301. யுகலிப்டஸ் தாவர சிற்றினம் மிக அதிகமாக உள்ள நாடு எது?
A) இந்தியா
B) மலேசியா
C) ஆஸ்திரேலியா
D) அமெரிக்கா
விடை: A) இந்தியா
302. தாவரங்களின் சாறேற்றம் பற்றிய டிக்ஸன், ஜாலி என்ற விஞ்ஞானிகள் எந்த அடிப்படையில் முறை செய்தனர்?
A) நுண் துளையீர்ப்புக் கோட்பாடு
B) உள் ஈர்த்தல் கோட்பாடு
C) உயிர்க் கொள்கைகள்
D) நீர்மூலக்கூறுகளின் பிணைப்புச் சக்தி
விடை: D) நீர்மூலக்கூறுகளின் பிணைப்புச் சக்தி
303. தோல் சதைப்பற்று ஒற்றையடுக்காக _______ காணப்படுகிறது
A) ஸைலம் திசுக்களுக்கு உட்பகுதியில்
B) ஃப்ளோயம் திசுக்களுக்குள்
C) மீஸோபில் திசுக்களில்
D) ஸ்டீலின் வெளிப்புறத்தில்
விடை: D) ஸ்டீலின் வெளிப்புறத்தில்
304. ஃப்ளோயம் திசுக்கள் ______ ஆனவை
A) சல்லடைத் தட்டுகளால்
B) கார்க் செல்களால்
C) ஆஸ்டியோ ஸ்கிளீரைடுகளால்
D) க்ளோரென்சிமாக்களால்
விடை: A) சல்லடைத் தட்டுகளால்
305. தாவரங்களினால் உறிஞ்சப்படுகின்ற நீர் எதன் வழியாக ஊடுருவுகிறது?
A) ஃப்ளோயம் திசுக்கள்
B) கோலன்ச்சிமா
C) ஸைலம் திசுக்கள்
D) இலைகள்
விடை: C) ஸைலம் திசுக்கள்
306. சவ்வூடு பரவல் என்பதன் சமபதச் சொல் எது?
A) கீழ்க்கண்ட எவையும் இல்லை
B) விரவிப்பரவுதல்
C) உள்ளீர்த்தல்
D) விறைப்பழுத்தம்
விடை : ஆஸ்மாஸிஸ்
விடை:
307. தாவரங்களின் நீர் உறிஞ்சும் தன்மை _______ ஏற்படுகிறது
A) சூரிய ஒளி இருக்கும் போது
B) ஒளிச்சேர்க்கை நடக்கும் பொழுது
C) இருட்டாய் இருக்கும் போது
D) இருபத்து நான்கு மணி நேரமும்
குறிப்பு :நீர் ஒளிச்சேர்க்கைக்காக மட்டும் பயன்படுவதில்லை பல்வேறு செயல்களுக்கும் பயன்படக்கூடியது.
விடை: D) இருபத்து நான்கு மணி நேரமும்
308. கீழ்கண்டவற்றுள் எது உச்சநிலைக்காடு?
A) முள்காடு
B) இலையுதிர் காடு
C) பசுமை மாறாக்காடு
D) ஆல்பைன் காடு
விடை: A) முள்காடு
309. ஆலமரத்தின் தூண்வேர்கள் (விழுதுகள்) பயன்படுவது
A) நீரை உறிஞ்சுவதற்கு
B) கிளைகளைத் தாங்குவதற்கு
C) அதிக அளவில் இலைகளை உற்பத்தி செய்வதற்கு
D) மேற்கண்ட மூன்றிற்காகவும்
விடை: B) கிளைகளைத் தாங்குவதற்கு
310. கேனாங் போட்டோமீட்டரினால் அறியப்படுவது
A) ஒளிச்சேர்க்கை
B) சுவாசித்தல்
C) நீராவிப் போக்கு
D) ஒளி சுவாசித்தல்
விடை: B) சுவாசித்தல்
311. இயற்கையில் அமோணிகரணம் நடைபெறும் இடம்
A) ஏரி
B) கடல்
C) நதி
D) சாக்கடை
விடை: D) சாக்கடை
312. ஸ்போர் என்பது ஒரு
A) பரலினப் பெருக்க செல்
B) பாலிலா இனப்பெருக்க செல்
C) உடல் செல்
D) தாவரம்
விடை: B) பாலிலா இனப்பெருக்க செல்
313. DNA அமைப்பைக் கண்டுபிடித்தவர்
A) வாட்சன் கிரிக்
B) ஹர்கோபிந்த் குரானா
C) லேண்ட்ஸ்டெய்னர்
D) கிரிகர் மெண்டல்
விடை: A) வாட்சன் கிரிக்
314. குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான பொருத்தத்தைத் தருக.
