Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

4. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் …………………… மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அ) ஐ.நா.சபை

ஆ) உச்ச நீதிமன்றம்

இ) சர்வதேச நீதிமன்றம்

ஈ) எதுவுமில்லை

விடை: அ) ஐ.நா.சபை

 

2. 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் …………… இல் கூடினர்.

அ) பெய்ஜிங்

ஆ) நியூயார்க்

இ) டெல்லி

ஈ) இவைகளில் எதுவுமில்லை

விடை: அ) பெய்ஜிங்

 

3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

அ) 1990

ஆ) 1993

இ) 1978

ஈ) 1979

விடை: ஆ) 1993

 

4. ஐ.நா. சபை 1979 ஆம் ஆண்டை ……………………… சர்வதேச ஆண்டாக அறிவித்தது.

அ) பெண்குழந்தைகள்

ஆ) குழந்தைகள்

இ) பெண்கள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: ஆ) குழந்தைகள்

 

5. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

அ) டிசம்பர் 9

ஆ) டிசம்பர் 10

இ) டிசம்பர் 11

ஈ) டிசம்பர் 12

விடை: ஆ) டிசம்பர் 10

 

6. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?

அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)

ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

இ) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)

ஈ) சர்வதேசப் பெண்கள் ஆண்டு

விடை: அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)

 

7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

அ) ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இ) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்

ஈ) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி

விடை: ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

 

8. உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?

ஆ) 20

ஆ) 30

இ) 40

ஈ) 50

விடை: ஆ) 30

 

9. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?

அ) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை

ஆ) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

இ) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

விடை: ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

 

10. தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) புது டெல்லி

ஆ) மும்பை

இ) அகமதாபாத்

ஈ) கொல்கத்தா

விடை: அ) புது டெல்லி

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ ………………. உண்டு.

விடை: உரிமை

 

2. மனித உரிமைகள் என்பது ……………. உரிமைகள்.

விடை: இயல்பான அடிப்படை

 

3. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு …………………

விடை: 1997

 

4. இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு ……………. ஐ தடைசெய்கிறது.

விடை: குழந்தைத் தொழிலாளர் முறை

 

5. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு ……………..

விடை: 1945

 

III. பொருத்துக.

1. எலினார் ரூஸ்வெல்ட்  – அ) உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம் 

2. சைரஸ் சிலிண்டர் – ஆ) 1997

3. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் – இ) அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

4. குழந்தை உதவி மைய எண் – ஈ) மனித உரிமைகளுக்கான ஆணையம் 

5. வாழ்வியல் உரிமைகள் – உ) வாக்களிக்கும் உரிமை

6. அரசியல் உரிமை – ஊ) 1098 

 

விடை: 

1. எலினார் ரூஸ்வெல்ட் – ஈ) மனித உரிமைகளுக்கான ஆணையம்

2. சைரஸ் சிலிண்டர் – அ) உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம்

3. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் – ஆ) 1997

4. குழந்தை உதவி மைய எண் – ஊ) 1098

5. வாழ்வியல் உரிமைகள் – இ) அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

6. அரசியல் உரிமை – உ) வாக்களிக்கும் உரிமை

 

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு. 

1. தவறான கூற்றை கண்டறியவும்

அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.

இ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.

விடை: ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்

 

2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.

அ) இது 1993 இல் நிறுவப்பட்டது.

ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியைத் தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.

விடை: இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்

 

3. கூற்று : டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

காரணம் : இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

இ) கூற்று காரணம் இரண்டும் சரி.

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.

விடை: அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

 

4. பின்வரும் கூற்றை ஆராய்க.

1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.

2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக்

கொண்டதாகும். மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1, 2

ஈ) எதுவுமில்லை

விடை: அ) 1 மட்டும்

Join the conversation