3. மனித உரிமைகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு
அ) தென் சூடான்
ஆ) தென் ஆப்பிரிக்கா
இ நைஜீரியா
ஈ) எகிப்த்
விடை: ஆ) தென் ஆப்பிரிக்கா
2. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _____ உரிமைகள்
அ) சமூகம்
ஆ) பொருளாதாரம்
இ) அரசியல்
ஈ) பண்பாட்டு
விடை: இ) அரசியல்
3. ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் – எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுதந்திர உரிமை
இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
ஈ) சமய சுதந்திர உரிமை
விடை: இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _____
அ) 20 நாட்கள்
ஆ) 25 நாட்கள்
இ) 30 நாட்கள்
ஈ) 35 நாட்கள்
விடை: இ) 30 நாட்கள்
5. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.
ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.
iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.
அ) i மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii மற்றும் iii சரி
ஈ) i, ii மற்றும் iv சரி
விடை: ஈ) i, ii மற்றும் iv சரி
6. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ) (A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை: அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) க்கு சரியான விளக்கம்.
7. ஐ.நா. சபையின் படி ____ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை: ஈ) 18
8. ___ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
அ) இலக்கியம்
ஆ) அமைதி
இ) இயற்பியல்
ஈ) பொருளாதாரம்
விடை: ஆ) அமைதி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் _____ பிரிவுகளைக் கொண்டுள்ளது.
விடை: 30
2. அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ____ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.
விடை: 1976 ஆம் ஆண்டு 42 வது
3. தேசிய மனித உரிமை ஆணையம் _____ ஆண்டு அமைக்கப்பட்டது.
விடை: அக்டோபர் 12, 1993
4. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் ____
விடை: தமிழ்நாடு
III. பொருத்துக
1. வாக்களிக்கும் உரிமை – அ) பண்பாட்டு உரிமை
2. சங்கம் அமைக்கும் உரிமை – ஆ) சுரண்டலுக்கு எதிரான உரிமை
3. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை – இ) அரசியல் உரிமை
4. இந்து வாரிசுரிமைச் சட்டம் – ஈ) சுதந்திர உரிமை
5. குழந்தை தொழிலாளர்கள் – உ) 2005
விடை:
1. வாக்களிக்கும் உரிமை – இ) அரசியல் உரிமை
2. சங்கம் அமைக்கும் உரிமை – ஈ) சுதந்திர உரிமை
3. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை – அ) பண்பாட்டு உரிமை
4. இந்து வாரிசுரிமைச் சட்டம் – உ) 2005
5. குழந்தை தொழிலாளர்கள் – ஆ) சுரண்டலுக்கு எதிரான உரிமை