5. உள்ளாட்சி அமைப்புகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
அ) பல்வந்ராய் மேத்தா குழு
ஆ) அசோக் மேத்தா குழு
இ) GVK ராவ் மேத்தா குழு
ஈ) LM சிங்வி மேத்தா குழு
விடை: இ) GVK ராவ் மேத்தா குழு
2. _____ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்லவர்
விடை: அ) சோழர்
3. 73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
அ) 1992
ஆ) 1995
இ) 1997
ஈ) 1990
விடை: அ) 1992
4. ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ____ ஆவார்.
அ) ஆணையர்
ஆ) மாவட்ட ஆட்சியர்
இ) பகுதி உறுப்பினர்
ஈ) மாநகரத் தலைவர்
விடை: ஆ) மாவட்ட ஆட்சியர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ‘உள்ளாட்சி அமைப்புகளின்’ தந்தை என அழைக்கப்படுபவர் _____
விடை: ரிப்பன் பிரபு
2. நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது ____ ஆக விளங்கியது.
விடை: நம்பிக்கை
3. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை ____ என்றழைக்கப்பட்டது.
விடை: குடவோலை முறை
4. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ____ ஆகும்.
விடை: கிராம ஊராட்சி
5. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் ____ ஆவார்.
விடை: செயல் அலுவலர்
III. பொருத்துக
1. மாவட்ட ஊராட்சி – அ) கிராமங்கள்
2. கிராம சபைகள் – ஆ) மாநகரத் தலைவர்
3. பகுதி குழுக்கள் – இ) பெருந்தலைவர்
4. ஊராட்சி ஒன்றியம் – ஈ) மாவட்ட ஆட்சியர்
5. மாநகராட்சி – உ) நகராட்சிகள்
விடை:
1. மாவட்ட ஊராட்சி – இ) பெருந்தலைவர்
2. கிராம சபைகள் – அ) கிராமங்கள்
3. பகுதி குழுக்கள் – உ) நகராட்சிகள்
4. ஊராட்சி ஒன்றியம் – ஈ) மாவட்ட ஆட்சியர்
5. மாநகராட்சி – ஆ) மாநகரத் தலைவர்