Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

6. மனிதனும் சுற்றுச் சூழலும்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ____ என்கிறோம்.

அ) சுற்றுச்சூழல்

ஆ) சூழலமைப்பு

இ) உயிர்க் காரணிகள்

ஈ) உயிரற்றக் காரணிகள்

விடை: அ) சுற்றுச்சூழல்

 

2. ஒவ்வொர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ____ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அ) ஆகஸ்டு 11

ஆ) செப்டம்பர் 11

இ) ஜுலை 11

இ) ஜனவரி 11

விடை: இ) ஜுலை 11

 

3. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____ ஆகும்.

அ) மக்கள்தொகையியல்

ஆ) புறவடிவமைப்பியல்

இ) சொல்பிறப்பியல்

ஈ) நிலநடுக்கவரைவியல்

விடை: அ) மக்கள் தொகையியல்

 

4. விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____ ஆகும்.

அ) மீன்பிடித்தல்

ஆ) மரம் வெட்டுதல்

இ) சுரங்கவியல்

ஈ) விவசாயம்

விடை: இ) சுரங்கவியல்

 

5. பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _____

அ) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்

ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்

இ) பொருளாதார பொருள்கள்

ஈ) மூலப்பொருள்கள்

விடை: ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்

 

II. பொருத்துக.

1. ஒலிபெருக்கி – அ) ஒலி மாசுறுதல்

2. ரியோடி ஜெனிரோ பிரேசில் – ஆ) T வடிவ குடியிருப்பு

3. சிலுவை வடிவக் குடியிருப்புகள் – இ) புவி உச்சி மாநாடு, 1992

 

விடை: 

1. ஒலிபெருக்கி – அ) ஒலி மாசுறுதல் 

2. ரியோடி ஜெனிரோ பிரேசில் – இ) புவி உச்சி மாநாடு, 1992 

3. சிலுவை வடிவக் குடியிருப்புகள் – ஆ) T வடிவ குடியிருப்பு 

 

III. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூற்று (A) : படுக்கை அடுக்கில் உள்ள ஒசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.

காரணம் (R) : புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.

அ) A வும் R ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம்.

ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் A வானது R- ன் சரியான விளக்கமல்ல.

இ) A தவறு ஆனால் R சரி

ஈ) A மற்றும் R இரண்டும் தவறு

விடை: அ) A-வும் R- ம் சரி மற்றும் A-என்பது R-ன் சரியான விளக்கம்.

 

2. கூற்று (A) : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.

காரணம் (R) : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.

அ) A மற்றும் R இரண்டும் தவறு.

ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், A வானது R க்கு விளக்கம் தரவில்லை.

இ) A சரி, ஆனால், R தவறு.

ஈ) A மற்றும் R இரண்டும் சரி. A வானது R க்கு சரியான விளக்கம் தருகிறது.

விடை: இ) A சரி ஆனால் R தவறானது.

 

Join the conversation