7. கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ……………….
அ) கேப்பிளாங்கா
ஆ) அகுல்காஸ் முனை
இ) நன்னம்பிக்கை முனை
ஈ) கேப்டவுன்
விடை: இ) நன்னம்பிக்கை முனை
2. எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ……………..
அ) பனாமா கால்வாய்
ஆ) அஸ்வான் கால்வாய்
இ) சூயஸ் கால்வாய்
ஈ) ஆல்பர்ட் கால்வாய்
விடை: இ) சூயஸ் கால்வாய்
3. மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க.
(i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.
(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.
(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.
அ) i சரியானது
ஆ) ii மற்றும் iv சரியானவை
இ) iii மற்றும் iv சரியானவை
ஈ) அனைத்தும் சரியானவை
விடை: ஆ) ii மற்றும் iv
4. சரியானவை ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ………………
அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
ஆ) இமய மலைத்தொடர்
இ) பிளிண்டர்கள் மலைத்தொடர்
ஈ) மெக்டோனெல் மலைத்தொடர்
விடை: அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
5. கல்கூர்லி சுரங்கம் ………………… கனிமத்திற்குப் புகழ்பெற்றது.
அ) வைரம்
ஆ) பிளாட்டினம்
இ) வெள்ளி
ஈ) தங்கம்
விடை: ஈ) தங்கம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. அட்லஸ் மலை ………………… கண்டத்தில் அமைந்துள்ளது.
விடை: ஆப்பிரிக்கா
2. ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ………………….. ஆகும்.
விடை: கிளிமஞ்சாரோ
3. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் ……………….
விடை: யூக்கலிப்டஸ்
4. ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் …………………… என அழைக்கப்படுகின்றன.
விடை: டவுன்ஸ்
5. அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் ……………………
விடை: தட்சின் கங்கோத்ரி
III. பொருத்துக.
1. பின்னாக்கள் – அ) புவியிடைக் கோட்பாடுகள்
2. கிரில் – ஆ) உப்பு ஏரி
3. நெருப்புக் கோழி – இ) சிறிய செம்மீன்
4. ஐரி ஏரி – ஈ) பறக்க இயலாத பறவை
5. புவியின் அணிகலன் – உ) சுண்ணாம்பு பாறை தூண்கள்
விடை:
1. பின்னாக்கள் – உ) சுண்ணாம்பு பாறை தூண்கள்
2. கிரில் – இ) சிறிய செம்மீன்
3. நெருப்புக் கோழி – ஈ) பறக்க இயலாத பறவை
4. ஐரி ஏரி – ஆ) உப்பு ஏரி
5. புவியின் அணிகலன் – அ) புவியிடைக் கோட்பாடுகள்
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1. கூற்று : அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும்.
காரணம் : அவை வளிமண்டலத்தின் மேலடுக்குக் காந்த புயலால் ஏற்படுகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு.
விடை: இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு
2. கூற்று : ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.
காரணம் : புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுகான காரணம் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்