வரலாறு
5. குப்தப் பேரரசு
குப்தரின் முக்கிய அலுவலர்கள்
அலுவலர்
பணி
மகாபிரதிகாரி
அரண்மனையின் தலைமை வரவேற்பாளர்
தண்டபஷிகா
காவல்துறையின் தலைமை அலுவலர்
மகாபிரஜாபதி
யானைப்படையின் தளபதி
வினயாஸ்டிஸ்தாபக் (Vinayasthisthapak)
மதவிவகாரங்களுக்கான தலைமை அலுவலர்
மஹாஸ்வபதி
காலாட்படையின் தளபதி
மஹாதண்டநாயகர்
நீதித்துறை அமைச்சர்
நவரத்தினங்கள்
காளிதாசர்
சமஸ்கிருதப் புலவர்
ஹரிசேனர்
சமஸ்கிருதப் புலவர்
அமரசிம்ஹர்
அகராதியியல் ஆசிரியர்
தன்வந்திரி
மருத்துவர்
காகபானகர்
சோதிடர்
சன்கு
கட்டடக்கலை நிபுணர்
வராகமிஹிரர்
வானியல் அறிஞர்
வராச்சி
இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருதப் புலவர்
விட்டல்பட்டர்
மாயவித்தைகாரர் (Magician)
குப்த அரசின் வரிகள்
குப்த பேரரசுக்கு நிலவருவாயே முக்கிய வருவாயாகும். இது மொத்த விளைச்சலில் 1/6 பாகம் முதல் 1/4 பாகம் வரை வசூலிக்கப்பட்டது.
பாகம் : விவசாயிகளால் விளைச்சலில் அரசனுக்கு வழங்கப்பட்ட பங்கு.
பலி : கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டாயவரி (குப்தர்களின் ஆட்சிக்கு முன்பு மக்கள் தானாக முன்வந்து அளித்தனர்).
போகம்: அந்தந்த பருவ காலத்தில் விளையும் பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை மக்களே மனமுவந்து மன்னருக்கு அளிப்பது.
உபரிகா – கூடுதலாக வசூலிக்கப்படும் வரி வருவாய்
காளிதாசர்
குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கவிஞர் காளிதாசராவார்.
அவர் இயற்றிய நூல்கள் :
‘அபிநய சாகுந்தலம்’ : சிறந்த வடமொழி நாடகம் (உலகின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது).
மாளவிகாக்னிமித்ரம், விக்ரமூர்வசியம் (நாடகங்கள்). ரகுவம்சம் மற்றும் குமார சம்பவம், ரிது சம்ஹாரம் (காப்பியங்கள்), மேகதூதம் (கவிதை).
பிற கவிஞர்கள் இயற்றியவை
பாலகப்யா : ஹஸ்த்யாயுர்வேதா (யானைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியது)
பாஸ்கரர் : மகாபாஸ்கர்யா மற்றும் பாஸ்கர்யா.
விசாகதத்தர் : முத்ராராட்சஷம், தேவிசந்திரகுப்தம்.
சூத்ரகர் : மிருச்சடிகம்.
பாரவி : கிருதார்ஜீன்யம் (அர்ச்சுனனுக்கும், சிவ பெருமானுக்கும் இடையே நடைபெற்ற மோதலைக் கூறும் கதை)
தண்டின் : காவியதரிசனம், தசகுமாரசரிதம்.
சுபந்து : வாசவதத்தம்.
விஷ்ணு சர்மா : பஞ்சதந்திரக் கதைகள்.
அமரசிம்ஹர் : அமரகோசம்.
அறிவியல்
கணிதம், வானவியல், ஜோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் குப்தர் காலத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது.
ஆரியபட்டர்
* இக்காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டர் சிறந்த கணிதமேதை மற்றும் வானவியல் அறிஞர்.
* கி.பி. 499-ஆம் ஆண்டு அவர் ஆரியபட்டியம் என்ற நூலை எழுதினார். அது கணிதம், வானவியல் தொடர்புடையது.
• சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுவதை அறிவியல் அடிப்படையில் இந்நூல் விளக்குகிறது.
