Course Content
நாள் 1 – பொது அறிவு
GEOGRAPHY LESSON, GEOGRAPHY PREVIOUS YEAR QUESTIONS, SCIENCE PREVIOUS YEAR QUESTIONS
0/2
நாள் 1 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 1 – ஆங்கிலம்
SYNONYMS
0/1
SI DAY – 01 CLASS
About Lesson

2. இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ………………..

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) பஞ்சாப்

ஈ) மத்தியப் பிரதேசம்

விடை: இ) பஞ்சாப்

 

2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு …………….. காற்றுகள் உதவுகின்றன.

அ) லூ

ஆ) நார்வெஸ்டர்ஸ்

இ) மாஞ்சாரல்

ஈ) ஜெட் காற்றோட்டம்

விடை:இ) மாஞ்சாரல்

 

3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ………………. ஆகும்.

அ) சமவெப்ப கோடுகள்

ஆ) சம மழைக்கோடுகள்

இ) சம அழுத்தக்கோடுகள்

ஈ) அட்சக் கோடுகள்

விடை: அ) சமவெப்ப கோடுகள்

 

4. இந்தியாவின் காலநிலை ……………… ஆக பெயரிடப்பட்டுள்ளது.

அ) அயன மண்டல ஈரக் காலநிலை

ஆ) நிலநடுக் கோட்டுக் காலநிலை

இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

ஈ) மித அயனமண்டலக் காலநிலை

விடை: இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

 

5. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

ஆ) இலையுதிர்க் காடுகள்

இ) மாங்குரோவ் காடுகள்

ஈ) மலைக் காடுகள்

விடை: ஆ) இலையுதிர்க் காடுகள்

 

6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ………………..

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திரப் பிரதேசம்

இ) மத்தியப் பிரதேசம்

ஈ) கர்நாடகா

விடை: ஆ) ஆந்திரப் பிரதேசம்

 

7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது …………………

அ) நீலகிரி

ஆ) அகத்திய மலை

இ) பெரிய நிக்கோபார்

ஈ) கட்ச்

விடை: ஈ) கட்ச்

 

II. பொருத்துக.

1. சுந்தர வனம் – பாலை மற்றும் அரைபாலைவனத் தாவரங்கள்

2. உயிர் பன்மை சிறப்பு பகுதிகள் – அக்டோபர், டிசம்பர் 

3. வடகிழக்கு பருவக்காற்று – கடற்கரை காடுகள்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் – மேற்கு வங்காளம் 

5. கடலோர காடுகள்  – இமயமலைகள்

 

விடை:

1. சுந்தர வனம் – மேற்கு வங்காளம் 

2. உயிர் பன்மை சிறப்பு பகுதிகள் – இமயமலைகள்

3. வடகிழக்கு பருவக்காற்று – அக்டோபர், டிசம்பர்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் – பாலை மற்றும் அரைபாலைவனத் தாவரங்கள்

5. கடலோர காடுகள்  – கடற்கரை காடுகள்

 

III. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1. கூற்று : இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.

காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு

இ) கூற்று சரி காரணம் தவறு

ஈ) கூற்று தவறு காரணம் சரி

விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி

 

IV. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.

அ) பாலைவனம்

ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா

இ) கோதாவரி டெல்டா

ஈ) மகாநதி டெல்டா

விடை: அ) பாலைவனம்

 

2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

அ) அட்ச பரவல்

ஆ) உயரம்

இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

ஈ) மண்

விடை: ஈ) மண்

 

Join the conversation