3. இந்தியா – வேளாண்மை
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. ……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
அ) வண்டல்
ஆ) கரிசல்
இ) செம்மண்
ஈ) உவர் மண்
விடை: இ) செம்மண்
2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ) இந்திய வானியல் துறை
இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்
ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்
விடை: அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ………….
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) பாலைமண்
ஈ) வண்டல் மண்
விடை: ஈ) வண்டல் மண்
4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை …………………….
அ) ஹிராகுட் அணை
ஆ) பக்ராநங்கல் அணை
இ) மேட்டூர் அணை
ஈ) நாகர்ஜூனா சாகர் அணை
விடை: ஆ) பக்ராநங்கல் அணை
5. ………………. என்பது ஒரு வாணிபப்பயிர்.
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) அரிசி
ஈ) மக்காச் சோளம்
விடை: அ) பருத்தி
6. கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
அ) வறண்ட மண்
ஆ) உவர் மண்
இ) மலை மண்
ஈ) பருத்தி மண்
விடை: ஈ) பருத்தி மண்
7. உலகிலேயே மிக நீளமான அணை ………….
அ) மேட்டூர் அணை
ஆ) கோசி அணை
இ) ஹிராகுட் அணை
ஈ) பக்ராநங்கல் அணை
விடை: இ) ஹிராகுட் அணை
8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ………………….
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) சணல்
ஈ) புகையிலை
விடை: இ) சணல்
II. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.
1. கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை: இ) கூற்று சரி, காரணம் தவறு.
2. கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
III. பொருந்தாதைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அ) கோதுமை
ஆ) நெல்
இ) திணை வகைகள்
ஈ) காபி
விடை: ஈ) காபி
2. அ) காதர்
ஆ) பாங்கர்
இ) வண்டல் மண்
ஈ) கரிசல் மண்
விடை: ஈ) கரிசல் மண்
3. அ) வெள்ளப் பெருக்க கால்வாய்
ஆ) வற்றாத கால்வாய்
இ) ஏரிப்பாசனம்
ஈ) கால்வாய்
விடை: இ ஏரிப்பாசனம்
IV. பொருத்துக.
1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் – அ) மகாநதி
2. காபி – ஆ) தங்கப் புரட்சி
3. டெகிரி அணை – இ) கர்நாடகா
4. ஹிராகுட் – ஈ) உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்
5. தோட்டக் கலை – உ) இந்தியாவின் உயரமான அணை
விடை:
1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் – ஈ) உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்
2. காபி – இ) கர்நாடகா
3. டெகிரி அணை – உ) இந்தியாவின் உயரமான அணை
4. ஹிராகுட் – அ) மகாநதி
5. தோட்டக் கலை – ஆ) தங்கப் புரட்சி