6. இடைக்காலம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. _______ ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.
அ) ஷின்டோ
ஆ) கன்பியூசியானிசம்
இ தாவோயிசம்
ஈ) அனிமிசம்
விடை: அ) ஷின்டோ
2. _______ என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
அ) டய்ம்யாஸ்
ஆ) சோகன்
இ பியுஜிவாரா
ஈ) தொகுகவா
விடை: அ) டய்ம்யாஸ்
3. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி ______
அ) தாரிக்
ஆ) அலாரிக்
இ சலாடின்
ஈ) முகமது என்னும் வெற்றியாளர்
விடை: அ) தாரிக்
4. ஹருன்-அல் ரஷித் என்பவர் _____ ன் திறமையான அரசர்
அ) அப்பாசித்து வம்சம்
ஆ) உமையது வம்சம்
இ) சசானிய வம்சம்
ஈ) மங்கோலிய வம்சம்
விடை: அ) அப்பாசித்து வம்சம்
5. நிலப்பிரபுத்துவம் _____ மையமாகக் கொண்டது.
அ) அண்டியிருத்தலை
ஆ) அடிமைத்தனத்தை
இ) வேளாண் கொத்தடிமையை
ஈ) நிலத்தை
விடை: அ) அண்டியிருத்தலை
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. _____ என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவார்.
விடை: அய்னஸ்
2. _____ என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை: யமட்டோ
3. ______ என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை: மதினாட்-உன்-நபி
4. வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு பண்பாட்டில் பின் தங்கிய ____ மக்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர்.
விடை: நாடோடிப் பழங்குடியினர்
5. உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் _____ ஆவார்.
விடை: இரண்டாம் முகமது.
III. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
1. i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்
iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன
iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும் (iii) சரியானவை
ஈ) (iv) சரி
விடை: ஈ) (iv) சரி
2. i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர்.
ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது.
iii) ‘சிகப்புத் தலைப்பாகை’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ
iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iv) சரியானவை
ஈ) (iv) சரி
விடை: இ) (ii) மற்றும் (iv) சரியானவை
3. i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை: ஈ) (iv) சரி
4. கூற்று : பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.
காரணம் : சீனாவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.
அ) கூற்று சரி ; காரணம் தவறு
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ) கூற்றும் காரணமும் சரியானவை
ஈ) கூற்று தவறு ; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றது
விடை: அ) கூற்று சரி ; காரணம் தவறு
5. கூற்று : ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது
காரணம் : ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை: ஈ) கூற்று சரி ; காரணம் சரியான விளக்கம்
IV. பொருத்துக.
1. சிகப்பு தலைப்பாகைகள் – அ) காமகுரா
2. செல்ஜுக் துருக்கியர்கள் – ஆ) இரண்டாம் முகமது
3. முதல் சோகுனேட் – இ) அரேபிய இரவுகளின் நகரம்
4. பாக்தாத் – ஈ) சூ யுவான் சங்
5. கான்ஸ்டாண்டிநோபில் கைப்பற்றபடல் – உ) மத்திய ஆசியா
விடை:
1. சிகப்பு தலைப்பாகைகள் – ஈ) சூ யுவான் சங்
2. செல்ஜுக் துருக்கியர்கள் – உ) மத்திய ஆசியா
3. முதல் சோகுனேட் – அ) காமகுரா
4. பாக்தாத் – இ) அரேபிய இரவுகளின் நகரம்
5. கான்ஸ்டாண்டிநோபில் கைப்பற்றபடல் – ஆ) இரண்டாம் முகமது