Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

1. மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

அ) குடியரசுத் தலைவர்

ஆ) துணைக் குடியரசுத் தலைவர்

இ) பிரதம மந்திரி

ஈ) முதலமைச்சர்

விடை: அ) குடியரசுத் தலைவர்

 

2. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்

அ) ஆளுநர்

ஆ) முதலமைச்சர்

இ) சபாநாயகர்

ஈ) உள்துறை அமைச்சர்

விடை: ஆ) முதலமைச்சர்

 

3. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்

அ) உள்துறை அமைச்சர்

ஆ) குடியரசுத் தலைவர்

இ) சபாநாயகர்

ஈ) ஆளுநர்

விடை: ஈ) ஆளுநர்

 

4. உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?

அ) ஆளுநர்

ஆ) முதலமைச்சர்

இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி

ஈ) குடியரசுத் தலைவர்

விடை: ஆ) முதலமைச்சர்

 

5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

அ) 62

ஆ) 64

இ) 65

ஈ) 58

விடை: ஆ) 62

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ____________ ஆகும்.

விடை: 29

 

2. ஆளுநரின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.

விடை: 5

 

3. மாவட்ட நீதிபதிகள் ____________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.

விடை: ஆளுநர்

 

4. ஆளுநர் ஒரு மாநிலத்தின் ____________ ஆவார்.

விடை: நிர்வாகத் தலைவர்

 

5. ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக ____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

விடை: 25 வயது

 

III. பொருத்துக. 

1. ஆளுநர் – அ) கீழவை

2. முதலமைச்சர் – ஆ) பெயரளவுத் தலைவர்

3. சட்டமன்ற பேரவை – இ) மேலவை

4. சட்டமன்ற மேலவை – ஈ) உண்மையான தலைவர்

 

விடை: 

1. ஆளுநர் – ஆ) பெயரளவுத் தலைவர்

2. முதலமைச்சர் – ஈ) உண்மையான தலைவர்

3. சட்டமன்ற பேரவை – அ) கீழவை

4. சட்டமன்ற மேலவை – ஆ) பெயரளவுத் தலைவர்

 

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்

i) குடியரசுத் தலைவர்

ii) துணை குடியரசுத் தலைவர்

iii) ராஜ்ய சபை உறுப்பினர்கள்

iv) சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

அ) i, ii & iii சரி

ஆ) i மற்றும் iii சரி

இ) i, iii மற்றும் iv சரி

ஈ) i, ii, iii மற்றும் iv சரி

விடை: இ) i, iii மற்றும் iv சரி

Join the conversation