Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

2. பொது மற்றும் தனியார் துறைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……… ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது

அ) 1957

ஆ) 1958

இ) 1966

ஈ) 1956

விடை: ஈ) 1956

 

2. கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது

அ) முதலாளித்துவம்

ஆ) சமதர்மம்

இ) அ மற்றும் ஆ சரி

ஈ) அ மற்றும் ஆ தவறு

விடை: இ) அ மற்றும் ஆ சரி

 

3. ………………… நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.

அ) தனியார் துறை

ஆ) கூட்டு துறை

இ) பொதுத்துறை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: ஆ) கூட்டு துறை

 

4. பொதுத்துறை ……………….. உடையது.

அ) இலாப நோக்கம்

ஆ) சேவை நோக்கம்

இ) ஊக வணிக நோக்கம்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: ஆ) சேவை நோக்கம்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. …………….. மற்றும் ………….. ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விடை: தனியார் துறை, பொதுத் துறை

 

2. தனியார் துறை ………….. நோக்கத்தில் செயல்படுகிறது.

விடை: லாட

 

3. …………… என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்.

விடை: சமூக பொருளாதார மேம்பாடு

 

4. தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளைத் தோற்றுவிப்பது ………………… மற்றும் ………….. ஆகும்.

விடை: புதுமை, நவீனமயமாதல்

 

5. குடிமக்கள் மத்தியில் ………………….. மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

விடை: சமூக பொருளாதார மேம்பாடு

 

III. பொருத்துக.

1. மதியுரையகக் குழு – அ) முதன்மைத் துறை 

2. வேளாண்மை – ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி 

3. தொழில்கள் – இ) நிதி ஆயோக்

4. GDP – ஈ) இரண்டாம் துறை

 

விடை: 

1. மதியுரையகக் குழு – இ) நிதி ஆயோக்

2. வேளாண்மை – அ) முதன்மைத் துறை

3. தொழில்கள் – ஈ) இரண்டாம் துறை

4. GDP – ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி

 

IV. பொருத்தமற்றதைக் கூறுக. 

1. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை?

அ) கருப்புப்பணம்

ஆ) ஆயுட்காலம்

இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

ஈ) வேலைவாய்ப்பு

விடை: அ) கருப்புப்பணம்

 

V. பின்வருவனவற்றுள் எது சரியான விடை?

1. i) அரசுக்கு மட்டுமே சொந்தமானதொழில்கள் அட்டவணை- A என குறிப்பிடப்படுகின்றன.

ii) தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிகளுக்குத் துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளைத் தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன.

iii) தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை

அ) அனைத்தும் சரி

ஆ) i மற்றும் iii சரி

இ) i மற்றும் ii சரி

ஈ) இவற்றில் எதுவும் இல்லை

விடை: இ) i மற்றும் ii சரி

Join the conversation