a) காஃபீன் – 1) புகையிலை
b) ஓபியம் – 2) காபி
c) நிகோடின் – 3) சிங்கோனா
d) குவினைன் – 4) பாப்பி
குறியீடுகள் :
A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 2 4 1 3
D) 4 3 1 2
விடை: C) 2 4 1 3
315. கீழ்க்கண்ட தாவரங்களில் எது குறுகிய பரவு நிலையைக் கொண்டது?
A) ஜிங்கோ
B) யூகலிப்டஸ்
C) தேக்கு
D) வேம்பு
விடை: A) ஜிங்கோ
316. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) மைட்டோகாண்டிரியா – ஒளி பாஸ்பாரிகரணம்
B) ரைபோசோம்கள் – புரதச் சேர்க்கை
C) ஈஸ்ட் – காற்று சுவாச பூஞ்சை
D) ஃபெரடாக்சின் – கிரியா ஊக்கி
விடை: B) ரைபோசோம்கள் – புரதச் சேர்க்கை
317. மிகச்சிறிய மலரும் தாவரம்
A) யுட்ரிகுலேரியா
B) உல்ஃபியா
C) அராபிடாப்சிஸ்
D) செரட்டோபில்லம்
விடை: B) உல்ஃபியா
318. கீழ்க்கண்ட தாவரங்களில் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் எது?
A) செம்பருத்தி
B) வாழை
C) கரிசலாங்கண்ணி
D) கிலுகிலுப்பை
விடை: C) கரிசலாங்கண்ணி
319. பெனிசிலியம் என்பது
I. ஒரு பூஞ்சை
II. ஒரு பச்சை மோல்டு
III.ஒரு பாக்டீரியம்
IV. ஒரு மருந்து
இக்கூற்றுகளில் :
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் IV சரியானவை
D) எல்லாமே சரியானவை
விடை: B) I மற்றும் II சரியானவை
320. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
I. செல்லின் எல்லா செய்கைகளையும் DNA கட்டுப்படுத்துகிறது
II. ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு மரபுப் பண்புகளைக் கடத்துகிறது
III.புரதச் சேர்க்கையைக் கட்டுப்படுத்துகிறது
IV.RNA வை உற்பத்தி செய்கிறது
இக்கூற்றுக்களில் :
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) எல்லாம் சரியானவை
விடை: D) எல்லாம் சரியானவை
321. மெண்டல் தனது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய தாவரம்
A) அவரைச் செடி
B) கத்திரிச் செடி
C) பட்டாணிச் செடி
D) கொண்டைக்கடலைச் செடி
விடை: C) பட்டாணிச் செடி
322. இனச்செல் தோற்றத்திற்குக் காரணமான செல் பிரிதல்
A) நேர்முகப் பிரிவு
B) மறைமுகப் பிரிவு
C) குன்றல் பிரிவு
D) இருசம பிரிவு
விடை: C) குன்றல் பிரிவு
323. அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்
A) விருதுநகர்
B) திருச்சிராப்பள்ளி
C) கோயம்புத்தூர்
D) மதுரை
விடை: A) விருதுநகர்
324. கீழ்க்கண்ட தாவரங்களில் புதர்ச் செடிக்கு உதாரணமாக சொல்லப்படுவது எது?
A) அரளி
B) செம்பருத்தி
C) நெல்
D) மா
விடை: B) செம்பருத்தி
325. தொற்று தாவரங்கள், மற்ற தாவரங்களை இதற்காக சார்ந்து இருக்கும்
A) முழுமையாக சார்ந்து இருக்கும்
B) இடத்துக்காக மட்டும்
C) உணவுக்காக மட்டும்
D) நிழலுக்காக மட்டும்
விடை: B) இடத்துக்காக மட்டும்
326. பென்சிலினை முதலில் கண்டு பிடித்தவர் யார்?
