Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

4. இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. மக்கள் __________ லிருந்து ____________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.

அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு

இ) மலையிலிருந்து சமவெளிக்கு

ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு

விடை: அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

 

2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ________ எனப்படுகிறது.

அ) குடிபுகுபவர்

ஆ) அகதி

இ) குடியேறுபவர்

ஈ) புகலிடம் தேடுபவர்

விடை: இ) குடியேறுபவர்

 

3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது. ___________

அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு

இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு

ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு

விடை: அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

 

4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ___________ ஐ சார்ந்தது.

அ) மக்களியல்

ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்

இ) அரசியல்

ஈ) பொருளாதாரம்

விடை: இ) அரசியல்

 

5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ____________

அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

ஆ) கால்நடை வளர்ப்பு

இ) மீன் பிடித்தல்

ஈ) வேட்டையாடுதல்

விடை: அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. நகரமயமாதல் …………………… எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன

விடை: மூன்று

 

2. …………………… என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்

விடை: வேலையின்மை 

 

3. இந்தியாவின் …………… மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.

விடை: புதுதில்லி

 

4. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ………….. இடம்பெயர்வு எனப்படும்.

விடை: தன்னார்வ

 

5. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ……………….. வளர்ச்சியால் அதிகரிக்கிறது.

விடை: தொழில்புரட்சி

 

III. பொருத்துக. 

1. குடிபெயர்தல் – அ) குடிபுகுபவர்

2. குடியேற்றம் – ஆ) வெளியேறுதல்

3. இழுக்காரணி – இ) வேலை வாய்ப்பின்மை

4. உந்து காரணி – ஈ) சமூக மற்றும் பன்னாட்டு இடம் பெயர்வு 

5. திருமணம் – உ) வேலை வாய்ப்புகள் 

 

விடை: 

1. குடிபெயர்தல் – ஆ) வெளியேறுதல்

2. குடியேற்றம் – அ) குடிபுகுபவர்

3. இழுக்காரணி – உ) வேலை வாய்ப்புகள்

4. உந்து காரணி – இ) வேலை வாய்ப்பின்மை

5. திருமணம் – ஈ) சமூக மற்றும் பன்னாட்டு இடம் பெயர்வு

 

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

1. கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.

காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விடை: அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Join the conversation