Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

4. நீர்க்கோளம்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க: 

1. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல ______

அ) அதிகரிக்கும்

ஆ) குறையும்

இ) ஒரே அளவாக இருக்கும்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: ஆ) குறையும்

 

2. கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்

அ) புவியின் சுழற்சி

ஆ) வெப்பநிலை வேறுபாடு

இ) உவர்ப்பிய வேறுபாடு

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை: இ) மேற்கண்ட அனைத்தும்

 

3. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.

2. மித வெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.

4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

அ) 1 மற்றும் 2 சரி

ஆ) 1 மற்றும் 3 சரி

இ) 2, 3 மற்றும் 4 சரி

இ) 1, 2 மற்றும் 3 சரி

விடை: ஆ) 1 மற்றும் 3 சரி

 

4.கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

அ) புவித்தட்டுகள் இணைதல்

ஆ) புவித்தட்டுகள் விலகுதல்

இ) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: ஆ) புவித்தட்டுகள் விலகுதல்

 

5. கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?

அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி

ஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச் சமவெளி, கடல் அகழி

இ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத் திட்டு, கடல் அகழி

ஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத் திட்டு, கடல் அகழி

விடை: அ) கண்டத்திட்டு, கண்டச் சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி

 

6. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது?

அ) வளைகுடா நீரோட்டம் – பசிபிக் பெருங்கடல்

ஆ) லேப்ரடார் கடல் நீரோட்டம் – வட அட்லாண்டிக் பெருங்கடல்

இ) கேனரி கடல் நீரோட்டம் – மத்திய தரைக்கடல்

ஈ) மொசாம்பிக் கடல் நீரோட்டம் – இந்தியப் பெருங்கடல்

விடை: அ) வளைகுடா நீரோட்டம்-பசிபிக் பெருங்கடல்

 

II. கூற்று (A) காரணம் (R) கண்டறிக

1. கூற்று (A):- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தால் கொடுக்கப்படும்.

காரணம் (R):- இது கடல்களின் இயற்கையான நிறத்தைக் காட்டுகிறது

அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’விற்கான சரியான விளக்கம்

ஆ) A மற்றும் R சரி, ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை

இ) A சரி, ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்

 

2. கூற்று (A):- ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன.

காரணம் (R):- அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.

அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’விற்கான சரியான விளக்கம்

ஆ) A மற்றும் R சரி, ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை

இ) A சரி, ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்

 

3. கூற்று (A):- கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.

காரணம் (R):- இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’விற்கான சரியான விளக்கம்

ஆ) A மற்றும் R சரி, ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை

இ) A சரி, ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்

 

III. பொருத்துக.

1. மரியானா அகழி – அ) கடலில் உவர்ப்பியம் குறைவு

2. கிரேட் பேரியர் ரீப் – ஆ) ஜப்பான் கடற்கரையோரம் 

3. உயர் ஓதம் – இ) பசிபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி 

4. அதிக மழை – ஈ) ஆஸ்திரேலியா 

5. குரோசியோ நீரோட்டம் – உ) இரண்டாம் நிலை நிலத்தோற்றம் 

6. கண்டச் சரிவு – ஊ) அமாவாசை மற்றும் முழு நிலவு நாள் 

 

விடை: 

1. மரியானா அகழி – இ) பசிபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி

2. கிரேட் பேரியர் ரீப் – ஈ) ஆஸ்திரேலியா

3. உயர் ஓதம் – ஊ) அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்

4. அதிக மழை – அ) கடலில் உவர்ப்பியம் குறைவு

5. குரோசியோ நீரோட்டம் – ஆ) ஜப்பான் கடற்கரையோரம்

6. கண்டச் சரிவு – உ) இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

 

Join the conversation