3. மாநில அரசு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மாநில ஆளுநரை நியமிப்பவர் ……………..
அ) பிரதமர்
ஆ) முதலமைச்சர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) தலைமை நீதிபதி
விடை: இ) குடியரசுத் தலைவர்
2. மாநில சபாநாயகர் ஒரு ……………..
அ) மாநிலத் தலைவர்
ஆ) அரசின் தலைவர்
இ) குடியரசுத் தலைவரின் முகவர்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை: ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
3. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல ……………….
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதித்துறை
ஈ) தூதரகம்
விடை: ஈ) தூதரகம்
4. ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) ஆளுநர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற சபாநாயகர்
விடை: ஆ) ஆளுநர்
5. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை …………………
அ) முதலமைச்சர்
ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
இ) மாநில தலைமை வழக்குரைஞர்
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்
விடை: ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்
6. அமைச்சரவையின் தலைவர் ………………..
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) சபாநாயகர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை: அ) முதலமைச்சர்
7. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது ………………..
அ) 25 வயது
ஆ) 21 வயது
இ) 30 வயது
ஈ) 35 வயது
விடை: இ) 30 வயது
8. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை.
அ) ஆந்திரப் பிரதேசம்
ஆ) தெலுங்கானா
இ) தமிழ்நாடு
ஈ) உத்திரப் பிரதேசம்
விடை: இ) தமிழ்நாடு
9. இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை
ஆ) டெல்லி மற்றும் கொல்கத்தா
இ) டெல்லி, கொல்கத்தா, சென்னை
ஈ) கொல்கத்தா, சென்னை, டெல்லி
விடை: அ) கொல்கத்தா, மும்பை, சென்னை
10. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ஆ) கேரளா மற்றும் தெலுங்கானா
இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடை: இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ………………. இடம் கொடுக்கிறார்.
விடை: குடியரசுத் தலைவர்
2. சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ……………… ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை: மக்களால்
3. ………………. மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
விடை: ஆளுநர்
4. அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ……………..ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
விடை: குடியரசுத் தலைவர்
III. பொருத்துக .
1. ஆளுநர் – அ) அரசாங்கத்தின் தலைவர்
2. முதலமைச்சர் – ஆ) மாநில அரசின் தலைவர்
3. அமைச்சரவை – இ) தீர்ப்பாயங்கள்
4. மேலவை உறுப்பினர் – ஈ) சட்ட மன்றத்திற்கு பொறுப்பானவர்கள்
5. ஆயுதப் படையினர் – உ) மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது
விடை:
1. ஆளுநர் – ஆ) மாநில அரசின் தலைவர்
2. முதலமைச்சர் – அ) அரசாங்கத்தின் தலைவர்
3. அமைச்சரவை – ஈ) சட்ட மன்றத்திற்கு பொறுப்பானவர்கள்
4. மேலவை உறுப்பினர் – உ) மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது
5. ஆயுதப் படையினர் – இ) தீர்ப்பாயங்கள்
IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.
1. கூற்று : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம் : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.
அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை: ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு