கால அளவைகள்
பகுதி – 2
NATIONAL CARE ACADEMY
SI EXAM MATHS CLASS
கால அளவைகள்
பகுதி – 2
- கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள் “இன்று பிறந்தநாள் எனக்கு” என கலா கூறினாள். வாணியிடம் உனது பிறந்தநாள் நாளை எப்போது நீ கொண்டாடுவாய்? என கேட்டாள். அதற்கு வாணி “இன்று திங்கட்கிழமை நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்” என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்த கிழமையில் வந்திருக்கும் என காண்க: [2022 G4]
a) செவ்வாய் b) புதன்
c) வியாழன் d) வெள்ளி
விடை: b) புதன்
- இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து என்ன நாளாக இருக்கும்? [2012 PC]
a) சனி b) புதன்
c) வெள்ளி d) திங்கள்
விடை: c) வெள்ளி
- கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல? [2019 tnpsc]
a) 800 b) 1200
c) 2000 d) 2100
விடை: d) 2100
- கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம்? [6th new book]
a) 1994 b) 1985
c) 2000 d) 2007
விடை : c) 2000
- வாக்கியம் I: 2018 ஆம் ஆண்டு லீப் ஆண்டு.
வாக்கியம் II: 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் ஆண்டுகள் ஆகும்.
[2022 TNUSRB PC]
a) ஒன்று மட்டும் சரி
b) இரண்டு மட்டும் சரி
c) ஒன்று மற்றும் இரண்டு சரி
d) ஒன்று மற்றும் இரண்டு தவறு
விடை: b) இரண்டு மட்டும் சரி
- ஜனவரி 12ஆம் தேதி 2004 மற்றும் மார்ச் 7ஆம் தேதி 2004 இவற்றிற்கு இடையில் உள்ள நாட்களை கணக்கிடுக : [06-01-2024 TNPSC]
a) 52 நாள் b) 53 நாள்
c) 54 நாள் d) 51 நாள்
விடை : c) 54 நாள்
- ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை எத்தனை நாட்கள் உள்ளன? [6th new book]
a) 90 நாட்கள் b) 91 நாட்கள்
c) 92 நாட்கள் d) 93 நாட்கள்
விடை: b) 91 நாட்கள்
- இன்று திங்கட்கிழமை 66 நாள் கழித்து என்ன நாளாக இருக்கும்? [2018 PC]
a) புதன் b) சனி
c) செவ்வாய் d) வியாழன்
விடை : d) வியாழன்
- இன்று செவ்வாய்க்கிழமை என்னுடைய மாமா 45 நாட்களுக்குப் பிறகு வருவதாக கூறியுள்ளார். என்னுடைய மாமா எந்த கிழமை வருவார்? [10th new book]
a) திங்கள் b) புதன்
c) வெள்ளி c) சனி
விடை : c) வெள்ளி
- 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை எனில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி என்ன கிழமை? [2019 TNPSC]
a) வியாழன் b) புதன்
c) வெள்ளி d) சனி
விடை: c) வெள்ளி
- 1947 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி புதன்கிழமை என்றால் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி என்ன நாளாக வரும் என்று கண்டுபிடி: [2018 TNUSRB]
a) புதன் b) வெள்ளி
c) செவ்வாய் d) வியாழன்
விடை: b) வெள்ளி
- ஒருவர் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல ரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தை புதன்கிழமை 22:30 மணிக்கு தொடங்குகிறார். எந்த வித தாமதமும் இன்றி ரயில் செல்வதாக கொண்டால் மொத்த பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியை சென்றடைவார்? [10th new book] [1-4-2023 TNPSC]
a) வெள்ளி 6:30 am b) வெள்ளி 6:30 pm
c) புதன் 1:30 pm d) வியாழன் 11:00 am
விடை: a) வெள்ளி 6:30 am
- ஜனவரி 1,2000 ஆம் ஆண்டு சனிக்கிழமை எனில் டிசம்பர் 31, 2000 ஆம் ஆண்டு என்ன கிழமை ஆகும்?
a) ஞாயிறு b) திங்கள்
c) புதன் d) வெள்ளி
விடை: b) திங்கள்
- 1996 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி திங்கட்கிழமை எனில் அதே வருடம் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை எந்த தேதியில் அமையும்?
a) 4 தேதி b) 3 தேதி
c) 1 தேதி d) 2 தேதி
விடை : d) 2 தேதி
- 1.12.1991 அன்று ஞாயிற்றுக்கிழமை எனில் 1991 டிசம்பர் நான்காவது செவ்வாய்க்கிழமை எந்த தேதியில் அமையும்?
a) 12.1991 b) 24.12.1991
c) 12.1991 d) 31.12.1991
விடை: b) 24.12.1991