6. தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ………. முதல் ……………….. வரை உள்ளது.
அ) 8°4’வ முதல் 13°35’வ வரை
ஆ) 8°5’தெ முதல் 13°35’தெ வரை
இ) 8°0’வ முதல் 13°05’வ வரை
ஈ) 8°0’தெ முதல் 13°05’தெ வரை
விடை: அ) 8°4’வ முதல் 13°35’வ வரை
2. தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் …………………….. முதல் ………………… வரை உள்ளது.
அ) 76°18’கி முதல் 80°20’கி வரை
ஆ) 76°18’மே முதல் 80°20’மே வரை
இ) 10°20’கி முதல் 86°18’கி வரை
ஈ) 10°20’மே முதல் 86°18’மே வரை
விடை: அ) 76°18’கி முதல் 80°20’கி வரை
3. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் …………….. ஆகும்.
அ) ஆனைமுடி
ஆ) தொட்டபெட்டா
இ) மகேந்திரகிரி
ஈ) சேர்வராயன்
விடை: ஆ) தொட்டபெட்டா
4. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
அ) பாலக்காடு
ஆ) செங்கோட்டை
இ) போர்காட்
ஈ) அச்சன்கோவில்
விடை: இ) போர்காட்
5. கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?
அ) பெரியார்
ஆ) காவிரி
இ) சித்தார்
ஈ) பவானி
விடை: அ) பெரியார்
6. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
அ) இராமநாதபுரம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கடலூர்
ஈ) தேனி
விடை: இ) கடலூர்
7. பின்னடையும் பருவக்காற்று ……………… லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
அ) அரபிக்கடல்
ஆ) வங்கக் கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) தைமுர்க்கடல்
விடை: ஆ) வங்கக் கடல்
8. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..
அ) தேனி
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) இராமநாதபுரம்
விடை: அ) தேனி
9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ………………
அ) தர்மபுரி
ஆ) வேலூர்
இ) திண்டுக்கல்
ஈ) ஈரோடு
விடை: அ) தர்மபுரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி ……………. ஆகும்.
விடை: கோயம்புத்தூர் பீடபூமி
2. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் …………….. ஆகும்.
விடை: சோலைக்கரடு
3. ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ……………. மற்றும் ……………. ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
விடை: கொள்ளிடம், காவிரி
4. ………………. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
விடை: நீலகிரி வரையாடு
III. பொருத்துக .
1. குளிர்காலம் – முன் பருவ மழை
2. கோடைக்காலம் – ஜூன் – செப்டெம்பர்
3. தென்மேற்கு பருவக்காற்று – மார்ச் – மே
4. வடகிழக்கு பருவக்காற்று – டிசம்பர் – பிப்ரவரி
5. மாஞ்சாரல் – அக்டோபர் – நவம்பர்
விடை:
1. குளிர்காலம் – டிசம்பர் – பிப்ரவரி
2. கோடைக்காலம் – மார்ச் – மே
3. தென்மேற்கு பருவக்காற்று – ஜூன் – செப்டெம்பர்
4. வடகிழக்கு பருவக்காற்று – அக்டோபர் – நவம்பர்
5. மாஞ்சாரல் – முன் பருவ மழை
IV. கூற்று வகை வினா.
1. கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை
காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை: அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.