Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

8. காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. …………………….. சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

அ) மனித

ஆ) விலங்கு

இ) காடு

ஈ) இயற்கை

விடை: அ) மனித

 

2. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

அ) தர்மாம்பாள்

ஆ) முத்துலட்சுமி அம்மையார்

இ) மூவலூர் ராமாமிர்தம்

ஈ) பண்டித ரமாபாய்

விடை: ஆ) முத்துலட்சுமி அம்மையார்

 

3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு.

அ) 1827

ஆ) 1828

இ) 1829

ஈ) 1830

விடை: இ) 1829

 

4. B.M. மலபாரி என்பவர் ஒரு

அ) ஆசிரியர்

ஆ) மருத்துவர்

இ) வழக்கறிஞர்

ஈ) பத்திரிகையாளர்

விடை: ஈ) பத்திரிகையாளர்

 

5. பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கம்(ங்கள்)?

அ) பிரம்ம சமாஜம்

ஆ) பிரார்த்தனை சமாஜம்

இ) ஆரிய சமாஜம்

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்

 

6. பெதுன் பள்ளி ……………….. இல் J.E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது

அ) 1848

ஆ) 1849

இ) 1850

ஈ) 1851

விடை: ஆ) 1849

 

7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

அ) வுட்ஸ்

ஆ) வெல்பி

இ) ஹண்டர்

ஈ) முட்டிமன்

விடை: இ) ஹண்டர்

 

8. சாரதா குழந்தைத் திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை ………… என நிர்ண யித்தது.

அ) 11

ஆ) 12

இ) 13

ஈ) 14

விடை: ஈ) 14

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. …………… 1819இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.

விடை: பெண் சிறார் சங்கம்

 

2. சிவகங்கையை சேர்ந்த ……………. என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாகப் போராடினார்.

விடை: வேலு நாச்சியார் 

 

3. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் ………………..

விடை: கோபால கிருஷ்ண கோகலே

 

4. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ……………… ஆவார்.

விடை: ஈ.வெ.ரா. பெரியார்

 

5. கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் …………….. ஆகும்.

விடை: விவேகவர்தினி

 

III. பொருத்துக.

1. பிரம்ம ஞான சபை – அ) இத்தாலிய பயணி

2. சாரதா சதன் – ஆ) சமூகத் தீமை

3. வுட்ஸ் கல்வி அறிக்கை – இ) அன்னிபெசன்ட்

4. நிக்கோலோ கோண்டி – ஈ) பண்டித ராமாபாய்

5. வரதட்சணை – உ) 1854

 

விடை: 

1. பிரம்ம ஞான சபை – இ) அன்னிபெசன்ட்

2. சாரதா சதன் – ஈ) பண்டித ராமாபாய்

3. வுட்ஸ் கல்வி அறிக்கை – உ) 1854

4. நிக்கோலோ கோண்டி – அ) இத்தாலிய பயணி

5. வரதட்சணை – ஆ) சமூகத் தீமை

 

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. சரியான இணையை கண்டுபிடி.

அ) மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே

ஆ) நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்

இ) விதவை மறுமணச் சட்டம் – 1855

ஈ) ராணி லட்சுமிபாய் – டெல்லி

விடை: அ) மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே

 

2. மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.

அ) குழந்தை திருமணம்

ஆ) சதி

இ) தேவதாசி முறை

ஈ) விதவை மறுமணம்

விடை: ஈ) விதவை மறுமணம்

 

3. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.

i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.

மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?

அ) i மட்டும்

ஆ) ii மட்டும்

இ) i மற்றும் ii

ஈ) இரண்டுமில்லை

விடை: இ) (i) மற்றும் (ii)

 

4. கூற்று : ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.

காரணம் : இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை

ஆ) கூற்று சரியானது. காரணம் தவறு.

இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .

விடை: இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

Join the conversation