A) பெர்ல்மேன்
B) செய்ன்
C) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
D) கிளட்டர்பக்
விடை: C) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
327. செல்லைக் (Cell) கண்டு பிடித்தவர் யார்?
A) ராபர்ட் ஹீக்
B) டட்ரோச்சட்
C) ராபர்ட் பிரௌன்
D) வாள்மோஹ்ல் மற்றும் பர்க்கிங்ஸ்
விடை: A) ராபர்ட் ஹீக்
328. ரோஜா தண்டில் காணப்படும் கூர்மையான நீட்சிக்குப் பெயர்
A) கொக்கிகள்
B) முள்
C) தண்டு முட்கள்
D) முள் தண்டு
விடை: B) முள்
329. சோரை உடைய இலைகளுக்கு என்ன பெயர்?
A) செதில் இலைகள்
B) ஸ்போரோபில்கள்
C) சிறு இலைகள்
D) கூட்டிலைகள்
விடை: B) ஸ்போரோபில்கள்
330. சாறுண்ணி உயிரி
A) மண்புழு
B) யூக்ளினா
C) அமீபா
D) பூஞ்சை
விடை: D) பூஞ்சை
331. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் – I பட்டியல்-II
A) கேரட் – 1) வித்திலை
B) வேர்க்கடலை – 2) தண்டு
C) வெண்டை – 3) வேர்
D) உருளைக்கிழங்கு – 4.கனி
குறியீடுகள் :
A) 3 1 4 2
B) 2 3 1 4
C) 4 2 3 1
D) 1 4 2 3
விடை: A) 3 1 4 2
332. மியோசிஸ் குறித்த கிழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
A) இது மரபுப் பண்பு வேறுபாடுகளைக் கொண்டு வருகிறது.
B) கேமிட்டுகளில் குரோமோசோம் எண்ணிக்கையை குறைக்கிறது
C) உயிரிகளில் குரோமோசோம் எண்ணிக்கையை நிலைப்படுத்துகிறது
D) இது ஆக்குத் திசு பகுதியில் நடைபெறுகிறது
விடை: D) இது ஆக்குத் திசு பகுதியில் நடைபெறுகிறது
333. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : வளரிடத்திலிருந்து பூஞ்சை உணவைப் பெறுகின்றன.
காரணம் (R) : வளரிடத்தில் பூஞ்சை செரிமான நொதிகளைச் சுரக்கின்றன.
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) க்கு சரியான விளக்கம் ஆகும்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
விடை: A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) க்கு சரியான விளக்கம் ஆகும்
334. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஜோடி எது?
A) ரைசோபியம் – கூட்டுயிரி நைட்ரஜன் நிலைப்படுத்துதல்
B) ஸ்ட்ரெப்டோ காக்கஸ் லாக்டிஸ் – வினிகர் உற்பத்தி
C) அசோட்டோபாக்டர் – கூட்டுயிரியற்ற நைட்ரஜன் நிலைப்படுத்துதல்
D) ஈஸ்ட் – நொதித்தல்
விடை: B) ஸ்ட்ரெப்டோ காக்கஸ் லாக்டிஸ் – வினிகர் உற்பத்தி
335. கீழ்க்கண்டவற்றுள் சரியான வரிசையைக் கண்டுபிடி.
A) எலக்ட்ரான் போக்குவரத்து ATP உற்பத்தி கிளைகாலிசிஸ், கிரெப் சுழற்சி
B) கிரெப் சுழற்சி, கிளைகாலிசிஸ், ATP உற்பத்தி எலக்ட்ரான் போக்குவாத்து
C) கிளைகாலிசிஸ் கிரெப் சுழற்சி, எலக்ட்ரான் போக்குவரத்து ATP உற்பத்தி
D) ATP உற்பத்தி கிளைகாலிசிஸ், கிரேப் சுழற்சி, எலக்ட்ரான் போக்குவரத்து
விடை: C) கிளைகாலிசிஸ் கிரெப் சுழற்சி, எலக்ட்ரான் போக்குவரத்து ATP உற்பத்தி
336. நெல், வைக்கோல் கடினத் தன்மையுடன் இருக்கக் காரணம்
A) கடின நார்கள்
B) கற்செல்கள்
C) கோலன்கைமா
D) சிலிகா
விடை: A) கடின நார்கள்
337. மரக்கட்டை எதிலிருந்து உருவாகிறது?
