Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

6. பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி …………..

அ) குடியரசுத் தலைவர்

ஆ) பிரதம அமைச்சர்

இ) ஆளுநர்

ஈ) முதலமைச்சர்

விடை: அ) குடியரசுத் தலைவர்

 

2. இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது

அ) தேசிய பாதுகாப்பு

ஆ) தேசிய ஒற்றுமை

இ) அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்

 

3. இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்

அ) ஜனவரி 15

ஆ) பிப்ரவரி 1

இ) மார்ச் 10

ஈ) அக்டோபர் 7

விடை: அ) ஜனவரி 15

 

4. அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இ) திட்ட மேலாண்மை நிறுவனம்

ஈ) உள்துறை அமைச்சகம்

விடை: ஈ) உள்துறை அமைச்சகம்

 

5. இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு

அ) 1976

ஆ) 1977

இ) 1978

ஈ) 1979

விடை: இ) 1978

 

6. இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று

அ) சத்தியமேவ ஜெயதே

ஆ) பஞ்சசீலம்

இ) மேற்கூறிய இரண்டும்

ஈ) மேற்கூறிய எவையுமில்லை

விடை: ஆ) பஞ்சசீலம்

 

7. பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?

அ) அந்தமான் மற்றும் மாலத்தீவு

ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

இ) இலங்கை மற்றும் மாலத்தீவு

ஈ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்

விடை: ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

1. மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் ……………….

விடை: வெல்லிங்டன்

 

2. இந்திய கடற்படையின் தலைமை தளபதி ………….. ஆவார்.

விடை: அட்மிரல்

 

3. இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி …………………. ஆவார்.

விடை: அர்ஜுன் சிங்

 

4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ……………..

விடை: ஜவஹர்லால் நேரு

 

5. அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் ………………..

விடை: வி.கே. கிருஷ்ணமேனன்

 

III. பொருத்துக. 

1. நெல்சன் மண்டேலா – அ) 8 உறுப்புகள் 

2. தேசிய போர் நினைவுச் சின்னம் – ஆ) பீல்டு மார்ஷல்

3. மானக் ஷா – இ) எரிசக்தி மேம்பாடு

4. சார்க் – ஈ) இனவெறிக் கொள்கை

5. பி. சி. ஐ.எம் – உ) புது டெல்லி

 

விடை: 

1. நெல்சன் மண்டேலா – ஈ) இனவெறிக் கொள்கை

2. தேசிய போர் நினைவுச் சின்னம் – உ) புது டெல்லி

3. மானக் ஷா – ஆ) பீல்டு மார்ஷல்

4. சார்க் – அ) 8 உறுப்புகள்

5. பி. சி. ஐ.எம் – இ) எரிசக்தி மேம்பாடு

 

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.

I. இந்திய இராணுவப் படை ஆயுதப்படைகளின் நிலஅடிப்படையிலான பிரிவு ஆகும்.

II. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

அ) I மட்டும் சரி

ஆ) II மட்டும் சரி

இ) I மற்றும் II சரி

ஈ) I மற்றும் II தவறு

விடை: இ) I மற்றும் II சரி

 

2. கூற்று : குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்.

காரணம் : குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விடை: அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

 

3. கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது.

காரணம் : நட்பு – கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

ஈ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

விடை: இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

 

4. இனவெறிக்கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல?

I. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.

II. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.

III. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

அ) I மற்றும் II

ஆ) II மற்றும் III

இ) II மட்டும்

ஈ) III மட்டும்

விடை: ஈ) III மட்டும்

 

5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) மாலத்தீவு

ஆ) இலங்கை

இ) மியான்மர்

ஈ) லட்சத்தீவுகள்

விடை: இ) மியான்மர்

Join the conversation