திசைகள்
VIDEO CLASS
NATIONAL CARE ACADEMY
Day – 2 திசைகள்
1. ராமு மேற்கு நோக்கி நின்றான். அவன் 45°கடிகாரத் திசையில் திரும்புகிறான். அதே திசையில் மீண்டும் 180 ° திரும்புகிறான் மற்றும் அவன் மீண்டும் 135° கடிகார திசையில் திரும்பினான். அவன் எத்திசையை நோக்கி நிற்பான்?
a) தெற்கு
b) வடமேற்கு
c) மேற்கு
d) தென்மேற்கு
விடை: c) மேற்கு
2. மனிதன் ஒருவன் தெற்கு நோக்கி நிற்கிறான். அவன் 135 ° எதிர்க்கடிகார திசையில் திரும்புகிறான் மற்றும் 180° கடிகார திசையில் திரும்பினால் அவன் எத்திசையை நோக்கி நிற்பான்?
a) வடகிழக்கு
b) வடமேற்கு
c) தென்கிழக்கு
d) தென்மேற்கு
விடை: d) தென்மேற்கு
3. மனிதன் ஒருவன் மேற்கு நோக்கி நிற்கிறான். அவர் கடிகார திசையில் 45° திரும்புகிறான். மீண்டும் கடிகார திசையில் 180°திரும்புகிறான் மற்றும் அவன் எதிர் கடிகார திசையில் 270° திரும்புகிறான். எனில் அவன் எத்திசை நோக்கி நிற்பான்?
a) மேற்கு
b) வட மேற்கு
c) தெற்கு
d) தென்மேற்கு
விடை: d) தென்மேற்கு
4. நதி ஒன்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்கிறது. அவன் வழியில் இடது புறமாக திரும்புகிறது அரைவட்ட பாதையில் குன்று ஒன்றை சுற்றுகிறது. மீண்டும் இடது புறமாக திரும்பி நேர் வழியில் செல்கிறது. தற்போது நதி திசையில் பாய்கிறது?
a) மேற்கு
b) கிழக்கு
c) வடக்கு
d) தெற்கு
விடை: b) கிழக்கு
5. ராமன் வடக்கு நோக்கி செல்கிறான். வலது புறமாக திரும்புகிறான். மீண்டும் வலது புறமாக திரும்பி நடக்கிறான். மறுபடியும் இடது புறமாக திரும்பி நடக்கிறான். அவன் தற்போது எத்திசையில் செல்கிறான்?
a) வடக்கு
b) தெற்கு
c) கிழக்கு
d) மேற்கு
விடை: c) கிழக்கு
6. தீபக் கிழக்கு திசை நோக்கி நேர்பாதையில் நடக்கிறான். 75 மீ சென்றபின் இடது புறம் திரும்புகிறான். 25 மீ நேர் திசையில் நடக்கிறான். மீண்டும் இடது புறம் திரும்பி 40 மீ நேர்வழியில் நடக்கிறான்.மீண்டும் இடது புறம் திரும்பி 25 மீ நேர்திசையில் நடக்கிறான். அவன் தற்போது புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் நிற்கிறான்?
a) 35 மீ
b) 50 மீ
c) 115 மீ
d) 140 மீ
விடை: a) 35 மீ
7. மாணிக் வடக்கு நோக்கி 40 மீ நடக்கிறான். இடது புறம் திரும்பி 20 மீ நடக்கிறான். மீண்டும் இடது புறம் திரும்பி 40 மீ நடக்கிறான். அவன் ஆரம்பித்த இடத்தில் இருந்து எத்திசையில் எவ்வளவு தொலைவில் நிற்கிறான்?
a) 20 மீ கிழக்கு
b) 20 மீ வடக்கு
c) 20 மீ மேற்கு
d) 100மீ தெற்கு
விடை: c) 20 மீ மேற்கு
8. ஒரு நாள் ரவி தெற்கு நோக்கி 10 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்தான். பின் வலது புறம் திரும்பி 5 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்தான். மீண்டும் வலது புறமாக 10 கிலோமீட்டர் மற்றும் இடது புறமாக 10 கிலோமீட்டர் மிதித்து தன் வீட்டை அடைகிறான்.எனில் தனது வீட்டை நேர்வழியில் அடைய அவன் எத்தனை கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து இருக்க வேண்டும்?