* பூமி உருண்டை வடிவிலானது என்றும் அது தன்னைத்தானே சுற்றி வருகிறது என்றும் முதன்முதலில் அறிவித்தவர் ஆரியபட்டரேயாவர்
* ஆனால், இக்கருத்துகளை அவருக்குப்பின் வந்த வராஹிமிஹிரரும் பிரம்மகுப்தரும் நிராகரித்தனர்.
வராஹிமிஹிரர்
* வராஹமிஹிரர் ஐந்து வானவியல் அமைப்புகளைக் கூறும் பஞ்ச் சித்தாந்திகா என்ற நூலைப் படைத்தார்.
* ஜோதிடக் கலையில் சிறந்த புலமையுடையவராகவும் அவர் திகழ்ந்தார் அவரது படைப்பான பிருகத்சம்ஹிதை வடமொழி இலக்கியத்தில் சிறந்த நூலாகப் போற்றப்படுகிறது.
• வானவியல், ஜோதிடம், புவியியல், கட்டடக் கலை, வானிலை விலங்குகள், மணமுறைகள், சகுனங்கள் என பல்வேறு தலைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
• அவர் எழுதய பிருகத்ஜாதகம் என்ற நூல் ஜோதிடக் கலைக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது.
வாக்பதர்
• மருத்துவத்துறையில் சிறந்த மேதையான வாக்பதர் குப்தர் காலத்தின் வாழ்ந்தவர். பண்டைய இந்தியாவின் மருத்துவ மும்மணிகளில் வாக்பதர் ஒருவர். குப்தர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த மற்ற இருவ சரகரும், சூஸ்ருதரும் ஆவர்
* வாக்பதர் ‘அஷ்டாங்க சம்கிரஹம்’ அல்லது மருத்துவத்தின் எட்டு பிரிவுகள் என்ற நூலை எழுதியுள்ளார்.
பிரம்மகுப்தர்
• குப்தர்களின் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய கணிதமேதை பிரம்மகுப்தராவார். இவர் தனது பிரம்ம சித்தாந்தா எனும் நூலில் ஈர்ப்பியல் விதிகளை விளக்கியுள்ளார்.
சில முக்கிய வம்சங்கள் மற்றும் ஆட்சியாளர்கள்
தென்னிந்தியா
வம்சம்
தலைநகரம்
துவங்கியவர்
புகழ் பெற்ற ஆட்சியாளர்கள்
பல்லவர்கள்
காஞ்சிபுரம்
சிம்ம விஷ்ணு
மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றி தீக்கிரையாக்கியவர். வாதாபிகொண்டான் எனும் பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டவர்.
கல்யாணி சாளுக்கியர் (கீழை)
கல்யாணி
தைலா-II
சோமவரா-1 : தனது தலைநகரை மானியகேடகத்திலிருந்து கல்யாணிக்கு மாற்றியவர்.
விக்கிரமாதித்யா-III
பாதாமி சாளுக்கியர்கள் (மேலை)
பாதாமி (வாதாபி)
புலிகேசி-1
புலிகேசி-II : ஹர்ஷர் மற்றும் மகேந்திரவர்ம பல்லவனின் சமகாலத்தவர்.இருவரையும் தோற்கடித்தவர்.ஆனால் நரசிம்மவர்மன்-1-ஆல் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
யுவான் சுவாங் இவரது அரசவைக்கு வருகை புரிந்தார்.
யாதவர்கள்
தேவகிரி
பில்லண்ணா
இராமச்சந்திரர் (மாலிக் கபூரால் வீழ்த்தப்பட்டார் )
மேற்கு கங்கர்கள்
கோலார் தலக்கல்
கொங்கணிவர்மன் மாதவன்
தன்வீர்தா
ஹொய்சாளர்
தேவசமுத்திரம் (பிறகு திருவண்ணாமலை)
விஷ்ணுவர்தன்
வீரபல்லாளன் – சாளுக்கிய அரசன் சோமேஸ்வரன் – IV ஐ தோற்கடித்தார்.
இராஷ்டிரகூடர்கள்
மானியயகேடம்
தண்டி துர்கர்
அமோகவர்ஷன் – இவர் விக்ரமாதித்யனுடன் ஒப்பிடப்படுகிற கவிராஜ மார்கம் எனும் நூலை இயற்றினார்
வடஇந்திய அரசர்கள்
வம்சம்
தலைநகரம்
துவங்கியவர்
புகழ்பெற்ற ஆட்சியாளர்கள்
பாலர்கள்
பாடலிபுத்திரம், கௌடா
கோபாலர்
தர்ப்பாலர் – நாளந்தா பல்கலைக்கழகத்தை மறுசீரமைந்தன விக்கிரம பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தியவர். பிரதிஹாரவள்ளன் செராஜனையும் இராஷ்டிரகூட பள்ளன் அமோக வர்ஷனையும் வீழ்த்தி கன்னோன்றும் கைப்பற்றியவன்.
