1. பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்
2. இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர்
அ) உதயகுமார்
ஆ) அமாத்தியா சென்
இ) அபிஜித் பானர்ஜி
ஈ) இவற்றில் எவரும் இல்லை
விடை: அ) உதயகுமார்
3. பணத்தின் மதிப்பு
அ) அக பணமதிப்பு
ஆ) புற பண மதிப்பு
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடை: இ) அ மற்றம் ஆ
4. வங்கி பணம் என்பது எது?
அ) காசோலை
ஆ) வரைவு
இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்
5. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்
அ) பங்கு வர்த்தகம்
ஆ) பத்திரங்கள்
இ) பரஸ்பர நிதி
ஈ) வரி செலுத்துவது
விடை: ஈ) வரிசெலுத்துவது
6. பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்
அ) வரி ஏய்ப்ப வர்கள்
ஆ) பதுக்குபவர்கள்
இ) கடத்தல்காரர்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நிகழ்நிலை வங்கியை __________ என்று அழைக்கலாம்.
விடை: இணைய வங்கி
2. பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே __________
விடை: பணம்
3. மின்னணு வங்கியை _____________ என்றும் அழைக்கலாம்
விடை: தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)
4. கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் _____________ பணமாகும்
விடை: நெகிழிப்
5. இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________
விடை: 1935
III. பொருத்துக
1. பண்டமாற்று முறை – அ) வரி ஏமாற்றுபவர்கள்
2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் – ஆ) மின்னணு பணம்
3. மின் பணம் – இ) நுகர்வு தவிர்த்த பணம்
4. சேமிப்பு – ஈ) பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
5. கருப்பு பணம் – உ) 1935
விடை:
1. பண்டமாற்று முறை – ஈ) பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் – உ) 1935
3. மின் பணம் – ஆ) மின்னணு பணம்
4. சேமிப்பு – இ) நுகர்வு தவிர்த்த பணம்
5. கருப்பு பணம் – அ) வரி ஏமாற்றுபவர்கள்
IV. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன.
i) இருமுகத்தேவை பொருத்தமின்மை
ii) செல்வத்தை சேமிக்க சிரமமில்லை
iii) பொதுவான மதிப்பின் அளவுகோல்
iv) பொருட்களின் பகுப்படாமை
அ) i மற்றும் ii சரி
ஆ) 1 மற்றும் iv சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: இ) i, iii மற்றும் iv சரி
V. தவறான ஒன்றினை கண்டுபிடிக்க
1. பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்.
அ) பற்று அட்டை
ஆ) பண்டமாற்று முறை
இ) கடன் அட்டை
ஈ) நிகழ் நிலை வங்கி
விடை: ஆ) பண்ட மாற்று முறை
2. பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்.
அ) இரட்டை பொருளாதாரம்
ஆ) சமத்துவம் வலுவிழத்தல்
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு
விடை: இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை