Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

5. இந்தியாவில் கல்வி வளர்ச்சி

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. வேதம் என்ற சொல் ____________ லிருந்து வந்தது.

அ) சமஸ்கிருதம்

ஆ) இலத்தீன்

இ) பிராகிருதம்

ஈ) பாலி

விடை: அ) சமஸ்கிருதம்

 

2. பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

அ) குருகுலம்

ஆ) விகாரங்கள்

இ) பள்ளிகள்

ஈ) இவையனைத்தும்

விடை: ஈ) இவையனைத்தும்

 

3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

அ) உத்திரப்பிரதேசம்

ஆ) மகாராஷ்டிரம்

இ) பீகார்

ஈ) பஞ்சாப்

விடை: இ) பீகார்

 

4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

அ) 1970

ஆ) 1975

இ) 1980

ஈ) 1985

விடை: இ) 1980

 

5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

அ) இங்கிலாந்து

ஆ) டென்மார்க்

இ) பீகார்

ஈ) போர்ச்சுக்கல்

விடை: ஈ) போர்ச்சுக்கல்

 

6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம் எது?

அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

ஆ) 1833 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

இ) 1853 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

ஈ) 1858 ஆம் ஆண்டுச் சட்டம்

விடை: அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

 

7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

அ) சார்ஜண்ட் அறிக்கை , 1944

ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

இ) கோத்தாரி கல்விக்குழு, 1964

ஈ) தேசியக் கல்விக் கொள்கை, 1968

விடை: ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

 

8. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) 1992

ஆ) 2009

இ) 1986

ஈ) 1968

விடை: இ) 1986

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வேதம் என்ற சொல்லின் பொருள் ……………..

விடை: அறிவு

 

2. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் ………….

விடை: அலெக்சாண்டர் கன்னிங்காம்

 

3. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் ………… ஆவார்,

விடை: இல்துத்மிஷ்

 

4. புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு ……………

விடை: 1992

 

5. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு ………….. ஆகும்.

விடை: அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)

 

6. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு …………

விடை: 1956

 

III. பொருத்துக.

1. இட்சிங் – அ) சரஸ்வதி மகால்

2. பிரான்சிஸ் சேவியர் – ஆ) இந்திய கல்வியின் மகா சாசனம்

3. உட்ஸ் கல்வி அறிக்கை – இ) மதராசில் மேற்கத்திய கல்வி

4. இரண்டாம் சரபோஜி – ஈ) கொச்சி பல்கலைக்கழகம்

5. சர் தாமஸ் மன்றோ – உ) சீன அறிஞர் 

 

விடை:

1. இட்சிங் – உ) சீன அறிஞர்

2. பிரான்சிஸ் சேவியர் – ஈ) கொச்சி பல்கலைக்கழகம்

3. உட்ஸ் கல்வி அறிக்கை – ஆ) இந்திய கல்வியின் மகா சாசனம்

4. இரண்டாம் சரபோஜி – அ) சரஸ்வதி மகால்

5. சர் தாமஸ் மன்றோ – இ) மதராசில் மேற்கத்திய கல்வி

 

IV. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

1. i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர்.

iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.

அ) i மற்றும் ii சரி

ஆ) ii மற்றும் iv சரி

இ) iii மற்றும் iv சரி

ஈ) i, ii மற்றும் iii சரி

விடை: ஈ) i, ii மற்றும் iii சரி

 

2. சரியான இணையைக் கண்டுபிடி.

அ) மக்தப்கள் – இடைநிலைப் பள்ளி

ஆ) 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி

இ) கரும்பலகைத் திட்டம் – இடைநிலைக் கல்வி குழு

ஈ) சாலபோகம் – கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

விடை: ஆ) 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி

Join the conversation