Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

3. சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. சமயச்சார்பின்மை என்பது

அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது

ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.

இ) எந்தசமயத்தைச்சார்ந்தகுடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாகவாழ்தல்

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணைக்கமாக வாழ்தல்

 

2. இந்தியா ஒரு ………….. கொண்ட நாடாகும்.

அ) பல்வேறு சமயநம்பிக்கை

ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை

இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

 

3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

அ) 1951

ஆ) 1976

இ) 1974

ஈ) 1967

விடை: ஆ) 1976

 

4. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

அ) அடிப்படை உரிமைகள்

ஆ) அடிப்படை கடமைகள்

இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

ஈ) அரசியலமைப்பின் முகவுரை

விடை: ஈ) அரசியலமைப்பின் முகவுரை

 

5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது

அ) நீதித்துறை

ஆ) பாராளுமன்றம்

இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை

ஈ) அடிப்படை உரிமைகள்

விடை: ஈ) அடிப்படை உரிமைகள்

 

6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?

அ) சமய போதனைகள்

ஆ) நீதி நெறிக்கல்வி

இ) உடற்கல்வி

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: ஈ) இவற்றுள் எதுவுமில்லை

 

7. ஒரு நாடு சமயச்சார்ப்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது

அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்

ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால்

இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்

விடை: இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. சமயம் நமக்கு ……………….. போதிக்கவில்லை.

விடை: பகைமையை

 

2. சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ………………… அளிக்கிறது.

விடை: சமஉரிமை

 

3. …………….. என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.

விடை: ஆத்திகம்

 

4. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் ……………. மற்றும் …………. ஊக்குவிப்பதாகும்.

விடை: தேசிய ஒற்றுமைமையயும், ஒருமைப்பாட்டையும்

 

5. பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ………………….. காட்டுவதைத் தடை செய்கிறது.

விடை: பாகுபாடு

 

III. பொருத்துக.

1. நாத்திகம் – அ) Secularism என்ற பதத்தை உருவாக்கியவர் 

2. குழந்தைகள் – ஆ) சமூகச் சீர்திருத்தவாதி 

3. தீன் – இலாஹி – இ) கடவுள் நம்பிக்கையற்றிருப்பது 

4. அரசியலமைப்பு – ஈ) வருங்கால குடிமக்கள் 

5. ஹோல்யோக் – உ) தெய்வீக நம்பிக்கை

6. ராஜாராம் மோகன்ராய் – ஊ) 1950 

 

விடை: 

1. நாத்திகம் – இ) கடவுள் நம்பிக்கையற்றிருப்பது

2. குழந்தைகள் – ஈ) வருங்கால குடிமக்கள்

3. தீன் – இலாஹி – உ) தெய்வீக நம்பிக்கை

4. அரசியலமைப்பு – ஊ) 1950

5. ஹோல்யோக் – அ) Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்

6. ராஜாராம் மோகன்ராய் – ஆ) சமூகச் சீர்திருத்தவாதி 

 

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.

iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

அ) i, ii மட்டும்

ஆ) ii, iii மட்டும்

இ) iv மட்டும்

ஈ) i, ii, iv மட்டும்

விடை: ஈ) i, ii, iv மட்டும்

 

2. கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.

காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.

i) கூற்று சரி காரணம் தவறு

ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

iii) கூற்று தவறு, காரணம் சரி

iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விடை: ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

 

3. கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.

காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.

i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

iii) கூற்று தவறு, காரணம் சரி

iv) இரண்டும் தவறு

விடை: i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

 

4. தவறான இணையைத் தேர்க.

i) தீன் இலாகி – ஒரு புத்தகம்

ii) கஜுராஹோ – இந்து கோவில்

iii) அசோகர் – பாறைக் கல்வெட்டு

iv) இக்பால் – கவிஞர்

விடை: i) தீன் இலாகி – ஒரு புத்தகம்

 

Join the conversation