1. ஐரோப்பியர்களின் வருகை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அ) வாஸ்கோடகாமா
ஆ) பார்த்தலோமியோ டயஸ்
இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
விடை: இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்
2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லாந்து (டச்சு)
ஆ) போர்ச்சுகல்
இ) பிரான்ஸ்
ஈ) பிரிட்டன்
விடை: ஆ) போர்ச்சுகல்
3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
அ) பிரான்ஸ்
ஆ) துருக்கி
இ) நெதர்லாந்து (டச்சு)
ஈ) பிரிட்டன்
விடை: ஆ) துருக்கி
4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ……………………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) போர்ச்சுக்கல்
ஆ) ஸ்பெயின்
இ) இங்கிலாந்து
ஈ) பிரான்ஸ்
விடை: இ) இங்கிலாந்து
5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம் கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இ) ஆக்ரா கோட்டை
ஈ) டேவிட் கோட்டை
விடை: ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
அ) ஆங்கிலேயர்கள்
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
இ) டேனியர்கள்
ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
விடை: ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி …………………….. வர்த்தக மையமாக இருந்தது.
அ) போர்ச்சுக்கீசியர்கள்
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) டேனியர்கள்
விடை: ஈ) டேனியர்கள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. விடைகள் இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) _______ ல் அமைந்துள்ளது.
விடை: புதுடெல்லி
2. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் _____________ என்பவரால்
விடை: மன்னர் ஆதரிக்கப்பட்டார். இரண்டாம் ஜான்
3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் _____________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது
விடை: போர்ச்சுகீசிய அரசால்
4. முகலாயப் பேரரசர் _________________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
விடை: ஜஹாங்கீர்
5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ____________ என்பவரால் நிறுவப்பட்டது.
விடை: கால்பர்ட்
6. _______________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
விடை: நான்காம் கிரிஸ்டியன்
III. பொருத்துக
1. டச்சுக்காரர்கள் – அ) 1664
2. ஆங்கிலேயர்கள் – ஆ) 1602
3. டேனியர்கள் – இ) 1600
4. பிரெஞ்சுக்காரர்கள் – ஈ) 1616
விடை:
1. டச்சுக்காரர்கள் – ஆ) 1602
2. ஆங்கிலேயர்கள் – இ) 1600
3. டேனியர்கள் – ஈ) 1616
4. பிரெஞ்சுக்காரர்கள் – அ) 1664
IV. 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க.
1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 4 சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி
விடை: ஈ) 1, 2 மற்றும் 4 சரி
IV. 2) தவறான இணையைக் கண்டறிக.
1. அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்
ஆ) பெட்ரோ காப்ரல் – போர்ச்சுகல்
இ) கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
ஈ) கால்பர்ட் – பிரான்ஸ்
விடை: அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்