A) முதலாம் புளோயம்
B) முதலாம் சைலம்
C) இரண்டாம் சைலம்
D) இரண்டாம் புளோயம்
விடை: C) இரண்டாம் சைலம்
338. பெர்ரி கனி காணப்படுவது
A) துளசி
B) தக்காளி
C) முந்திரி
D) பட்டாணி
விடை: B) தக்காளி
339. மண்ணற்ற நிலையில் தாவரங்களை வளர்க்கும் முறை
A) ஹைட்ராலஜி
B) ஹைட்ரோட்ரோபிசம்
C) ஹைட்ரோஃபோனிக்ஸ்
D) ஹைட்ரோடாக்சிஸ்
விடை: C) ஹைட்ரோஃபோனிக்ஸ்
340. எளிதில் கிடைக்கக்கூடிய சுவாசத் தளப்பொருள்
A) குளூகோஸ்
B) ஃபிரக்டோஸ்
C) தரசம்
D) லேக்டோஸ்
விடை: C) தரசம்
341. பாசி என்பது ஒரு
A) பச்சைத் தாவரம்
B) பச்சையமற்ற தாவரம்
C) ஒட்டுண்ணி தாவரம்
D) மட்குண்ணி தாவரம்
விடை: A) பச்சைத் தாவரம்
342. தேங்காய் இயற்கையாகப் பரவுதல்
A) விலங்கினங்களின் மூலம்
B) நீரின் மூலம்
C) காற்றின் மூலம்
D) மேற்கண்ட மூன்றினாலும்
விடை: B) நீரின் மூலம்
343. நைட்ரஜன் காணப்படும் கரிம சேர்மங்கள்
A) குளூகோஸ்
B) ஃபிரக்டோஸ்
C) புரதங்கள்
D) கொழுப்புகள்
விடை: C) புரதங்கள்
344. மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு
A) எபிகல்சர்
B) ஆர்போரிகல்சர்
C) மொரிகல்சர்
D) ஆய்ஸ்டர்கல்சர்
விடை: B) ஆர்போரிகல்சர்
345. தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான மூன்று முக்கிய ஊட்டப் பொருள்களாவன
A) கால்சியம், சோடியம், பொட்டாசியம்
B) ஆக்ஸிஜன், இரும்பு, பாஸ்பரஸ்
C) மக்னீசியம், இரும்பு, கார்பன்
D) ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன்
விடை : நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்.
விடை:
346. ஒளிக்சேர்க்கையினால் முதல் உருவாகும் நிலையான விளைபொருள் எது?
A) ஸ்டார்ச்
B) சர்க்கரை
C) புரோட்டின்
D) அமினோ அமிலங்கள்
விடை: A) ஸ்டார்ச்
347. கானாங்ஸ் போட்டோ மீட்டர் எதற்குப் பயன்படுகிறது?
A) ஒளியின் அடர்த்தியை அளப்பதற்கு
B) தாவரங்களிலிருந்து வெளியேறும் தண்ணீரை அளப்பதற்கு
C) தாவரங்களின் ஒளிச்சேர்க்கையினை அளப்பதற்கு
D) தாவரங்களில் உள்ள உணவுப் பொருட்களை அளப்பதற்கு
விடை: B) தாவரங்களிலிருந்து வெளியேறும் தண்ணீரை அளப்பதற்கு
348. பைலிபெரஸ் தளம் எதிலிருந்து உருவாகும்?
