7. தமிழ்நாடு – மானுடப் புவியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா …………..
அ) காவிரி டெல்டா
ஆ) மகாந்தி டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) கிருஷ்ணா டெல்டா
விடை: அ) காவிரி டெல்டா
2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ……………….
அ) பருப்பு வகைகள்
ஆ) சிறுதானியங்கள்
இ) எண்ணெய் வித்துக்கள்
ஈ) நெல்
விடை: ஆ) சிறுதானியங்கள்
3. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ……………….
அ) மேட்டூர்
ஆ) பாபநாசம்
இ) சாத்தனூர்
ஈ) துங்கபத்ரா
விடை: அ) மேட்டூர்
4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ………………
அ) 3 மற்றும் 15
ஆ) 4 மற்றும் 16
இ) 3 மற்றும் 16
ஈ) 4 மற்றும் 15
விடை: அ) 3 மற்றும் 15
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ……………….. சதவீதத்தை வகிக்கிறது.
விடை: 21
2. சாத்தனூர் அணை …………….. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
விடை: தென்பெண்னை
3. மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ………. ஆகும்.
விடை: சென்னை பன்னாட்டு விமான நிலையம்
4. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ………………. அழைக்கப்படுகிறது.
விடை: வணிக சமநிலை
III. பொருத்துக.
1. பாக்சைட் – அ) சேலம்
2. ஜிப்சம் – ஆ) சேர்வராயன் மலை
3. இரும்பு – இ) கோயம்புத்தூர்
4. சுண்ணாம்புக்கல் – ஈ) திருச்சிராப்பள்ளி
விடை:
1. பாக்சைட் – ஆ) சேர்வராயன் மலை
2. ஜிப்சம் – ஈ) திருச்சிராப்பள்ளி
3. இரும்பு – அ) சேலம்
4. சுண்ணாம்புக்கல் – இ) கோயம்புத்தூர்
IV. சரியான கூற்றினை கண்டுபிடி.
1. கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
2. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.
காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.