5. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. சிவப்பு விளக்கு ஒளிரும் போது
அ) பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லலாம்.
ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.
இ) உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
ஈ) செல்லிடப்பேசியில் உரையாடலாம்
விடை: ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.
2. பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம்
அ) எங்குவேண்டுமானாலும்
ஆ) சமிக்ஞைகளுக்கு அருகில்
இ) வரிகோட்டு பாதையில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: இ) வரிகோட்டு பாதையில்
3. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
அ) டிசம்பர்
ஆ) ஜனவரி
இ) மார்ச்
ஈ) மே
விடை: ஆ) ஜனவரி
4. அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
அ) 108
ஆ) 100
இ) 106
ஈ) 101
விடை: அ) 108
5. சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
அ) அதிவேகம்
ஆ) குடிபோதையில் ஓட்டுதல்
இ) ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
6. போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை
அ) கட்டாய குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) தகவல் குறியீடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: அ) கட்டாய குறியீடுகள்
7. சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
விடை: இ) 2016
8. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
அ) எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
ஆ) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை: இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)
9. வளைவில் முந்துவது
அ) அனுமதிக்கப்படுகிறது
ஆ) அனுமதியில்லை
இ) கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
ஈ) நமது விருப்பம்
விடை: ஆ) அனுமதியில்லை
10. அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது
அ) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.
ஆ) முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.
இ) நம் வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
ஈ) அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.
விடை: இ) நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ……………… புறம் செல்லவும்
விடை: இடது
2. கட்டாய குறியீடுகள் ………… வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
விடை: வட்ட
3. ………………. வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றது
விடை: வேகக் கட்டுப்பாட்டுக் கருவி
4. அதிக வேகம் : ………………. ஆபத்து
விடை: அதிக
5. நான்கு சக்கர வாகனத்தில் ………….. அணிவதும் இரு சக்கர வாகனத்தில் …………… அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.
விடை: இருக்கை வார்பட்டை, தலைக்கவசம்
III. பொருத்துக
1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் – அ) வரிக்கோட்டு பாதை
2. புதிய சிட்ருந்துக்களுக்கான ஒரு முறை வரி – ஆ) சாலைப் பாதுகாப்புக் குறித்த புத்தகம்
3. பாதசாரி – இ) ஆறு மாதங்கள்
4. பிரேசிலியா பிரகடனம் – ஈ) 15 வருடங்கள்
5. சுவச்ச கேஃபர் – உ) பன்னாட்டு மாநாடு
விடை:
1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் — இ) ஆறு மாதங்கள்
2. புதிய சிட்ருந்துக்களுக்கான ஒரு முறை வரி – ஈ) 15 வருடங்கள்
3. பாதசாரி – அ) வரிக்கோட்டு பாதை
4. பிரேசிலியா பிரகடனம் – உ) பன்னாட்டு மாநாடு
5. சுவச்ச கேஃபர் – ஆ) சாலைப் பாதுகாப்புக் குறித்த புத்தகம்
IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?
i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.
ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினைத் தாண்டக்கூடாது.
iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.
iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம்.
அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
விடை: ஈ) iii, iv மட்டும்
2. கூற்று : மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.
காரணம் : மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.
அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை: அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
3. கூற்று : சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று.
காரணம் : அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
4. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்)
அ) வளைவுகளில் மெதுவாக செல்
ஆ) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து
ஈ) சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும்
விடை: இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து