7. நீதித்துறை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ………………….
அ) குடியரசுத் தலைவர்
ஆ) நாடாளுமன்றம்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) பிரதம அமைச்சர்
விடை: இ) உச்ச நீதிமன்றம்
2. ………………… க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
அ) குடிமக்கள்
ஆ) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
இ) இரண்டு மாநில அரசாங்கங்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்
3. கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?
அ) முதன்மை அதிகார வரம்பு
ஆ) மேல்முறையீட்டு அதிகார வரம்பு
இ) ஆலோசனை அதிகார வரம்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை: அ) முதன்மை அதிகார வரம்பு
4. பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
அ) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்
ஆ) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
ஈ) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்
விடை: இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
5. பொதுநல வழக்கு முறை இந்தியாவில் …………………. ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அ) உச்சநீதிமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) அரசியல் கட்சிகள்
ஈ) அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்
விடை: அ) உச்ச நீதிமன்றம்
6. இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை: அ) ஒன்று
7. உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் ………….
அ) சண்டிகர்
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) புதுதில்லி
விடை: ஈ) புதுதில்லி
8. FIR என்பது
அ) முதல் தகவல் அறிக்கை
ஆ) முதல் தகவல் முடிவு
இ) முதல் நிகழ்வு அறிக்கை
ஈ) மேற்கூறிய எவையுமில்லை
விடை: அ) முதல் தகவல் அறிக்கை
9. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் …………. என அழைக்கப்படுகின்றன.
அ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஆ) அமர்வு நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றங்கள்
ஈ) வருவாய் நீதிமன்றங்கள்
விடை: ஆ) அமர்வு நீதிமன்றம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. …………. நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.
விடை: கல்கத்தா
2. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ………….. மற்றும் உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
விடை: சுதந்திரம், நடுநிலைத்தன்மை
3. புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான ………… “ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்தார்.
விடை: மாண்டெஸ்கியூ
4. …………… பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.
விடை: உரிமையியல் சட்டங்கள்
5. பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் …………. ன்படி நீதியை வழங்கின.
விடை: தர்மத்தின்
III. பொருத்துக.
1. உச்ச நீதிமன்றம் – அ) சமூக கடமைகள்
2. உயர் நீதிமன்றம் – ஆ) விரைவான நீதி
3. லோக் அதாலத் – இ) இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்
4. சர் எலிஜா இம்பே – ஈ) மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்
5. ஸ்மிருதி – உ) முதல் தலைமை நீதிபதி
விடை:
1. உச்ச நீதிமன்றம் – இ) இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்
2. உயர் நீதிமன்றம் – ஈ) மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்
3. லோக் அதாலத் – ஆ) விரைவான நீதி
4. சர் எலிஜா இம்பே – உ) முதல் தலைமை நீதிபதி
5. ஸ்மிருதி – அ) சமூக கடமைகள்
IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. பின்வரும் கூற்றை ஆராய்க.
i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டும் இல்லை
விடை: இ) i மற்றும் ii
2. பின்வரும் கூற்றை ஆராய்க
i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது.
ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது.
iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மற்றும் iii மட்டும்
இ) i, iii மட்டும்
ஈ) அனைத்தும்
விடை: ஈ) அனைத்தும்
3. இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.
i) இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.
iii) ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியாது.
iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
அ) i
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடை: இ) iii
4. கூற்று : உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.
காரணம் : இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை: இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.