Course Content
நாள் 1 – பொது அறிவு
GEOGRAPHY LESSON, GEOGRAPHY PREVIOUS YEAR QUESTIONS, SCIENCE PREVIOUS YEAR QUESTIONS
0/2
நாள் 1 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 1 – ஆங்கிலம்
SYNONYMS
0/1
SI DAY – 01 CLASS
About Lesson

4. இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

அ) சேமிப்பு மின்கலன்கள்

ஆ) எஃகு தயாரிப்பு

இ) செம்பு உருக்குதல்

ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு

விடை: ஆ) எஃகு தயாரிப்பு

 

2. ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.

அ) 80% – 95%

ஆ) 70% க்கு மேல்

இ) 60% – 70%)

ஈ) 50% க்கும் குறைவு

விடை: அ) 80% – 95%

 

3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………

அ) ஆக்ஸிஜன்

ஆ) நீர்

இ) கார்பன்

ஈ) நைட்ரஜன்

விடை: இ) கார்பன்

 

4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ……………………..

அ) சேலம்

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) கோயம்புத்தூர்

விடை: ஈ) கோயம்புத்தூர்

 

5. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..

அ) குஜராத்

ஆ) இராஜஸ்தான்

இ) மகாராஷ்டிரம்

ஈ) தமிழ்நாடு

விடை: இ) மகாராஷ்டிரம்

 

6. மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..

அ) உயிரி சக்தி

ஆ) சூரியன்

இ) நிலக்கரி

ஈ) எண்ணெய்

விடை: ஆ) சூரியன்

 

7. புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..

அ) ஜார்கண்ட்

ஆ) பீகார்

இ) இராஜஸ்தான்

ஈ) அசாம்

விடை: அ) ஜார்கண்ட்

 

8. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ………………..

அ) போக்குவரத்து

ஆ) கனிமப்படிவுகள்

இ) பெரும் தேவை

ஈ) மின்சக்தி கிடைப்பது

விடை: ஆ) கனிமப்படிவுகள்

 

II. பொருத்துக.

1. பாக்சைட்  – அ) சிமெண்ட் 

2. ஜிப்சம் – ஆ) வானூர்தி 

3. கருப்பு தங்கம் – இ) மின்சாதனப் பொருட்கள் 

4. இரும்பு தாது – ஈ) நிலக்கரி 

5. மைக்கா – உ) மேக்னடைட் 

 

விடை:

1. பாக்சைட்  – ஆ) வானூர்தி 

2. ஜிப்சம் – அ) சிமெண்ட்

3. கருப்பு தங்கம் – ஈ) நிலக்கரி 

4. இரும்பு தாது – உ) மேக்னடைட்

5. மைக்கா – இ) மின்சாதனப் பொருட்கள் 

 

Join the conversation