3. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
அ) மகல்வாரி முறை
ஆ) இரயத்துவாரி முறை
இ) ஜமீன்தாரி முறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: ஈ) இவற்றில் எதுவுமில்லை
2. எந்த கவர்னர் – ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
ஈ) மிண்டோ பிரபு
விடை: ஆ) காரன்வாலிஸ் பிரபு
3. மகல்வாரி முறையில் ‘மகல்’ என்றால் என்ன?
அ) வீடு
ஆ) நிலம்
இ) கிராமம்
ஈ) அரண்மனை
விடை: இ) கிராமம்
4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
அ) மகாராஷ்டிரா
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
விடை: ஈ) பஞ்சாப்
5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
விடை: ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: இ) வங்காளம்
7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
அ) மகாத்மா காந்தி
ஆ) கேசப் சந்திர ராய்
இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல்
விடை: இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஆ) மகாத்மா காந்தி
இ) திகம்பர் பிஸ்வாஸ்
ஈ) கேசப் சந்திர ராய்
விடை: அ) சர்தார் வல்லபாய் பட்டேல்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.__________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
விடை: மகல்வாரி
2. மகல்வாரி முறை __________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.
விடை: ஹோல்ட் மெகன்சி
3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சில் __________ ல் நடைபெற்றது.
விடை: செப்டம்பர் 1859
4. மாப்ளா கலகம் ___________ ல் நடைபெற்றது.
விடை: ஆகஸ்ட் 1921
5. ‘சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு _________
விடை: மே – 1918
III. பொருத்துக.
1. நிரந்தர நிலவரி திட்டம் – அ) மதராஸ்
2. மகல்வாரி திட்டம் – ஆ) இண்டிகோ விவசாயிகளின் துயரம்
3. இராயத்துவாரி முறை – இ) வடமேற்கு மாகாணம்
4. நீல தர்பன் – ஈ) வங்காளம்
5. சாந்தல் கலகம் – உ) முதல் விவசாயிகள் கிளர்ச்சி
விடை:
1. நிரந்தர நிலவரி திட்டம் – ஈ) வங்காளம்
2. மகல்வாரி திட்டம் – இ) வடமேற்கு மாகாணம்
3. இராயத்துவாரி முறை – அ) மதராஸ்
4. நீல தர்பன் – ஆ) இண்டிகோ விவசாயிகளின் துயரம்
5. சாந்தல் கலகம் – உ) முதல் விவசாயிகள் கிளர்ச்சி
IV. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க
1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது
விடை: இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
2. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
இ) தக்காண கலகம் 1873ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
விடை: ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.