Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

6. தொழிலகங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் ………………….. பிரிவுகளின் கீழ் வருகின்றன.

அ) சிறிய அளவிலான தொழிலகம்

ஆ) பெரிய அளவிலான தொழிலகம்

இ) கடல்வளம் சார்ந்த தொழிலகம்

ஈ) மூலதனம் சார்ந்த தொழிலகம்

விடை: அ) சிறிய அளவிலான தொழிலகம்

 

2. உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் …………. வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

விடை: இ) 4

 

3. ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) ……………… துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அ) தனியார் துறை

ஆ) பொதுத்துறை

இ) கூட்டுறவுத்துறை

ஈ) கூட்டுத்துறை

விடை: இ) கூட்டுறவுத்துறை

 

4. இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் ………… தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அ) வேளாண் சார்ந்த

ஆ) கனிம வளம் சார்ந்த

இ) வனப் பொருட்கள் சார்ந்த

ஈ) கடல் வளம் சார்ந்த

விடை: ஆ) கனிம வளம் சார்ந்த

 

5. சார்புத் துறை …………….. வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அ) 4

ஆ) 3

இ) 2

ஈ) 5

விடை: இ) 2

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. வங்கித் துறை என்பது ……………… பொருளாதார நடவடிக்கையாகும்

விடை: மூன்றாம் நிலை / சார்பு நிலை

 

2. மூன்றாம் நிலை தொழில்கள் …………. மற்றும் ………… ஆக வகைப்படுத்தப்படுகிறது.

விடை: நான்காம் நிலை, ஐந்தாம் நிலை

 

3. அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் ……….. துறையின் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.

விடை: ஐந்தாம் நிலை கீழ்வரும் பொருளாதார செயல்பாடுகள்

 

4. மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு ……………….. தொழிலாகும்.

விடை: வேளாண் சார்ந்த

 

5. பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்குத் தேவையான ரூபாய் மூலதனம் …………………. ஆகும்.

விடை: ஒரு கோடிக்கு மேல்

 

III. பொருத்துக. 

1. நீதித்துறை – அ) தனியார் துறை 

2. தொலைக்காட்சி ஒளிபரப்பு – ஆ) புவியியல் அல்லாத காரணிகள்

3. புவியியல் காரணிகள் – இ) நான்காம் நிலை செயல்பாடுகள் 

4. மூலதனம் – ஈ) மூலப் பொருட்கள் 

5. பஜாஜ் ஆட்டோ – உ) ஐந்தாம் நிலை செயல்பாடுகள் 

 

விடை: 

1. நீதித்துறை – உ) ஐந்தாம் நிலை செயல்பாடுகள்

2. தொலைக்காட்சி ஒளிபரப்பு – இ) நான்காம் நிலை செயல்பாடுகள்

3. புவியியல் காரணிகள் – ஈ) மூலப் பொருட்கள்

4. மூலதனம் – ஆ) புவியியல் அல்லாத காரணிகள்

5. பஜாஜ் ஆட்டோ – அ) தனியார் துறை

 

Join the conversation