Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

5. இடம்பெயர்தல்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை

அ) 121 கோடி

ஆ) 221 கோடி

இ) 102 கோடி

ஈ) 100 கோடி

விடை: அ) 121 கோடி

 

2. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

அ) இராமநாதபுரம்

ஆ) கோயம்புத்தூர்

இ) சென்னை

ஈ) வேலூர்

விடை: இ) சென்னை

 

3. 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்

அ) 7%

ஆ) 75%

இ 23 %

ஈ) 9%

விடை: அ) 7%

 

4. ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

அ) வாழ்வாதாரத்திற்காக

ஆ) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

இ) சேவைக்காக

ஈ) அனுபவத்தைப் பெறுவதற்காக

விடை: அ) வாழ்வாதாரத்திற்காக

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ____ மற்றும் _____ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.

விடை: பிறப்பிடம், வாழிடம்

 

2. மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ____ காணப்படுகின்றன.

விடை: அதிகமாக

 

3. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிராமப்புற இந்தியாவில் _____ சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

விடை: 37

 

4. பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் _____

விடை: திருமணம்

 

5. இடம்பெயர்வு நகர்வு என்பது _____ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.

விடை: பல்வேறு வகைப்பட்ட

 

III. பொருத்துக.

1. இடம்பெயர்வு கொள்கை – அ) வேலை

2. பெண் இடம்பெயர்வாளர் – ஆ) வெளி குடியேற்றம் குறைவு 

3. சென்னை – இ) வெளி குடியேற்றம் அதிகம் 

4. வசதி, வாய்ப்புடைய இடம்பெயர்வாளர் – ஈ) திருமணம் 

5. சேலம் – உ) இடம்பேயர்தலின் அளவைக் குறைப்பது  

6. ஆண் இடம்பெயர்வாளர் – ஊ) வழக்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

 

விடை: 

1. இடம்பெயர்வு கொள்கை – உ) இடம்பேயர்தலின் அளவைக் குறைப்பது

2. பெண் இடம்பெயர்வாளர் – ஈ) திருமணம்

3. சென்னை – இ) வெளி குடியேற்றம் அதிகம்

4. வசதி, வாய்ப்புடைய இடம்பெயர்வாளர் – ஊ) வழக்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

5. சேலம் – ஆ) வெளி குடியேற்றம் குறைவு

6. ஆண் இடம்பெயர்வாளர் – அ) வேலை

 

Join the conversation