A) பாரன்சிமா உயிரணுக்கள்
B) புறத்தோல் உயிரணுக்கள்
C) நார் உயிரணுக்கள்
D) உட்தோல் உயிரணுக்கள்
விடை: B) புறத்தோல் உயிரணுக்கள்
349. பேசிக்குலார் கேம்பியம் ______ செடியின் தண்டில் உள்ளது
A) ஒரைசா
B) சொர்கம்
C) சிட்ரஸ்
D) சைப்பீரஸ்
விடை: B) சொர்கம்
350. பின்வருவனவற்றுள் வறண்ட நிலத் தாவரம் அல்லாத ஒன்று எது,
A) ஒபுன்ஷியா
B) சேரேயஸ்
C) யூபோர்பியா திருக்கள்ளி
D) பியூட்டியா பிராண்டோசா
விடை: C) யூபோர்பியா திருக்கள்ளி
351. வாழை மரத்தின் மஞ்சரி தண்டு கீழ்க்கண்டவற்றில் எந்த நோயை குணப்படுத்தப் பயன்படுகிறது?
A) சிறு நீரகத்தில் கல்நீக்கம் செய்ய
B) அதிகபடியான கொழுப்பை நீக்க
C) தோல் நோய்களைக் குணப்படுத்த
D) சுவாச நோய்களைக் குணப்படுத்த
விடை: A) சிறு நீரகத்தில் கல்நீக்கம் செய்ய
352. பிரம்மாண்டமான தன்மை ஏற்படக் காரணம்
A) ஆட்டோ – பாலி பிளாயிடி
B) இரட்டை எண் குரோமோசோம்
C) ஒற்றை எண் குரோமோசோம்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: A) ஆட்டோ – பாலி பிளாயிடி
353. ஜிம்னோஸ்பெர்ம்களில் பசுமை மாறாத தாவர உடலம் காணப்படும் நிலை
A) கேமெட்டோபைட் நிலை
B) ஸ்போரோபைட் நிலை
C) (A) மற்றும் (B) இவை இரண்டும்
D) இவைகளில் எதுவுமில்லை
விடை: B) ஸ்போரோபைட் நிலை
354. வெப்ப ஊற்றுகளில் ஏறத்தாழ 85°C வெப்ப நிலையில் வாழும் ஆல்காக்கள்
A) ஹேலோபைட்டிக் ஆல்கா
B) லித்தோபைடிக் ஆல்கா
C) தெர்மல் ஆல்கா
D) ஸப்டெரேனியன் ஆல்கா
விடை: C) தெர்மல் ஆல்கா
355. குளோரெல்லா ஆல்கா, அதன் செல் அமைப்பு அடிப்படையில் எந்த பிரிவை சார்ந்தது?
A) சுயஜீவிகள்
B) யூகேரியாட்டுகள்
C) புரோகேரியாட்டுகள்
D (A) மற்றும் (B) இவை இரண்டும்
விடை: D (A) மற்றும் (B) இவை இரண்டும்
356. பருத்தி இழை எதிலிருந்து கிடைக்கிறது?
A) தண்டிலிருந்து
B) வேரிலிருந்து
C) இலையிலிருந்து
D) கனியிலிருந்து
விடை: D) கனியிலிருந்து
357. ‘குளம் பட்டு’ என்ற பொதுப் பெயருடைய ஆல்கா
A) கிளாமிடோபோனாஸ்
B) ஆஸிலடோரியா
C) அனபீனா
D) ஸ்பைரோகைரா
விடை: D) ஸ்பைரோகைரா
358. ஈ. கோலியை தாக்கும் வைரசானது
A) சைனோபேஜ்
B) மைக்கோபேஜ்
C) கோலிபேஜ்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: C) கோலிபேஜ்
359. பால் இனப்பெருக்கம் நடைபெறாத வகை ஆல்கா
A) நீலப்பசும்பாசி
B) பச்சை ஆல்கா
C) பழுப்பு ஆல்கா
D) சிவப்பு பாசி
விடை: A) நீலப்பசும்பாசி
360. உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஈஸ்ட்டின் வளர்ப்பு எதற்கு பயன்படுகிறது?
