7. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. பழங்கால நகரங்கள் எனப்படுவது.
அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
ஆ) டெல்லி மற்றும் ஹைதராபாத்
இ) பம்பாய் மற்றும் கல்கத்தா
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை: அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
2. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்.
அ) சூரத்
ஆ) கோவா
இ) பம்பாய்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்
3. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
அ) சூயஸ் கால்வாய் திறப்பு
ஆ) நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
இ) ரயில்வே கட்டுமானம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்
4. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது.
அ) வர்த்தகத்திற்காக
ஆ) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக
இ) பணி புரிவதற்காக
ஈ) ஆட்சி செய்வதற்காக
விடை: அ) வர்த்தகத்திற்காக
5. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்.
அ) பம்பாய்
ஆ) கடலூர்
இ) மதராஸ்
ஈ) கல்கத்தா
விடை: இ) மதராஸ்
6. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
அ) புனித வில்லியம் கோட்டை
ஆ) புனித டேவிட் கோட்டை
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: இ) புனித ஜார்ஜ் கோட்டை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ……………….
விடை: 1853
2. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் ……………
விடை: ரிப்பன்
3. 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் …………. அறிமுகப்படுத்தியது.
விடை: இரட்டை ஆட்சி
4. நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் …………………
விடை: ஜோசியா சைல்டு
5. ……………………. இல் பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் 1639 ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.
விடை: 1639
III. பொருத்துக.
1. பம்பாய் – அ) சமய மையம்
2. இராணுவ குடியிருப்புகள் – ஆ) மலை வாழிடங்கள்
3. கேதர்நாத் – இ) பண்டைய நகரம்
4. டார்ஜீலிங் – ஈ) ஏழு தீவு
5. மதுரை – உ) கான்பூர்
விடை:
1. பம்பாய் – ஈ) ஏழு தீவு
2. இராணுவ குடியிருப்புகள் – உ) கான்பூர்
3. கேதர்நாத் – அ) சமய மையம்
4. டார்ஜீலிங் – ஆ) மலை வாழிடங்கள்
5. மதுரை – இ) பண்டைய நகரம்
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
1. கூற்று : இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.
காரணம் : பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.
அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை: இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
2. பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) i மட்டும்
ஆ) i மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
விடை: அ) (i) மட்டும்
3. கூற்று : ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்
காரணம் : அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை: இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.