8. புவிப்படங்களைக் கற்றறிதல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ……………. ஆகும்.
அ) மக்களியல்
ஆ) புவிப்படவியல்
இ) இயற்கையமைப்பு
ஈ) இடவியல்
விடை: ஆ) புவிப்படவியல்
2. ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் ……………
அ) நிலக்கானி படங்கள்
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
இ) கால நிலையியல் புவிப்படம்
ஈ) மூலாதார புவிப்படம்
விடை: ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
3. ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ………………. வண்ண ம் மூலம் குறிப்பிடப்படுகிறது.
அ) மஞ்சள்
ஆ) பழுப்பு
இ) வெளிர் நீலம்
ஈ) அடர் நீலம்
விடை: இ) வெளிர் நீலம்
4. பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ……………… ஆகும்.
அ) நிலக்கானி புவிப்படங்கள்
ஆ) தலப்படங்கள்
இ) சம அளவுக்கோட்டுப் படங்கள்
ஈ) போக்குவரத்துப் படங்கள்
விடை: அ) நிலக்கானி புவிப்படங்கள்
5. மக்கட்தொகை பரவலை ………………. மூலம் காண்பிக்கலாம்.
அ) கோடுகள்
ஆ) வண்ணங்கள்
இ) புள்ளிகள்
ஈ) சமஅளவுக்கோடுகள்
விடை: இ) புள்ளிகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. புவிக் கோள மாதிரி என்பது ……………….. ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.
விடை: புவி
2. புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை …………. எனப்படும்.
விடை: வரைபடக் கோட்டுச் சட்டம்
3. சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு ………………..
விடை: சம அளவுக் கோடு (சம உயரக்கோடு)
4. காணிப்படங்கள் பொதுவாக …………………….. ஆல் பராமரிக்கப்படுகின்றன.
விடை: அரசாங்கம்
5. ………………… புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
விடை: கருத்துப் படங்கள்
III. பொருத்துக.
1. புவிப்பட விளக்கம் – 45°
2. வடகிழக்கு – பழுப்பு நிறம்
3. சம உயரக்கோடு – கருத்துப்படங்கள்
4. காணிப்படங்கள் – புவிப்படத்தின் திறவுகோல்
5. நிழற்பட்டைப் படம் – வரி விதிப்பு
அ) 3, 5, 1, 4, 2
ஆ) 4, 1, 2, 5, 3
இ) 2, 5, 1, 3, 4
ஈ) 5, 2, 4, 1, 3
விடை: ஆ) 4, 1, 2, 5, 3
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1. கூற்று : சிறிய அளவைப் புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன.
காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.
அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை: இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
2. கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.
காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி