Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

1. மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. கூற்று (A) : மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. காரணம் (R) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.

அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.

இ (A) சரியானது மற்றும் (R) தவறானது.

ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை: அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

 

2. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது.

அ) ஏழை மக்கள் மீதான முதலீடு

ஆ) வேளாண்மை மீதான செலவு

இ) சொத்துக்கள் மீதான முதலீடு

ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை

விடை: ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை

 

3. நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.

அ) வளர்ச்சி

ஆ) வருமானம்

இ செலவீனம்

ஈ) சேமிப்புகள்

விடை: ஆ) வருமானம்

 

4. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது.

அ) மொத்த நிகர உற்பத்தி

ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி

இ) நிகர தேசிய உற்பத்தி

ஈ) நிகர உள்நாட்டு உற்பத்தி

விடை: இ) நிகர தேசிய உற்பத்தி

 

5. ……….. வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.

அ) சராசரி

ஆ) மொத்த

இ மக்கள்

ஈ) மாத

விடை: அ) சராசரி

 

6. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

அ) ஜப்பான்

ஆ) கனடா

இ ரஷ்யா

ஈ) இந்தியா

விடை: ஈ) இந்தியா

 

7. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

அ) இந்தியா

ஆ) பாகிஸ்தான்

இ சீனா

ஈ) பூடான்

விடை: இ) சீனா

 

8. கூற்று (A) : நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது.

காரணம் (R) : இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.

அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.

இ (A) சரியானது மற்றும் (R) தவறானது. 

ஈ) ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை: அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

 

9. கூற்று (A) : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.

காரணம் (R) : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.

அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.

இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.

ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை: அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

 

10. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?

அ) பாலினம்

ஆ) உடல்நலம்

இ) கல்வி

ஈ) வருமானம்

விடை: அ) பாலினம்

 

11. பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?

அ) ஆந்திரப்பிரதேசம்

ஆ) உத்திரப்பிரதேசம்

இ தமிழ்நாடு

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: இ) தமிழ்நாடு

 

12. பாலின விகிதம் என்பது

அ) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்

ஆ) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்

இ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு

ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

விடை: ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

 

13. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?

அ) தொழிற்சாலை

ஆ) பொருளாதார மேம்பாடு

இ) நிலையான மேம்பாடு

ஈ) பொருளாதார வளர்ச்சி

விடை: இ) நிலையான மேம்பாடு

 

14. பொருந்தாத ஒன்றை கண்டறி.

அ) சூரிய ஆற்றல்

ஆ) காற்று ஆற்றல் 

இ) காகிதம்

ஈ) இயற்கை வாயு

விடை: இ) காகிதம்

 

15. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்

அ) தமிழ்நாடு

ஆ) மேற்கு வங்காளம்

இ) கேரளா

ஈ) ஆந்திரப் பிரதேசம்

விடை: அ) தமிழ்நாடு

 

16. பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்

அ) இயற்கை

ஆ) புதுப்பிக்க இ யலும் வளம்

இ) புதுப்பிக்க இயலாத வளம்

ஈ) புதியவை

விடை: இ) புதுப்பிக்க இயலாத வளம்

 

17. அனல் மின் நிலையம் அதிக அளவிலான ………….. வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

அ) ஆக்சிஜன்

ஆ) நைட்ரஜன்

இ) கார்பன்

ஈ) கார்பன்-டை-ஆக்சைடு

விடை: ஈ) கார்பன்-டை-ஆக்சைடு

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ……….. என்று அறியப்படும்.

விடை: பொருளாதார மேம்பாடு

 

2. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ……………

விடை: புது டெல்லியில் சாஸ்திரி பவன்

 

3. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ……….

விடை: கேரளா

 

4. உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம் ………….

விடை: ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

 

5. நிலத்தடி நீர் என்பது ………. வளங்களின் ஓர் எடுத்துக்காட்டாகும்

விடை: புதுப்பிக்கத் தகுந்த

 

6. An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ………….

விடை: அமர்த்தியா சென்

 

III. பொருத்துக

1. மேம்பாடு – அ) வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம்

2. மனித வளம் – ஆ) புதுப்பிக்க தக்க வளங்கள் 

3. சூரிய சக்தி – இ) தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி 

4. 1972 – ஈ) கல்வி 

 

விடை: 

1. மேம்பாடு – இ) தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி

2. மனித வளம் – ஈ) கல்வி

3. சூரிய சக்தி – ஆ) புதுப்பிக்க தக்க வளங்கள் 

4. 1972 – அ) வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம்

 

நினைவில் கொள்க

1. அனல்மின் நிலையம் அதிக அளவு கார்பன் – டை- ஆக்சைடை வெளியேற்றுகிறது.

2. நிகர நாட்டு உற்பத்தி என்பது பொருளாதாரத்தின் முதன்மையான குறியீடு ஆகும்.

3. சராசரி வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.

4. 1972 ஆம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டம் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

 

Join the conversation