந்தப்பைகள்
65. புரதம் தயாரித்தலில் உள்ள சரியான வரிசை முறையைக் கண்டுபிடி
A) பாலிரைபோசோம் – அமினோ அமிலம் + tRNA – பாலி பெப்டைட் – தூது RNA
B) பாலிபெப்டைட் – பாலிரைபோசோம் – தூது RNA – அமினோ அமிலம் + tRNA
C) தூது RNA – பாலிரைபோசோம் – அமினோ அமிலம் + tRNA – பாலிபெப்டைட்
D) தூது RNA – அமினோ அமிலம் + tRNA – பாலிபெப்டைட் – பாலிரைபோசோம்
விடை:B) பாலிபெப்டைட் – பாலிரைபோசோம் – தூது RNA – அமினோ அமிலம் + tRNA
66. ஒரு தனித்தாவரத்தின் வாழ்க்கைச் சுற்று அதன் சுற்றுச் சூழலைக் கொண்டு விளக்கும் அறிவியலுக்கு உண்டான பெயர்
A) ஆட்டிக்காலஜி
B) ஸின்னீக்காலஜி
C) பயாலஜி
D) வாழ்க்கைச் சுற்று
விடை:B) ஸின்னீக்காலஜி
67. கீழ்க்கண்டவைகளில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) பபாயின் – புகையிலை
B) சணல். – சோற்றுக்குழாய் நார்
C) நிகோடின் – தேயிலை
D) தெயின் – பபாயா
விடை:B) சணல். – சோற்றுக்குழாய் நார்
68. பெரணியின் புரோதாலஸ் என்பது ஒரு
A) கேமிடோஃபைட்
B) ஸ்போரோஃபைட்
C) வெஜிடேடிவ் பாடி
D) இம்மூன்றும் இல்லை
விடை:A) கேமிடோஃபைட்
69. பெரணியின் சந்ததி மாற்றத்தில் சரியான வரிசை முறை யாது?
A) ஸ்போர் ஸ்போரோபைட் – கேமிட்டு – கேமிட்டோபைட்
B) சைகோட் – கேமிட்டோபைட் – ஸ்போரோபைட் – ஸ்போர்
C) சைகோட் – கேமிட்டோபைட் – ஸ்போர் – கேமிட்டோபைட்
D) சைகோட்- ஸ்போரோபைட் ஸ்போர் – கேமிட்டோபைட்
விடை:D) சைகோட்- ஸ்போரோபைட் ஸ்போர் – கேமிட்டோபைட்
70. கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : வெங்காயம் ஒரு விதையிலைத் தாவரமாகும்..
காரணம் (R): அது சல்லி வேர்களைக் கொண்டது.
பதிலை கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டிலிருந்து தேர்ந்தெடு.
A) (A), (R) இரண்டும் உண்மை (R), (A) யின் சரியான விளக்கம்
B) (A), (R) இரண்டும் உண்மை, ஆனால் (R), (A)யின் சரியான விளக்கமல்ல
C) (A) சரி, ஆனால் (R)தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை:B) (A), (R) இரண்டும் உண்மை, ஆனால் (R), (A)யின் சரியான விளக்கமல்ல
71. கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சேர்க்கையின்போது பயன்படும் ஒளி யாது?
A) பச்சை
B) சிவப்பு
C) நீலம்
D) வெள்ளை
விடை:B) சிவப்பு
72. தக்காளிப் பழம் எவ்வகையைச் சார்ந்தது?