a) 10 கிலோமீட்டர்
b) 15 கிலோ மீட்டர்
c) 20 கிலோமீட்டர்
d) 25 கிலோ மீட்டர்
விடை: b) 15 கிலோ மீட்டர்
9. ராஜேஷ் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்கிறான். அவன் கிழக்கு நோக்கி நடக்கிறான். 20 கிலோ மீட்டர் சென்ற பிறகு தெற்கு நோக்கி 10 கிலோமீட்டர் நடக்கிறான். மேற்கு நோக்கி 35 கிலோமீட்டர் நடக்கிறான். வடக்கு நோக்கி 5 கிலோமீட்டர் செல்கிறான். மீண்டும் கிழக்கு திசையில் 15 கிலோ மீட்டர் செல்கிறான். அவன் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
a) 0
b) 5
c) 10
d) 7.5
விடை: b) 5
10. ராம் வடக்கு நோக்கி செல்கிறான். சிறிது தூரம் சென்றதும் வலது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றான். இடது புறம் திரும்பி ஒரு கிலோமீட்டர் சென்றான். மீண்டும் இடது புறம் திரும்பினால் அவன் எத்திசை நோக்கி நடப்பான்?
a) வடக்கு
b) தெற்கு
c) கிழக்கு
d) மேற்கு
விடை: d) மேற்கு
11. பெண் ஒருத்தி தனது வீட்டில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி 30 மீட்டர் மற்றும் தென்மேற்கு திசை நோக்கி 30 மீட்டர் நடக்கிறாள். அடுத்த தென் கிழக்கு திசையில் 30 மீட்டர் நடக்கிறாள். அடுத்து அவள் வீட்டை நோக்கி செல்கிறாள் என்றால் எத்திசையில் நடந்து கொண்டிருப்பாள்?
a) வடகிழக்கு
b) வடமேற்கு
c) தென்மேற்கு
d) தென் கிழக்கு
விடை: a) வடகிழக்கு
12. A என்பவர் Bக்கு தென் திசையிலும் C என்பவர் B க்கு கிழக்கு திசையிலும் நின்றால் A என்பவர் C க்கு எத்திசையில் உள்ளார்?
a) வடகிழக்கு
b) வடமேற்கு
c) தென்கிழக்கு
d) தென்மேற்கு
விடை: d) தென்மேற்கு
13. A என்பவர் B விற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு திசையிலும் C என்பவர் B விற்கு40 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நின்றால் C என்பவர் A விற்கு எந்த திசையி நிற்பார்?
a) கிழக்கு
b) மேற்கு
c) வடக்கு
d) தெற்கு
விடை: a) கிழக்கு
14. P, Q, R, S & T என்ற ஐந்து கிராமங்கள் ஒன்றன் ஒன்று அருகாமையில் அமைந்துள்ளது. P என்ற கிராமம் Q என்ற கிராமத்திற்கு மேற்காகவும், R என்பது Pக்கு தெற்காக்கவும், T என்பது Q என்ற கிராமத்திற்கு வடக்காகவும், S என்பது T என்ற கிராமத்திற்கு கிழக்காகவும் இருந்தால், R என்பது S க்கு எந்த திசையில் இருக்கும்?
a) வடமேற்கு
b) தென்கிழக்கு
c) தென்மேற்கு
d) இவற்றில் எதுவுமில்லை
விடை: c) தென்மேற்கு
15. P, Q, R, S, T, U, V, W என்பவர்கள் வட்ட மேசையில் சல இடைவெளியில் ஒரே தொடராக அமர்ந்து குழுவாக கலந்துரையாடுகிறார்கள் அவர்கள் அனைவரும் கடிகார திசையில் அமர்ந்துள்ளார்கள். V என்பவர் மட்டும் வடக்கு திசையில் அமர்ந்துள்ளார் எனில் S என்பவர் எத்திசையில் அமர்ந்துள்ளார்?