A) கரிம அமிலங்கள்
B) எத்தில் ஆல்கஹால்
C) CO2
D) வைட்டமின்கள்
விடை: B) எத்தில் ஆல்கஹால்
361. லெகூமினேஸியஸ் தாவர வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்த உதவுபவை
A) குளோரோபில்
B) பாக்டீரியா
C) CO2
D) இவை அனைத்தும்
விடை: B) பாக்டீரியா
362. ரைசோபியம் காணப்படும் வேர்முண்டுகள் உள்ள தாவர குடும்பம்
A) மால்வேஸியி
B) பேபேஸியி
C) ஆஸ்டிரேசியி
D) மியுஸேஸியி
விடை: B) பேபேஸியி
363. குளோரோபிலில் உள்ள உலோகம்
A) சோடியம்
B) தாமிரம்
C) மக்னீஷியம்
D) இரும்பு
விடை: C) மக்னீஷியம்
364. வைரஸ்கள் என்பவை வேதியல் ரீதியாக
A) கார்போஹைட்ரேட்டுகள்
B) நியூக்ளியோ புரதங்கள்
C) லிப்போ பாலி சாக்கரைடுகள்
D) கிளைக்கோ புரதங்கள்
விடை: B) நியூக்ளியோ புரதங்கள்
365. தாவரத்தில் பூங்கொத்து, பூக்கள், கனிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றைப் படிப்பது
A) தாவர செயலியல்
B) தாவர உள்ளமைப்பியல்
C) உடலக புற அமைப்பியல்
D) இனப்பெருக்க புற அமைப்பியல்
விடை: D) இனப்பெருக்க புற அமைப்பியல்
366. அடியாந்தம் ஸ்போரோபைட் நிலைத் தாவங்கள் இவ்வகை குரோமோசோம்களைப் பெற்றிருக்கும்
A) டிரிப்ளாய்டு
B) ஹப்லாய்டு
C) டிப்ளாய்டு
D) பாலி பிளாய்டு
விடை: C) டிப்ளாய்டு
367. பாலிடிரைக்கம் தாவரமானது கீழ்க்கண்ட எந்த குழுவை சார்ந்த தாவரம்?
A) டெரிடோபைட்டா
B) ஜிம்னோஸ்பெர்மே
C) பிரையோபைட்டா
D) ஆஞ்சியோஸ்பெர்மே
விடை: C) பிரையோபைட்டா
368. பெனிசீலியம் என்பது கீழ்க்கண்ட பொதுவான வகையை சார்ந்தது
A) ஆல்கா
B) பாக்டீரியா
C) வைரஸ்
D) பூஞ்சை
விடை: D) பூஞ்சை
369. “குளோரோமைசீன்” என்ற மருந்து எந்த வியாதியை குணப்படுத்தும்?
A) வயிற்றுப் போக்கு
B) காசநோய்
C) டைபாய்டு
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: B) காசநோய்
370. உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தாவர சிற்றினங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ
A) 40,000
B) 50,000
C) 4,00,000
D) 5,00,000
விடை: C) 4,00,000
371. ஈரத்தை உறிஞ்சும் வேர்களுடைய தாவரம்
A) வாண்டா
B) ஆல்
C) பீட்ரூட்
D) காரட்
விடை: A) வாண்டா
372. மைய அரிசி ஆய்வு நிறுவளம் அமைந்திருப்பது
A) கோயம்புத்தூர்
B) கட்டாக்
C) சிம்லா
D) திருவனந்தபுரம்
விடை: B) கட்டாக்
373. பரவல் என்பதன் விளக்கம்
A) நீர் மூலக்கூறுகள் தாழ் அடர்விலிருந்து உயர் அடர்வை நோக்கி செல்லுதல்
B) மூலக்கூறுகள் உயர் அடர்வு பகுதியிலிருந்து தாழ் அடர்வு பகுதிக்கு செல்லுதல்
C) ஒரு செல்லிலிருந்து மற்றுமொரு செல்லுக்கு மூலக்கூறுகளின் அசைவு
D) இறந்த செல்லில் நீர் மூலக்கூறு அசைவுகள்
விடை: B) மூலக்கூறுகள் உயர் அடர்வு பகுதியிலிருந்து தாழ் அடர்வு பகுதிக்கு செல்லுதல்
374. “அயோடின்” கீழ்க்கண்ட எந்த ஆல்காவிடமிருந்து எடுக்கப்படுகிறது?
