Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

4. அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய ______ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

அ) புத்தர்

ஆ) லாவோட்சே

இ) கன்ஃபூசியஸ்

ஈ) ஜொராஸ்டர்

விடை: அ) புத்தர்

 

2. மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் _______

அ) தனநந்தர்

ஆ) சந்திரகுப்தர்

இ) பிம்பிசாரர்

ஈ) சிசுநாகர்

விடை: இ) பிம்பிசாரர்

 

3. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ______ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.

அ) மஹாஜனபதங்கள்

ஆ) கனசங்கங்கள்

இ) திராவிடம்

ஈ) தட்சிணபதா

விடை: அ) மஹாஜனபதங்கள்

 

4. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் ____

அ) புத்தர்

ஆ) மகாவீரர்

இ) லாவோட்சே

ஈ) கன்ஃபூசியஸ்

விடை: ஆ) மகாவீரர்

 

5. மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.

அ) மார்க்கோ போலோ

ஆ) ஃபாஹியான்

இ) மெகஸ்தனிஸ்

ஈ) செல்யூகஸ்

விடை: இ) மெகஸ்தனிஸ்

 

6. (i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.

(ii) மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.

(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.

(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.

அ) (i) சரி

ஆ) (ii) சரி

இ) (i) மற்றும் (ii) சரி

ஈ) (iii) மற்றும் (iv) சரி

விடை: ஆ) (ii) சரி

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும், மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு _____ ஆகும்.

விடை: ஜென்ட் அவெஸ்தா

 

2. கங்கைச் சமவெளியில் _____ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.

விடை: இரும்பு – கலப்பை

 

3. ______ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

விடை: மகாவீரர்

 

4. புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _____ இல் உள்ளது.

விடை: புத்தகயா.

 

5. மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள _____ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

விடை: அசோகரின்

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

1. அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.

ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.

இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மௌரியர்களுக்கு முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.

ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

விடை: ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

 

2. அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு.

ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரசவம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.

ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.

விடை: ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்

 

IV. பொருத்துக.

1. எண் வழிப்பாதை – அ) மிக உயரமான சமணச் சிலை 

2. பாகுபலி – ஆ) அரசியல் அறநெறிகளின் சட்டத் தொகுப்பு

3. வசந்த மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு – இ) சட்டங்களும் புராணக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியம் 

4. ஜெண்ட் அவெஸ்தா – ஈ) முதல் தீர்த்தங்கரர் 

5. ரிஷபா – உ) தூய மனநிலையை அடைவதற்கான பாதை 

 

விடை: 

1. எண் வழிப்பாதை – உ) தூய மனநிலையை அடைவதற்கான பாதை 

2. பாகுபலி – அ) மிக உயரமான சமணச் சிலை

3. வசந்த மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு – ஆ) அரசியல் அறநெறிகளின் சட்டத் தொகுப்பு

4. ஜெண்ட் அவெஸ்தா – இ) சட்டங்களும் புராணக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியம்

5. ரிஷபா – ஈ) முதல் தீர்த்தங்கரர்

 

Join the conversation