a) கிழக்கு
b) தென் கிழக்கு
c) தெற்கு
d) தென் மேற்கு
விடை: d) தென் மேற்கு
16. ஒரு நாள் காலை சூரியன் உதிக்கும் நேரத்தில் ரீட்டா மற்றும் கீதா ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்தனர். கீதாவின் நிழல் ரீட்டாவின் வலது புறம் விழுந்தால் கீதா எத்திசையை நோக்கி அமர்ந்திருப்பார்?
a) வடக்கு
b) கிழக்கு
c) தெற்கு
d) மேற்கு
விடை: a) வடக்கு
17. ஒரு கடிகாரம் 4:30 மணி என காட்டுகிறது. பெரிய முள் கிழக்கு நோக்கி நின்றால் சிறிய முள் எத்திசையில் நிற்கும்?
a) வடக்கு
b) வடமேற்கு
c) தெற்கு
d) வடகிழக்கு
விடை: d) வடகிழக்கு
18. தற்போது கடிகாரத்தில் 3:00 மணி. பெரிய முள் வடகிழக்கு நோக்கி நின்றால் சிறிய முள் எத்திசையில் இருக்கும்?
a) தெற்கு
b) தென்மேற்கு
c) வட மேற்கு
d) தென்கிழக்கு
விடை: d) தென்கிழக்கு
19. ஒரு மனிதன் தன் தலையை கீழே ஊன்றி கால் இரண்டையும் மேலே உயர்த்தி யோகா செய்து கொண்டிருக்கிறான். அவனது முகம் மேற்கு நோக்கி இருந்தால் அவரது இடது கை எந்த திசையை நோக்கி இருக்கும்?
a) வடக்கு
b) தெற்கு
c) கிழக்கு
d) மேற்கு
விடை: a) வடக்கு
20. ஒரு கடிகாரம் தற்போது 8:45 pm காட்டுகிறது. கடிகாரத்தை 135° எதிர்க்கடிகார திசையில் சுற்றினால் நிமிடம் காட்டும் முள் எத்திசையை நோக்கி இருக்கும்?
a) வடக்கு
b) தெற்கு
c) தென்மேற்கு
d) தென் கிழக்கு
விடை: d) தென் கிழக்கு
21. தற்போது கடிகாரத்தில் 10:30 மணி. பெரிய முள் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் சிறிய முள் எந்த திசை நோக்கி இருக்கும்?
a) வடக்கு
b) தென்மேற்கு
c) தென்கிழக்கு
d) வடகிழக்கு
விடை: b) தென்மேற்கு
22. ரோகன் கிழக்கை நோக்கி 3 கிலோமீட்டர் நடந்து சென்று பின் இடப்பக்கம் திரும்பி 4 கிலோமீட்டர் நடக்கிறான் எனில் ஆரம்பித்த இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளான்?
a) கிழக்கு
b) மேற்கு
c) வடக்கு
d) தெற்கு
விடை: c) வடக்கு
23. 6 கிலோமீட்டர் நடந்து முடிந்த பின் நான் வலப்பக்கம் திரும்பி இரண்டு கிலோமீட்டர் நடந்து பின் இடப்பக்கம் திரும்பி பத்து கிலோமீட்டர் நடந்து முடிக்கிறேன். இறுதியில் நான் வடக்கு திசையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றால் எந்த திசை நோக்கி நான் ஆரம்பத்தில் நடந்திருப்பேன்?
a) கிழக்கு
b) மேற்கு
c) வடக்கு
d) தெற்கு
விடை: c) வடக்கு
24. மோகன் என்பவன் A என்ற புள்ளியில் இருந்து தெற்கு நோக்கி ஒரு கிலோமீட்டர் நடந்த பின்பு இடப்புறம் திரும்பி மீண்டும் ஒரு கிலோமீட்டர் நடந்தால் அவன் பார்க்கும் திசை எது?
a) கிழக்கு
b) மேற்கு
c) வடக்கு
d) தெற்கு
விடை : c) வடக்கு