5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..
அ) தூத்துக்குடி
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) மதுரை
விடை: இ) சென்னை
2. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ………………
அ) சேலம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) தருமபுரி
விடை: ஆ) கோயம்புத்தூர்
3. ……………….. என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
அ) வேளாண்மை
ஆ) தொழில்
இ) இரயில்வே
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை: ஆ) தொழில்
4. திருப்பூர் ………………. தொழிலுக்கு பெயர்பெற்றது.
அ) தோல் பதனிடுதல்
ஆ) பூட்டு தயாரித்தல்
இ) பின்னலாடை தயாரித்தல்
ஈ) வேளாண் பதப்படுத்துதல்
விடை: இ) பின்னலாடை தயாரித்தல்
5. …………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
அ) ஓசூர்
ஆ) திண்டுக்கல்
இ) கோவில்பட்டி
ஈ) திருநெல்வேலி
விடை: அ) ஓசூர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் …………………. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
விடை: வேலூர்
2. சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ……………ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை: ஏப்ரல் 2000
3. ………. என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
விடை: தொழில் முனைவோர்
III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.
1. பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) ஆம்பூர்
ஈ) வாணியம்பாடி
விடை: ஆ) தர்மபுரி
2. பின்வருவனவற்றில் எது தொழில் துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
அ) TIDCO
ஆ) SIDCO
இ) MEPG
ஈ) SIPCOT
விடை: இ MEPG
IV. பின்வருவனவற்றைப் பொருத்துக .
1. தொழில் முனைவோர் – அ) ஏற்றுமதி செயலாக்க மண்டலம்
2. MEPZ – ஆ) கோயம்புத்தூர்
3. இந்திய ஒழுங்குமுறை – இ) அமைப்பாளர்
4. TNPL – ஈ) அரவங்காடு
5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – உ) கரூர்
விடை:
1. தொழில் முனைவோர் – இ) அமைப்பாளர்
2. MEPZ – அ) ஏற்றுமதி செயலாக்க மண்டலம்
3. இந்திய ஒழுங்குமுறை – ஈ) அரவங்காடு
4. TNPL – உ) கரூர்
5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – ஆ) கோயம்புத்தூர்