தேவபாயன் – ஒடிஸா மற்றும் அஸாமைத் தோற்கடித்தவர்.
மகிபாலன் – இராஜேந்திர சோழனால் தோற்கடிக்கப்பட்டார்.
குஜ்ஜார
பிரதிஹாரர்கள்
ஜோத்பூர், மாள்வா
ஹரிச்சந்திரன்
மிஹிர்போஜன் – ஆதிவரானுன் எனும் பட்டத்தினைச் சூட்டிக்கொண்டவர்
வாகடகர்கள்
வத்ஸகும்லா
வித்யாசக்தி
பிரவர் சேனா-1-அஸ்வமேத பாகங்களை மேற்கொண்டார்.
சேனர்கள்
விக்கிரமபுரம், விஜயபுரம்
விஜயசேனா
பல்லாசேனா, லக்ஷ்மண்சேனா.
கிழக்கு கங்கர்கள்
கலிங்கநகர், கட்டாக்
அனந்தவர்மன் மாதவன்
நரசிம்மதேவன்-1கோனார்க்கிலுள்ள சூரியன் கோவிலை கட்டியவர்
முக்கிய அவைப் புலவர்கள்
புலவர்கள்
ஆதரித்த அரசர்கள்
காலம்
புலவர்கள்
ஆதரித்த அரசர்கள்
காலம்
ஹரிசேனர்
சமுத்திர குப்தர்
குப்தர்
பாவபூதி
யசோதவர்மன் (கண்ணோஜ்)
இராஜபுத்திரர்
தண்டின்
இரண்டாம் நாசிம்மவர்ம பல்லவன்
பல்லவர்கள்
இராஜசேகர்
மகிபாலா
பிரதிகாரர்
பாணபட்டர்
ஹர்ஷவர்த்தனர்
புஷ்ய பூதி
காளிதாசர்
இரண்டாம் சந்திரகுப்தர்
குப்தர்
ரவிகீர்த்தி
இரண்டாம் புலிகேசி
சாளுக்கியர்
சாதவாகனர்
சில முக்கியமான இராசபுத்திர அரசுகள்
இராசபுத்திர வம்சம்
ஆட்சிப் பிரதேசம்
தலைநகரம்
தோற்றுவித்தவர்
பிரதிகாரர்கள்
கன்னோஜ்
அவந்தி, கன்னோஜ்
நாகபட்டர்-1
பாலர்கள்
வங்காளம்
கோபாலர்
சௌகன்
டெல்லி, அஜ்மீர்
டெல்லி
வாசுதேவா
தோமர்
டெல்லி, ஹரியானா
தில்லிகா
ரத்தோர்/கத்வால்
கன்னோஜ்
கன்னோஜ்
சந்திரதேவா
சிசோதியர், குகிலர்
மேவார்
சித்தூர்
பாபரால ஹமீர்-1
சந்தேலர்
பந்தல்கண்ட்
கஜூராஹோ, மஹோடா, கலிஞ்சார்
நனுக் சந்தேலா
சேனர்கள்
வங்காளம்
சோலங்கிகள் (சாளுக்கியர் வழி வந்தோர்)
கத்தியவார், குஜராத்
அனிஹா, வாதாபி
மூலராஜா – I
கல்சூரி
சேதி
திரிபுரி
கொக்காலா – I
இராஷ்டிரகூடர்
தென்னிந்தியா
மானியகேடகம் (மால்கெண்ட்), தாரா
தண்டி துர்க்கச்
முக்கிய அந்நியப் படையெடுப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள்
வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள்
ஆரியர்கள் முதல் அகமதுஷா அப்தாலி வரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அந்தியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவின் மீது படைபெடுத்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்
படையெடுப்பாளர்
முக்கிய குறிப்புகள்
சைரஸ்
பாரசீகத்தின் அக்மேனியப் பேரரசின் மிகச் சிறந்த படையெடுப்பாளரான மகாசைரஸ் கி.மு. 550 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார். இந்தியாவிற்கெதிராகப் படையெடுத்து வந்த முதல் படையெடுப்பாளர் இவர்தான் எனக் கருதப்படுகிறது.
