Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

2. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு _____ வயது வரையிலான வயதை கணக்கிடலாம்.

அ) 12-60

ஆ) 15-60

இ) 21-65

ஈ) 5-14

விடை: ஆ) 15-60

 

2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?

அ) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத்துறை

ஆ)முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை

இ) சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை

ஈ) இரண்டாம் துறை, சார்புத் துறை, முதன்மைத் துறை

விடை: ஆ) முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை

 

3. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

அ) முதன்மைத் துறை

ஆ) இரண்டாம் துறை

இ) சார்புத்துறை

ஈ) பொதுத்துறை

விடை: அ) முதன்மைத்துறை

 

4. பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?

அ) வேளாண்மை

ஆ) உற்பத்தி

இ) சுரங்கத் தொழில்

ஈ) மீன்பிடித் தொழில்

விடை: ஆ) உற்பத்தி

 

5. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?

அ) கட்டுமானம்

ஆ) உற்பத்தி

இ) சிறு தொழில்

ஈ) காடுகள்

விடை: ஈ) காடுகள்

 

6. மூன்றாம் துறையில் அடங்குவது.

அ) போக்குவரத்து

ஆ) காப்பீடு

இ) வங்கியல்

ஈ) அனைத்தும்

விடை: ஈ) அனைத்தும்

 

7. எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?

அ) முதன்மைத் துறை

ஆ) இரண்டாம் துறை

இ) சார்புத் துறை

ஈ) தனியார் துறை

விடை: ஈ) தனியார் துறை

 

8. பட்டியல் – II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.

அ) வேளாண்மை காடுகள், மீன் பிடிப்பு மற்றும் சுரங்கம் – 1. ஒழுங்கமைக்கப்படாத துறை 

ஆ) உற்பத்தி, மின் உற்பத்தி, எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் – 2. சார்புத் துறை

இ) வாணிபம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு – 3. இரண்டாம் துறை 

ஈ) குழுமப் பதிவற்ற நிறுவனங்கள் மற்றும் வீட்டுத் தொழில்கள் – 4. முதன்மைத் துறை 

அ) 1 2 3 4 

ஆ) 4 3 2 1 

இ) 2 3 1 4 

ஈ) 3 2 4 1 

விடை : ஆ) 4 3 2 1

 

9. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்?

அ) முகமது பின் துக்ளக்

ஆ) அலாவுதீன் கில்ஜி

இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்

ஈ) பால்பன்

விடை: இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்

 

10. _____ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

அ) வேளாண்மை

ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட

இ) ஒழுங்கமைக்கப்படாத

ஈ) தனியார்

விடை: ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட

 

11. ______ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

அ) பொதுத் துறை

ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

இ) ஒழுங்கமைக்கப்படாத துறை

ஈ) தனியார் துறை

விடை: ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

 

12. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) வங்கியியல

ஆ) ரயில்வே

இ) காப்பீடு

ஈ) சிறு தொழில்

விடை: ஈ) சிறு தொழில்

 

13. பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?

அ) பணியாளர்களின் எண்ணிக்கை

ஆ) இயற்கை வளங்கள்/பொருளாதார செயல்முறை

இ) நிறுவனங்களின் உரிமை

ஈ) வேலைவாய்ப்பின் நிலை

விடை: அ) பணியாளர்களின் எண்ணிக்கை

 

14. கூற்று (A) – ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.

காரணம் (R) – இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.

அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் சரி

ஆ)கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் தவறு

இ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு.

ஈ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி.

விடை: ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. (R), (A) வை விளக்கவில்லை.

 

15. தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும், அவர்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள்

அ) ஊழியர்

ஆ) முதலாளி

இ) உழைப்பாளி

ஈ) பாதுகாவலர்

விடை: ஆ) முதலாளி தமிழ்நாட்டில்

 

16. துறையில் ____ அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அ) வேளாண்மை

ஆ) உற்பத்தி

இ) வங்கியல்

ஈ) சிறுதொழில்

விடை: அ) வேளாண்மை

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. ______ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல.

விடை: ஒழுங்கமைக்கப்படாத

 

2. பொருளாதார நடவடிக்கைகள் _____ மற்றும் _____ துறைகளாக வகைப்படுத்துகின்றன.

விடை: பொது, தனியார்

 

3. ______ எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு முக்கிய உறுப்பாக இடம் பெற்றுள்ளது.

விடை: வேலை வாய்ப்பு

 

4. வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் _____

விடை: மக்களின் வாழ்க்கை முறை

 

5. இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை _____

விடை: பல பரிமாணங்களைக் கொண்டது

 

6. _____ -ன் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் உழைக்கும் திறன் பெற்றவர்களைக் குறிக்கும்.

விடை: உழைப்போர் குழு

 

7. பொதுத்துறை என்பது _____

விடை: அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்

 

III. பொருத்துக. 

1. பொதுத் துறை – அ) வங்கியல் 

2. தனியார் துறை – ஆ) கோழி வளர்ப்பு 

3. முதன்மைத் துறை – இ) இலாப நோக்கம் 

4. சார்புத் துறை – ஈ) சேவை நோக்கம் 

 

விடை: 

1. பொதுத் துறை – ஈ) சேவை நோக்கம்

2. தனியார் துறை – இ) இலாப நோக்கம்

3. முதன்மைத் துறை – ஆ) கோழி வளர்ப்பு

4. சார்புத் துறை – அ) வங்கியல்

 

நினைவில் கொள்க

1. பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2. பொதுத் துறைகள் என்பவை அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்களாகும்.

3. ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் குறைந்த கூலியே கொடுக்கப்படுகிறது.

4. இந்தியாவில் மிக அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவது விவசாயம் ஆகும்.

Join the conversation