A) ஜெலிடியம்
B) ஸ்பைரோகைரா
C) பியூகஸ்
D) வால்வாக்ஸ்
(விடை : கெல்ப் (அ) லாமினேரியன்)
விடை:
375. எய்ட்ஸ் நோயை உண்டாக்குவது
A) பாக்டீரியா
B) வைரஸ்
C) புரோடோசோவா
D) பூஞ்சைகள்
விடை: B) வைரஸ்
376. மிகவும் வளர்ச்சியடைந்த தாவர இனம்
A) பூக்கும் தாவரங்கள்
B) ஜிம்னோஸ்பெர்ம்ஸ்
C) கிரிப்டோகேம்ஸ்
D) பினரோகேம்ஸ்
விடை: A) பூக்கும் தாவரங்கள்
377. ஸ்ட்ரெப்டோமைசின் மருந்து தயாரிக்கப் பயன்படும் மருந்து
A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரிஸஸ்
B) S. வெனிசுலே
C) S. எரித்ரஸ்
D) S. ஃப்ராடியே
விடை: A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரிஸஸ்
378. உயரமான மரங்களின் அகலமான இலைகள் கீழ்கண்டவற்றில் எதனை ஈர்க்கின்றன?
A) மழை மேகங்கள்
B) நைட்ரஜன் வாயு
C) தூசி படிவுகள்
D) பறவைகள்
விடை: A) மழை மேகங்கள்
379. சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளைத் தோற்றுவிக்கின்றன இந்த நிகழ்ச்சி _________ எனப்படும்
A) அப்போகார்பி
B) பார்த்தினோகார்ப்பி
C) சின்கார்ப்பி
D) எகார்ப்பி
விடை: B) பார்த்தினோகார்ப்பி
380. உடல் முழுவதும் கசை இழையைப் பெற்றுள்ள பாக்டீரியா _______ என்று அழைக்கப்படுகிறது
A) எட்ரைக்கஸ்
B) செஃபலோடிரைக்கஸ்
C) பெரிடிரைக்கஸ்
D) ஆம்ப்பிடிரைக்கஸ்
விடை: C) பெரிடிரைக்கஸ்
381. இரண்டாம் நிலை வளர்ச்சி (அல்லது) குறுக்கு வளர்ச்சி இல்லாத தாவர வகை இனங்கள்
A) டெரிடோபைட்டுகள்
B) மானோகாட்டிலிடன்கள்
C) ஜிம்னோஸ்பெர்ம்கள்
D) இரு வித்திலைத் தாவரங்கள்
விடை: B) மானோகாட்டிலிடன்கள்
382. நுண்ணோக்கியின் கீழ் முதலில் செல்லை பார்த்தவர்
A) ஹுக்
B) லீவன்ஹோயெக்
C) சீவான்
D) ஷெலிடென்
விடை: A) ஹுக்
383. பூக்களின் மிக முக்கிய வேலை
A) ஒளி சேர்க்கை
B) நீராவிப் போக்கு
C) இனப்பெருக்கம்
D) கடத்தல்
விடை: C) இனப்பெருக்கம்
384. நமது நாட்டின் மிகப் பெரிய உலர் தாவர தொகுப்பு காணப்படும் இடம்
A) பெங்களூர்
B) கொல்கத்தா
C) ஊட்டி
D) ஷில்லாங்
விடை: B) கொல்கத்தா
385. கீழ்க்கண்ட மலர்களில் எது பூக்காம்பு அற்றவை?
A) கடுகு
B) செம்பருத்தி
C) சூரியகாந்தி
D) ரோஜா
விடை: C) சூரியகாந்தி
386. கீழ்க்கண்டவற்றில் வறண்ட நிலை தாவர அமைவுகளைப் பெற்றுள்ள தாவரம்
A) வாழை
B) புளி
C) எருக்கு
D) மா
விடை: C) எருக்கு
387. பூச்சி உண்ணும் தாவரங்களில் கீழ்க்கண்ட எந்த தனிமம் குறைவாக இருக்கும்?