முதலாம் டேரியஸ்
சைரஸின் பேரனான முதலாம் டேரியஸ் கி.மு. 518-இல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த சிந்து, பஞ்சாப் ஆகியவற்றைக். கைப்பற்றினார். இப்பகுதி இவரது பேரரசின் 20-ஆவது சாட்ரபியாக (மாகாணம்) திகழ்ந்தது.
அலெக்சாண்டர் மாசிடோனியா
இந்தியாவின் மீது பபெடுத்த முதல் ஐரோப்பிய படையெடுப்பாளர் (வற்றுப் பதிவுகளின்படி) ஆவார். இதை . 324-இல் இந்தியா மீது படையெடுத்து வந்தார். ஜீலம் நதிக்கரையில் அவொண்டர் இந்திய பருநோத்தமனுடன் (போரஸ்) போரிட்டு வென்றதுடன், புருஷோத்தமனின் வீரத்தை மெச்சி மீண்டும் அறியணை அமர்த்தினார். கி.மு. 323-இல் மாசிடோனியா திரும்பும் வழியில் பாபிலோனில் மரணமடைந்தார்.
விமாகாட்பீசஸ்
பெஷாரை ஆட்சி செய்து வந்த குஷாண மரபைச் சார்ந்த விமாகாட்பீசஸ் அல்லது இரண்டாம் காட்பீசஸ் கி.பி. 70-வடமேற்கு இந்தியாவின் மதுரா வரை முன்னேறினார். இவரின் படையெடுப்பினால் இந்தியாவில் சில காலம் குஷாண ம ஆட்சி நடைபெற்றது. மேலும் காந்தாரக்கலை எனும் புதிய வடிவிலான சிற்பக்கலை தோன்றியது.
மூகமது பின் காசிம்
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமிய மன்னர், கி.பி. 712-இல் சிந்துப் பகுதியின் மீது படையெடுத்து அதன் ஆட்சியாளர் தாஹிரைக் கொன்று, முல்தான் நகரை கைப்பற்றினார்.
கஜினி முகமது
கி.பி. 1001-இல் இந்தியாவின் மீது தனது முதல் படை யெடுப்பைத் துவங்கிய கஜினி முகமது. அதன் பிறகு 17 முறை படையெடுத்து வந்தார். 1001-ஆம் ஆண்டில் பாலர் மரபின் ஜெயபாலர், 1008-ஆம் ஆண்டில் அனந்தபாவர், 1018-ஆம் ஆண்டில் கன்னோசியிம் ராஜ்யபாலர் போன்றோரை தோற்கடித்தார். 1024-25 இல் சோலங்கி அரசர் முதலாம் பீமதேவனை முறியடித்தார்,சோமநாதனம் ஆலயத்தை கொள்ளையடித்தார். இது அவரது கடைசி படையெடுப்பாகும். இவர் 1030-இல் மரணமடைந்தார்.
கோரி முகமது (மொய்சுதீன் முகமது)
பாரசீகத்தின் கஜினி பகுதியிலிருந்து இந்தியாவின் மீது படையெடுத்தவர். 1191-ஆம் ஆண்டு பிருதிவிராஜ் சௌகானுடன் ஏற்பட்ட முதலாம் தரெயின் போரில் தோல்வியடைந்தார். 1192-ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டாம் தரெயின் போரில் பிருதிவிராஜ் சௌகானை தோற்கடித்துக் கொன்றார். டெல்லி கல்தானியத்தினை தோற்றுவித்த குத்புதீன் ஐபெக் இவரின் ஆடிமையாவார்
செங்கிஸ்கான்
மங்கோலிய படையெடுப்பாளரான செங்கிஸ்கான், கி.பி. 1221-ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்து சிந்து நதிக்கரையின் சில பகுதிகளைக் கைப்பற்றினார். அப்போது டெய்லி கல்தானியத்தை இல்டுமிஷ் ஆட்சி செய்துவந்தார். உல வாலாற்றிலேயே மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் எனும் பெருமையைப் பெற்றவர் ஆவார்.
