Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

2. அரசியல் கட்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க: 

1. இரு கட்சி முறை என்பது

அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது

ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது

இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது

ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

விடை: ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

 

 

2. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை

அ) ஒரு கட்சி முறை

ஆ) இரு கட்சி முறை

இ) பல கட்சி முறை

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: இ) பல கட்சி முறை

 

3. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு

அ) தேர்தல் ஆணையம்

ஆ) குடியரசுத் தலைவர்

இ) உச்ச நீதிமன்றம்

ஈ) ஒரு குழு

விடை: அ) தேர்தல் ஆணையம்

 

 

4. அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?

அ) சமயக் கொள்கைகள்

ஆ) பொது நலன்

இ) பொருளாதார கோட்பாடுகள்

ஈ) சாதி

விடை: ஆ) பொது நலன்

 

 

5. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?

அ) இந்தியா

ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

இ) பிரான்ஸ்

ஈ) சீனா

விடை: ஈ) சீனா

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக: 

1. மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது __________.

விடை: அரசியல் கட்சிகள்

2. நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் __________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.

விடை: தேர்தல் ஆணையம்

3. அரசியல் கட்சிகள் ____________ மற்றும் ___________ இடையே பாலமாக செயல்படுகின்றன.

விடை: குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்

4. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் __________ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.

விடை: அங்கீகரிக்கப்படாத

5. எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தில் இருப்பார்.

விடை: கேபினட் அமைச்சர்

 

III. பொருத்துக: 

1. மக்களாட்சி – அரசின் கொள்கைகளை விமர்சிப்பது

2. தேர்தல் ஆணையம் – அரசாங்கத்தை அமைப்பது

3. பெரும்பான்மைக் கட்சி – மக்களின் ஆட்சி

4. எதிர்க்கட்சி – சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்

 

விடை:

1. மக்களாட்சி – மக்களின் ஆட்சி

2. தேர்தல் ஆணையம் – சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்

3. பெரும்பான்மைக் கட்சி – அரசாங்கத்தை அமைப்பது

4. எதிர்க்கட்சி – அரசின் கொள்கைகளை விமர்சிப்பது

 

 

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

1. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.

அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.

இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

 

2. கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

இ) காரணம் தவறு, கூற்று சரி.

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.

விடை: அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

 

Join the conversation