A) ட்ரூப்
B) பெரி
C) பெப்போ
D) போம்
விடை:B) பெரி
73. காலிபிளவரின் உண்ணக்கூடிய பகுதி
A) மஞ்சரி
B) பூ
C) கனி
D) பூ மொட்டு
விடை:A) மஞ்சரி
74. ஒரு சூழ்நிலை மண்டலம் இரண்டு பொருட்களை கொண்டுள்ளது அவை
A) களைகள் மற்றும் மரங்கள்
B) உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள்
C) தவளைகள் மற்றும் மனிதர்கள்
D) தாவரங்கள் மற்றும் விலங்குகள்
விடை:B) உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள்
75. ஒரு செல்லின் மரபுப் பொருள் இருக்குமிடம்
A) சைட்டோபிளாசம்
B) புரோட்டோபிளாசம்
C) ரைபோசோம்
D) DNA
விடை:D) DNA
76. நேரடியாக ஸ்போரோபைட் திசுவிலிருந்து ஸ்போரோபைட் ‘ உண்டாவது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) இரட்டை கருவுறுதல்
B) மூவிணைதல்
C) அப்போஸ்போரி
D) சிங்கமி
விடை:D) சிங்கமி
77. வேர் தூவிகள் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவது
A) ப்ளாஸ்மாலிஸில்
B) ஆஸ்மாட்டிக் அழுத்தத்தின் வேறுபாட்டினால்
C) விரைப்புத் தன்மையின் மாறுபாட்டினால்
D) பல்வேறு அயனிகள் நிலத்தின் நீரில் இருப்பதால்
விடை:B) ஆஸ்மாட்டிக் அழுத்தத்தின் வேறுபாட்டினால்
78. பறவைகள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுதல்
A) ஆர்னித் தோபிலி
B) அனிமோபிலி
C) ஹைட்ரோ பிலி
D) என்டமோபிலி
விடை:A) ஆர்னித் தோபிலி
79. ஒரு சூழ்நிலை அமைப்பில் சுயஜீவிகள் இவ்வாறு அழைக்கப்படும்
A) உற்பத்தி செய்பவை
B) பயன்படுத்துபவை
C) சிதைப்பவை
D) உயிரற்ற காரணிகள்
விடை:A) உற்பத்தி செய்பவை
80. ஒருவித சாயம் இந்தத் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
A) சைடா
B) இன்டிகோஃபெரா
C) டெப்ரோஸியா
D) ட்ரைடாக்ஸ்
விடை:B) இன்டிகோஃபெரா
81.பட்டாணியில் காம்ப்ளிமென்ட்ரி ஜீன்களின் தோற்ற ஆக்க விகிதம் என்ன?
A) 9 : 3 : 3 : 1
B) 9 : 7
C) 15 : 1
D) இதில் ஏதுமில்லை
விடை:B) 9 : 7
82. தைமிடின் என்பது
A) டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன் காரம்
B) ஆர்.என். ஏ.வில் உள்ள நைட்ரஜன் காரம்
C) ஒரு நியூக்கிளியோடைடு
D) இவற்றில் ஏதுமில்லை
விடை:A) டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன் காரம்
83. மனிதனுக்கு நெருங்கிய உறவுடன் உயிர் வாழ்வது
A) மனித வாலில்லா குரங்குகள்
B) பழைய உலக குரங்குகள்
C) புதிய உலக குரங்குகள்
D) இவற்றில் எதுவுமில்லை
விடை:A) மனித வாலில்லா குரங்குகள்
84. பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1). பட்டியல் (2)
a) மலேரியா. – 1. பிளாஸ்மோடியம்
b) பெரியம்மை. – 2. பாக்டீரியம்
c) கோய்டிர். – 3.வைரஸ்
d) தொழுநோய் – 4. அயோடின் குறைபாடு
குறியீடுகள் :
A b c d
A) 2 4 1 3
B) 1 3 4 2
C) 3 2 1 4
D) 4 1 2 3
விடை:B) 1 3 4 2
85. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறமிகளில் ஒளி சேர்க்கையில் இடம் பெறாதது எது?
