3. நீரியல் சுழற்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு ____________ என்று பெயர்.
அ) ஆற்றின் சுழற்சி
ஆ) நீரின் சுழற்சி
இ) பாறைச் சுழற்சி
ஈ) வாழ்க்கைச் சுழற்சி
விடை: ஆ) நீரின் சுழற்சி
2. புவியில் உள்ள நன்னீரின் சதவிகிதம் _____________
அ) 71 %
ஆ) 97 %
இ) 2.8%
ஈ) 0.6 %
விடை: இ) 2.8%
3. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு ____________ என்று பெயர்.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) பதங்கமாதல்
ஈ) மழை
விடை: ஈ) மழை
4. நீர் மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு ______________
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஈ) நீர் வழிந்தோடல்
விடை: ஈ) நீர் வழிந்தோடல்
5. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.
அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஆ) நீர் சுருங்குதல்
இ) நீராவி சுருங்குதல்
ஈ) பொழிவு
விடை: அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
6. குடிப்பதற்கு உகந்த நீரை ____________ என்று அழைப்பர்.
அ) நிலத்தடி நீர்
ஆ) மேற்பரப்பு நீர்
இ) நன்னீர்
ஈ) ஆர்ட்டீ சியன் நீர்
விடை: இ) நன்னீர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது.
விடை: ஈரப்பதம்
2. நீர்ச் சுழற்சியில் ____________ நிலைகள் உள்ளன.
விடை: மூன்று
3. வளிமண்டலத்திலிருந்து புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் ____________ என்று பெயர்.
விடை: மழைப்பொழிவு
4. மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் ___________
விடை: தூறல்
5. மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
விடை: அடர் மூடுபனி
III. பொருத்துக.
1. தாவரங்கள் – அ) மேகங்கள்
2. நீர் சுருங்குதல் – ஆ) கல் மழை
3. பனித்துளி மற்றும் மழைத்துளி – இ) புவியின் மேற்பரப்பு
4. நீர் ஊடுறுவுதல் – ஈ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
விடை:
1. தாவரங்கள் – ஈ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
2. நீர் சுருங்குதல் – அ) மேகங்கள்
3. பனித்துளி மற்றும் மழைத்துளி – ஆ) கல் மழை
4. நீர் ஊடுறுவுதல் – இ) புவியின் மேற்பரப்பு
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
1. நீராவியாதல் என்பது
i) நீராவி நீராக மாறும் செயலாக்கம்.
ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம்.
iii) நீர் 100°C வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.
அ) i, iv சரி
ஆ) ii சரி
இ) ii, iii சரி
ஈ) அனைத்தும் சரி
விடை: இ) ii, iii சரி