Course Content
நாள் 1 – பொது அறிவு
GEOGRAPHY LESSON, GEOGRAPHY PREVIOUS YEAR QUESTIONS, SCIENCE PREVIOUS YEAR QUESTIONS
0/2
நாள் 1 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 1 – ஆங்கிலம்
SYNONYMS
0/1
SI DAY – 01 CLASS
About Lesson

வரலாறு

2. சிந்து சமவெளி நாகரிகம்

 

        ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய பகுதிகளில் கி.மு. 2500 முதல் கி.மு. 1700 வரையிலான காலகட்டத்தில் (கார்பன் C14, வயதுக் கணக்கீட்டின்படி) செழித்து வளர்ந்திருந்த ஒரு நாகரிகமே சிந்து சமவெளி நாகரிகமாகும். இது செம்பு அல்லது வெண்கல காலத்தினைச் சார்ந்தது.

 

சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய இறக்குமதிகள் : 

பொருள்

தருவிக்கப்பட்ட இடங்கள்

தங்கம்

கோலார், ஆப்கானிஸ்தான், ஈரான்

வெள்ளி

தென்னிந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான்

செம்பு

கேத்ரி (இராஜஸ்தான்), பலுச்சிஸ்தான், அரேபியா

டின்

ஆப்கானிஸ்தான், பீஹார்

 

 

சிந்து சமவெளி நாகரிக காலகட்டத்தினை மூன்றாக பிரிக்கலாம்: 

 

காலகட்டம்

காலம்

காணப்படும் இடங்கள்

குறிப்புகள்

சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய காலகட்டம் (Pre-Harappan)

கி.மு. 2900-க்கு முன்பு

மெகர்கர் (கிழக்கு பலுச்சிஸ்தான்)

நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையான வாழ்க்கையையும் வேளாண்மையையும் துவங்கினர்.

தொடக்கநிலை (Earty Phase)

கி.மு. 2900 முதல் கி.மு. 2500

ஆம்ரி, கோட்டிஜி

பெரிய கிராமங்களில் வசித்தனர். நகரங்கள் உருவாக ஆரம்பித்தன.

முதிர்ந்த / செழிப்பான நிலை (Mature Phase)

கி.மு. 2500 முதல் கி.மு. 2000

காலிபங்கள் (இராஜஸ்தான்)

பெரிய நகரங்கள் எழுச்சி பெற்றன.

இறுதிநிலை (Later Phase)

கி.மு. 2000 முதல் கி.மு 1750

லோத்தல் (குஜராத்)

லோத்தல் நகரம் மற்றும் அதன் துறைமுகமும் இக்காலத்தில் நிறுவப்பட்டன. மெசபடோமியா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுடனான கடல்வழி வர்த்தகம் இதன் வழியே நடைபெற்றது.

 

 

 

 

 

சிந்துவெளி நகரங்கள் ஒரு பார்வை: 

 

நகரம்

அமைத்துள்ள மாகாணம்

நதிக்கரை

கண்டறியப்பட்ட வருடம் 

கண்டறிந்தவர்

முக்கிய குறிப்புகள்

ஹரப்பா 

மேற்கு பஞ்சாப், பாகிஸ்தான்

ராவி 

1921

தயாராம் சாஹ்னி 

முதன்முதலாக கண்டறியப்பட்டது. 

ஆதாரங்கள் : தானியக் களஞ்சியங்கள், தங்குமிடங்கள், புதையுண்ட நகரம்

 

 

மொகஞ்சதாரோ

சிந்து, பாகிஸ்தான்

சிந்து

1922

R.D. பானர்ஜி 

ஆதாரங்கள்: கல்லறைமேடு, பெரிய நீச்சல் குளம். மிகப்பெரிய தானியக் களஞ்சியம், பருத்தி ஆடை, நடன மங்கை சிலை, பசுபதி முத்திரை, வெண்கல எருமை

 

 

சுத்கோஜெண்டர்

பலூச்சிஸ்தான்

தாஸ்த் 

1929

ஆரல் ஸ்டீன்

ஹாப்பா மற்றும் பாபிலோன் இடையிலான வர்த்தகமையம்

 

 

சங்குதாரோ

சிந்து

சிந்து

1931

N.G. மஜும்தார்

ஆதாரங்கள் : கோட்டைகளற்ற நகரம், மணி விற்கும் கடை, நாயின் கால்தடம், பூனையின் எச்சம்

 

 

ரங்பூர்

குஜராத்

பதூர்

1931

N.G. மஜும்தார் 

 —

லோத்தல் 

குஜராத், காம்பே வளைகுடா

போகவா 

1953

S.R. ராவ் 

ஆதாரங்கள்: முதல் செயற்கைத் துறைமுகம், மணிகள் செய்வும் தொழிற்சாலை, பலிபீடம், சதுரங்க விளையாட்டு

 

 

பனவாலி 

ஹரியானா

காகர் 

1973

R.S. பிஸ்த் 

பார்லி, மணிகள் விற்கும் கடை

ஆலம்கீர் 

உத்திரப் பிரதேசம்

ஹின்டோன் 

1974

Y.D. ஷர்மா 

 

 

 

சிந்து சமவெளி நாகரிகத்தின் பரவல்:

 

மேற்கு

சுத்கோஜெண்டர் (பாக் – ஈரான் எல்லை) – மக்ரான் கடற்கரைப்பகுதி

கிழக்கு

ஆலம்கிர்பூர் (உத்திரப்பிரதேசம்)-ஹிண்டோன் நதிக்கரை

வடக்கு

மண்டா (ஜம்மு) – செனாப் நதிக்கரை

தெற்கு

டைமாபாத் (மஹாராஷ்ட்ரா) – பிரவாரா நதிக்கரை

ஆப்கானிஸ்தான்

முண்டிகாக், ஷார்ட்டுஹாய்.

 

 

 

 

Join the conversation