தைமூர்
சாமர்கண்ட்டை ஆண்டு வந்த துருக்கி-மங்கோலிய படையெடுப்பாளரான தைமூர் கி.பி. 1398-இல் டெல்லியின் மீது படையெடுத்தார். இவரின் படையெடுப்பாய் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு ஏராளமான செல்வங்களை கொள்ளையிடப்பட்டன மேலும் டெல்லி கல்தானியத்தை ஆண்டு வந்த துக்ளக் வம்சம் முடிவுக்கு வந்தது. இவரால் முல்தான் பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட கிசிர்கான் கி.பி. 1414-இல் சையது மரபு எனும் மரபைத் தோற்றுவித்து டெல்லி சுல்தானியத்தை ஆட்சி புரிந்தார்.
நாதிர்ஷா
ரானிய ஆட்சியாளரான நாதிர்ஷா கி.பி. 1738-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்து வந்து டெல்லியை ஆண்டு வந்த முகலாய் அரசரான முகமதுஷா என்பவரை சிறை பிடித்தார். மேலும் ஷாஜகானால் உருவாக்கப்பட்ட மயிலாசனம் மற்றும் கோஹினூர் வைரம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றார்.
அகமது ஷா அப்தாலி
ஆப்கானிய அரசரான அகமது ஷா அப்தாலி 1747 முதல் 1767 வரையிலான காலத்தில் பலமுறை இந்தியாவின் மீது படையெடுத்துள்ளார். அதில் ஒருமுறையாக 1761-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போதுதான் அவருக்கும் சதாசிவராய் மற்றும் பாலாஜி பாஜிராய் தலைமையிலான மராத்தியர்களுக்கும் புகழ்பெற்ற மூன்றாம் பானிபட் போர் நடைபெற்றது. இதில் அகமதுஷா அப்தாலி வெற்றி பெற்றார்.
இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள்
பயணிகள்
முக்கிய குறிப்புகள்
மெகஸ்தனீஸ்-கிரேக்கம்
அலெக்சாண்டரின் படைத்தளபதியான செல்யூகஸ் நிகேடரால் சந்திரகுப்த மௌரியரின் அரசவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். இவர் ‘இண்டிகா’ எனும் நூலை படைத்துள்ளார்.
புனித தாமஸ்
கி.பி. 52 இல் இந்தியா வந்த இவர், இந்தியாவிற்கு வந்த முதல் கிறிஸ்துவ மத போதகர் எனப்படுகிறார். இயசின் வருகையின் போது இந்தோ-பார்த்திய மன்னரான ‘கோண்டோ பர்ளஸ்’ இந்தியாவின் முக்கிய ஆட்சியாளராகத் திகழ்ந்தார்.
பாஹியான் -சீனா
புத்தத்துறவியான இவர் இரண்டாம் சந்திரகுப்தரின் (விக்ரமாதித்யர்) காலத்தில் புத்தர் பிறந்த இடமான லும்பினியைக் காண இந்தியா வந்தார். தனது பயண அனுபவங்களை ‘புத்த சமய அரசுகள் பற்றிய பதிவுகள்’ (Record on Budhist Kingdoms) என்ற பெயரில் தொகுத்துள்ளார்.
யுவான் சுவாங் சீனா
ஹர்ஷவர்த்தனரின் காலத்தில் இந்தியா வந்தார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கிப் பயின்றுள்ளார். மேலும் சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி, பல்லவ மன்னர் நரசிம்மவர்மன் ஆகியோரின் அரசவைகளுக்கும் வருகை புரிந்துள்ளார். தனது இந்தியப் பயண அனுபவத்தை ‘சீ-யு-கி’ (அ) ‘மேற்குலகின் பதிவுகள்’ என்ற பெயரில் படைத்துள்ளார்.
அஸ்பருனி – பாரசீகம்
பாரசீகத்தைச் சார்ந்த இவர் கஜினி முகமதுவுடன் இந்தியா வந்தார். தஹிக்-இ-ஹிந்த் (Tahqiq-i-hind) எனும் நூலை இயற்றியுள்ளார். இவர் இந்தியவியலைத் (Indology) தோற்றுவித்தவர். எனவே இவர் இந்தியவியலின் தந்தை எனப்படுகிறார்.
