1. இந்திய அரசியலமைப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கீழ்காணும் வரிசையில் ‘முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம இறையாண்மை .
ஆ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை , குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக , குடியரசு.
விடை: ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழுதும் இல்லை
விடை: அ) ஒரு முறை
3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: இ) இயல்புரிமை
4. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை: இ) சொத்துரிமை
5. கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.
இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.
விடை: ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
விடை: இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
8. நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
விடை: இ) ரஷ்யா அரசியலமைப்பு
9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
விடை: இ) சட்டப்பிரிவு 360
10. எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
அ) 1, 2 & 3
ஆ) 1 & 2
இ) 1 & 3
ஈ) 2 & 3
விடை: ஆ) 1 & 2
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ……………… தோன்றியது.
விடை: அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
2. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை: Dr. சச்சிதானந்த சின்கா
3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ……….
விடை: 26 நவம்பர் 1949
4. ………………… பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.
விடை: ஐந்து வகையான
5. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் …………… பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடை: 51A
III. பொருத்துக .
1. குடியுரிமை சட்டம் – ஜவஹர்லால் நேரு
2. முகவுரை – 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
3. குறு அரசியல் அமைப்பு – 1955
4. செம்மொழி – 1962
5. தேசிய அவசர நிலை – தமிழ்
விடை:
1. குடியுரிமை சட்டம் – 1955
2. முகவுரை – ஜவஹர்லால் நேரு
3. குறு அரசியல் அமைப்பு – 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
4. செம்மொழி – தமிழ்
5. தேசிய அவசர நிலை – 1962