Course Content
நாள் 1 – பொது அறிவு
GEOGRAPHY LESSON, GEOGRAPHY PREVIOUS YEAR QUESTIONS, SCIENCE PREVIOUS YEAR QUESTIONS
0/2
நாள் 1 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 1 – ஆங்கிலம்
SYNONYMS
0/1
SI DAY – 01 CLASS
About Lesson

6. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வேலுநாச்சியார்
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை: ஆ) பூலித்தேவர்

 

2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
அ) வேலுநாச்சியார்
ஆ) கட்டபொம்மன்
இ) பூலித்தேவர்
ஈ) ஊமைத்துரை
விடை: இ) பூலித்தேவர்

 

3. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
அ) கயத்தாறு
ஆ) நாகலாபுரம்
இ) விருப்பாட்சி
ஈ) பாஞ்சாலங்குறிச்சி
விடை: ஆ) நாகலாபுரம்

 

4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ) கோபால நாயக்கர்
விடை: அ) மருது சகோதரர்கள்

 

5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
அ) 1805 மே 24
ஆ) 1805 ஜூலை 10
இ) 1806 ஜூலை 10
ஈ) 1806 செப்டம்பர் 10
விடை: ) 1806 ஜூலை 10

 

6. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
அ) கர்னல் பேன்கோர்ட்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) சர் ஜான் கிரடாக்
ஈ) கர்னல் அக்னியூ
விடை: இ) சர் ஜான் கிரடாக்

 

7. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
அ) கல்கத்தா
ஆ) மும்பை
இ) டெல்லி
ஈ) மைசூர்
விடை: அ) கல்கத்தா

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை: விஸ்வநாத நாயக்கர்

 

2. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.
விடை: கோபால நாயக்கர்

 

3. கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் என்பவரை அனுப்பிவைத்தார்.
விடை: இராமலிங்க முதலியார்

 

4. கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
விடை: கயத்தார்

 

5. மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை: 2ம் பாளையக்காரர் போர்

 

6. …………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
விடை: ஃபதேக் ஹைதர்

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1. (i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii)
கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii)
கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv)
ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழி நடத்தினார்.

அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி.
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.
இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி.
ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி.
விடை: ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.

 

2.(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii)
காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii)
திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
(iv)
காரன்வாலிஸ் மே 1799ல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
ஈ) (i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை: ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

 

3. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

 

IV. பொருத்துக.

1.

தீர்த்தகிரி

) வேலூர் புரட்சி

2.

கோபால நாயக்கர்

) இரமலிங்கனார்

3.

பானர்மென்

இ) திண்டுக்கல்

4.

சுபேதார் ஷேக் ஆதம்

) வேலூர் கோட்டை

5.

கர்னல் பேன்கோர்ட்

உ) ஓடாநிலை


விடை:

Join the conversation