மார்கோபோலோ – வெனிஸ்
இவர் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவரின் இந்தியப் பயணத்தின் போது காகதிய நாட்டை ருத்ரமாதேவியும் தமிழகத்தை முதலாம் மாறவர்மன் குலசேகரனும் ஆட்சி செய்து வந்தனர்.
இபின் பதுதா மொராக்கோ
இவர் இந்தியா வந்த பொழுது டெல்லி கல்தானியத்தை முகமது-பின்-துக்ளக் ஆட்சி செய்தார். மதுரை கல்தானியத்தை ஜலாலுதீன் அஷன் ஷா உருவாக்கியிருந்தார். இவர் சுல்தான் ஜலாலுதீன் ஷாவின் மகனை திருமணம் செய்தார்.இவரின் பயனாக்குறிப்பு ரிஹ்லா எனப்படுகிறது.
நிக்கோலோ கோண்டி – இத்தாலி
இத்தாலிய வணிகரான இவர் 1420-ஆம் ஆண்டு விஜயநகர அரசை ஆட்சி செய்த முதலாம் தேவராயரின் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.
அப்துல் ரசாக் – பாரசீகம்
வணிகரான இவர் பாரசீக மன்னரின் விஜயநகர அரசிற்கான தூதரக 1442-ஆம் ஆண்டு கோழிக்கோட்டை வந்தடைந்தார். இவரின் வருகையின் போது விஜயநகரை இரண்டாம் தேவராயர் ஆட்சி புரிந்தார்.
வில்லியம் ஹாக்கிள்ஸ் – இங்கிலாந்து
1609-இல் ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்தார். முதலாம் ஜேம்ஸ் மன்னரின் பரிந்துரைக் கடிதத்துடன் வந்து இவர், இந்தியாவில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க ஜஹாங்கீரிடம் அனுமதி கோரினார்.
தாமஸ் ரோ – இங்கிலாந்து
1615-இல் ஜஹாங்கீரின் அரசவைக்கு வந்த இவர் சூரத்தில் வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றார்.
பிரான்காய்ஸ் பெர்னியர்
பிரெஞ்சு மருத்துவரான இவர் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தின் போது இந்தியா வந்தார். 1658 முதல் 1871 வரை இந்தியாவில் தங்கியிருந்த இவர் ஒளரங்கசீப்பின் பிரத்யேக மருத்துவராகத் திகழ்ந்தார்.
வாஸ்கோடகாமா
போர்ச்சுக்கீசிய கடல் பயணியான வாஸ்கோடகாமா 1498 மே 20 அன்று கோழிக்கோடு வந்தார். அப்பகுதியின் அரசரான சாமரின் அவரை வரவேற்றார். இவர் கடல்வழியில் இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவரின் இந்தியாவிற்கான கடல்வழி கண்டுபிடிப்பு பிற்கால இந்தியாவில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது
இதர வெளிநாட்டுப் பயணிகள்
பயணி
வருகைபுரிந்த காலம்
பயணி
வருகைபுரிந்த காலம்
கைலாஷ் -ஈரான்
கி.மு. 8-ஆம் நூற்றாண்டு
தல்மாகோஸ்
பிந்துசாரர்
மிலேட்டம், ஹெரோடோட்டஸ் – கிரேக்கம்
கி.மு. 6-ஆம் நூற்றாண்டு
பர்போஷா
கிருஷ்ணதேவராயர்
நியோசர்ச், அரிஸ்டோடிளுஸ் – கிரேக்கம்
அலெக்ஸாண்டர் காலம்
நிகிதின்
பாமினி வம்சம்
ஸ்ட்ராப்போ, பிளினி – கிரேக்கம்
கி.பி. முதலாம் நூற்றாண்டு
சுலைமான்
ஸ்தாணு ரிவிவக்மா
காஸ்மோஸ் -கிரேக்கம்
கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
ரால்ஃப் ஃபிச்
அக்பர்
இட்சிங் – சீனா
கி.பி. 7-ஆம் நூற்றாண்டு
முனூச்சி
ஜஹாங்கீர்
அரசர்களால் எழுதப்பட்ட நூல்கள்
ஹர்ஷவர்தனர்
ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகநந்தா
கிருஷ்ணதேவராயர்
ஆமுக்த மால்யதா, உஷாபரிணயம், ஜாம்பவதி கல்யாணம்
மகேந்திரவர்மன்
மத்தவிலாச பிரகாசனம், தட்சிணசித்திரம், பாகவத வியூகம்
அதிவீர ராமபாண்டியன்
நைடதம்
இரகுநாதநாயக்கர்
ருக்மணி பரிநயம், பாரிஜாதம், இராமாயணம் (தெலுங்கு)
விஜயராகவ நாயக்கர்
இரகுநாதபயுதம்
திருமலை நாயக்கர்
சிதம்பர புராணம்
பாபர்
பாபர்நாமா (அ) துசுக்-இ-பாபரி (துருக்கி மொழி) அப்துர் இரஹிம் கான்இ கானா இதனை பாரசீகத்தில் மொழிபெயர்த்தவர். இரஹிம் கான் பைராம் கானின் மகன்.