A) கால்சியம்
B) மக்னீசியம்
C) நைட்ரஜன்
D) அயோடின்
விடை: C) நைட்ரஜன்
388. பெனிசிலிளைக் கண்டுபிடித்தவர்
A) லூயிஸ் பாஸ்டர்
B) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
C) ஜெ.சி.போஸ்
D) ஈ.ஜே.கோரே
விடை: B) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
389. செல்லில் உள்ள அதிக ஆற்றல் வெளிப்படுத்தக் கூடிய பாஸ்பேட் அணுவிடை கட்டுவுடைய மூலக்கூறு
A) ஆர், என். ஏ
B) டி. என். ஏ
C) எஃப் ஏ. டி
D) ஏ.டி.பி.
விடை: D) ஏ.டி.பி.
390. பால்பாஸ்சுரைசேஷன் செய்யப்படும் போது அழிக்கப்படுவது
A) வைட்டமின்கள்
B) புரதங்கள்
C) கொழுப்பு பொருட்கள்
D) நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள்
விடை: D) நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள்
391. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவற்றிற்கான சிறப்பு பண்புகள்
A) கனிகள் உடையவை
B) விதைகள் உடையவை
C) சூலகமற்றவை
D) வெஸல் உடையவை
விடை: C) சூலகமற்றவை
392. “ஸ்மட்” நோயை உண்டாக்கும் பூஞ்சை
A) பக்ஸினியா
B) அல்புகோ
C) நியூரோஸ்போரா
D) யுஸ்டிலாகோ
விடை: D) யுஸ்டிலாகோ
393. ஆல்ஜின் தயாரிக்க பயன்படுபவை
A) டையாட்டம்கள்
B) சிகப்பு ஆல்கா
C) கேரா
D) பழுப்பு நிற ஆல்கா
விடை: D) பழுப்பு நிற ஆல்கா
394. ‘லெபினேரியா’ விலிருந்து எடுக்கப்படும் பொருள்
A) அகர்-அகார்
B) ஜெலாட்டின்
C) அயோடின்
D) எதிர் உயிரி
விடை: C) அயோடின்
395. நிமோனியா நோயை உண்டாக்குபவை
A) ஆல்கா
B) பூஞ்சை
C) பாக்டீரியா
D) வைரஸ்கள்
விடை: C) பாக்டீரியா
396. ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் வாயு
A) ஹைட்ரஜன்
B) ஆக்ஸிஜன்
C) நைட்ரஜன்
D) குளோரின்
விடை: B) ஆக்ஸிஜன்
397. ஆல்காக்களில் காணப்படும் மூன்று முக்கிய பால் இனப்பெருக்க நிலைகள்
A) துண்டாதல், ஐஸோகேமஸ் மற்றும் ஊகேமி
B) ஐஸோகேமி, பாலிலா பெருக்கம் மற்றும் ஊாகேமி
C) ஐஸோகேமி, ஆப்ளனஸ்போர்கள் மற்றும் ஊகேமி
D) ஐஸோகேமி, அன்ஐஸோகேமி மற்றும் ஊகேமி
விடை: D) ஐஸோகேமி, அன்ஐஸோகேமி மற்றும் ஊகேமி
398. பருப்பு வகைகள் கீழ்க்காணும் எந்த தாவர குடும்பத்தை சார்ந்தவை?
A) குருசிபெரே
B) லெகுமினேசிய
C) மால்வேசிய
D) ரணன்குலேசியே
விடை: B) லெகுமினேசிய
399. கீழ்க்கண்ட எந்த பிரிவு தாவரங்களில் சூலகத்தின் சூல்கள் மூடப்படாமலில்லை அல்லது திறந்ததில்லை?
A) ஜிம்னோஸ்பெர்ம்கள்
B) ஆஞ்ஜியோஸ்பெர்ம்கள்
C) டெரிடோபைட்டுகள்
D) மானோகாட்டிலிடன்கர்
விடை: B) ஆஞ்ஜியோஸ்பெர்ம்கள்
400. பூச்சிகள் பூக்களை நாடி வருவதன் முக்கிய நோக்கம்
A) மகரந்த தூள்களை எடுக்க
B) தேனை சேகரிக்க
C) மகரந்தத் தாள்களை எடுக்க
D) சூற்பையை சேகரிக்க
விடை: B) தேனை சேகரிக்க