A)குளோரோபில் – a
B) குளோரோபில் – b
C) ஆந்தோஸயனின்
D) பைக்கோபிலின்ஸ்
விடை:C) ஆந்தோஸயனின்
86. இது வகைபாட்டின் அலகு ஆகும்
A) குடும்பம்
B) வகுப்பு
C) இனம்
D) தொகுதி
விடை:C) இனம்
87. உப்பு நீரில் வாழும் தாவரங்களை இவ்வாறு அழைக்கலாம்
A) ஹேலோபைட்டுகள்
B) ஹைட்ரோபைட்டுகள்
C) மீஸோபைட்டுகள்
D) தாலோபைட்டுகள்
விடை:A) ஹேலோபைட்டுகள்
88. ‘டையட்டம் மண்’ என்பது இவ்வகுப்பிலிருந்து பெறப்படுகிறது
A) சேந்தோபைஸி
B) பெயோபைசி
C) பேஸில்லேரியோபைசி
D) ரோடோபைசி
விடை:C) பேஸில்லேரியோபைசி
89. தாவரங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத கெடுதல் என்றழைக்கப்படும் ஒரு செயலியலின் நிகழ்ச்சி
A) நீராவிப்போக்கு
B) ஒளிச்சேர்க்கை
C) சுவாசித்தல்
D) சவ்வூடு பரவுதல்
விடை:A) நீராவிப்போக்கு
90. எருக்கில் (கலோட்ராப்பிஸ்) இலை அமைப்பு இப்படி உள்ளது
A) குறுக்கு மறுக்கு எதிரிலையடுக்கம்
B) மாறி மாறியமைந்த இலையடுக்கம்
C) ஒன்றின் மேல் ஒன்றமைந்த இலையடுக்கம்
D) வட்டமாக அமைந்த இலையடுக்கம்
விடை:A) குறுக்கு மறுக்கு எதிரிலையடுக்கம்
91. பிராங்கியா வேர் முடிச்சு ஏற்படுத்தும் தாவரம்
A) லெக்யூம்கள்
B) ரைஸ்
C) காஸீரைனா
D) காஸிப்பியம்
விடை: C) காஸீரைனா
92. சிவப்பு அலைகளை உண்டாக்கும் உயிரினங்கள்
A) டையட்டம்
B) டைனோபிலஜெல்லேட்
C) சிவப்பு பாசிகள்
D) பழுப்பு பாசிகள்
விடை:C) சிவப்பு பாசிகள்
93. கருவுறுதல் இல்லாமல் கனி ஏற்படும் முறையை இவ்வாறு அழைக்கிறோம்
A) அபோமிக்ஸிஸ்
B) அபோஸ்போரி
C) பார்த்தினோகார்ப்பி
D) அபோகேமி
விடை:C) பார்த்தினோகார்ப்பி
94. DNA யிலிருந்து RNA க்கு செய்தியை கொண்டு செல்வது
A) I – RNA
B) m – RNA
C) r – RNA
D) DNA யே
விடை:B) m – RNA
95. காலஸ் உண்டாவதற்கு கீழ்கண்டவற்றுள் எந்த வேதிப்பொருள் தேவைப்படுகிறது?
A) NAA
B) பென்சைல் அடினைன் அமினோ பியூரின்
C) 2, 4-D
D) 2, 4, 5 – T
விடை:A) NAA
96. அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்
A) மால்வேஸி
B) யூஃபோர்பியோஸி
C) மியுஸேஸி
D) பேபிலியோனேஸி
விடை:D) பேபிலியோனேஸி
97. ஒரு குறிப்பிட்ட எண்கள் கொண்ட செல்கள் முறையான அங்கமாக அமையும் ஆல்கா காலனியின் பெயர்
A) ஸீனோபியம்
B) தாலஸ்
C) குளோப்யூல்
D) நியூக்யூல்
விடை:B) தாலஸ்
98. கீழ்கண்ட தாவரங்களுள் பைகோபையான்ட் மற்றும் மைகோபையான்ட் சேர்ந்து வாழ்வது எது?
A) லைகன்ஸ்
B) மைகோபிளாஸம்
C) ஆல்கா
D) பேக்டீரியோ ஃபேஜ்கள்
விடை:A) லைகன்ஸ்
99. பாக்டீரியாவை முதலில் கண்டுபிடித்து விவரித்த அறிஞர்
A) லோப்லர்
B) லூயி பாஸ்டர்
C) கோச்
D) அண்டன்வான் லீவன்ஹாக்
விடை:D) அண்டன்வான் லீவன்ஹாக்
100. வாஸ்குலார் கற்றையில் உள்ள காம்பியம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) இன்டர் ஃபேசிகுலார் கேம்பியம்
B) இன்ட்ராஃபேசிகுலார் கேம்பியம்
C) லேட்டரல் கேம்பியம்
D) டெல்லோஜன்
விடை:D) டெல்லோஜன்