அரசர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
ஹர்ஷசரிதா
பாணபட்டர்
அக்பர் நாமா
அபுல்பாசல்
பிரிதிவிராஜ் ராசோ
சந்த் பர்தாய்
ஹுமாயூன் நாமா
குல்பதான் பேகம்
ஷா நாமா
பிர்தௌசி
ஷாஜஹானா நாமா
இனயத் கான்
புதிதாகக் கண்டறியப்பட்ட நாடுகள்
நாடு
கண்டுபிடிப்பாளர்
கண்டுபிடித்த வருடம்
பிரேசில்
பெட்ரோ அல்வாரஸ்
1500 ஏப்ரல் 22
அண்டார்டிகா
நதானியேல் பாமர்
1820
ஆஸ்திரேலியா
ஜேம்ஸ் குக்
1770 ஆகஸ்ட் 22
நன்னம்பிக்கை முனை
பர்த்தலோமியா டயஸ்
1488 மார்ச் 12
அமெரிக்கா
கொலம்பஸ்
1492
வட அமெரிக்கக் கரை
ஜான் கபட்
ஹவாய் தீவுகள்
காப்டன் ஜேம்ஸ் குக்
1778 ஜனவரி 18
தென் துருவம்
ராபர்ட் பியரி
1911 டிசம்பர் 14
மேற்கிந்தியா
கொலம்பஸ்
1492
நியூசிலாந்து
ஆபேல் டாஸ்மான்
1642 டிசம்பர் 13
இந்தியாவிற்கான கடல்வழி
வாஸ்கோடகாமா
1498
பழங்கால இந்திய நாணயங்கள்
* பழங்கால இந்திய நாணயங்களில் உருவங்கள் சாதனங்கள் /முத்திரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. சாதனையாளர் உருவங்கள் பொறிக்கப்படவில்லை.
* பழங்கால இந்தியாவின் நாணயங்களில் முத்திரை இடப்பட்டிருந்தன. (இந்த வழக்கம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது).
* இவ்வகை நாணயங்கள் பீகார் மற்றும் கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
* பிந்தைய மௌரியர் காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
* முதன் முதலில் இந்தோ – கிரேக்க அரசர்களே நாணயங்களில் தங்களின் உருவங்களை பொறித்தனர்.
* கிரேக்கர்களே இந்தியாவில் முதன்முதலாகத் தங்க (Gold) நாணயங்களை வெளியிட்ட ஆட்சியாளர்கள் ஆவர்.
* குஷாண மரபு அரசர்களே முதன்முதலில் அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டனர். மேலும் குப்தர்களின் தங்க நாணயங்களின் தூயத்தன்மையைக் காட்டிலும் குஷாணர்களின் தங்க நாணயங்கள் அதிக தூய்மை வாய்ந்ததாகும்.
* குஷாணர்கள் ‘தினார்’ வகை தங்க நாணயங்களை வெளியிட்டனர். இவர்கள் எந்த ஒரு வெள்ளி நாணயங்களையும் வெளியிடவில்லை.
* குஷாணர் நாணயங்களில் ஹெராக்கில் (கிருஷ்ணர்) மற்றும் சிவன் உருவங்கள் காணப்படுகிறது.
* துவக்க கால இந்தியாவில் குப்தர்கள் காலத்தில்தான் மிக அதிக அளவில் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன.
* இரண்டாம் சந்திரகுப்தர் வெள்ளி மற்றும் தாமிர நாணயங்களை வெளியிட்டார்.