Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

2. இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. ‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?

அ) கல்ஹ ணர்

ஆ) விசாகதத்தர்

இ) ராஜசேகரர்

ஈ) சந்த் பார்தை

விடை: ஈ) சந்த் பார்தை

 

 

2. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

அ) முதலாம் போஜா

ஆ) முதலாம் நாகபட்டர்

இ) ஜெயபாலர்

ஈ) சந்திரதேவர்

விடை: ஆ) முதலாம் நாகபட்டர்

 

 

3. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

அ) மங்கோலியா

ஆ) துருக்கி

இ) பாரசீகம்

ஈ) ஆப்கானிஸ்தான்

விடை: ஈ) ஆப்கானிஸ்தான்

 

4. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

அ) சிலை வழிபாட்டை ஒழிப்பது.

ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.

இ) இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.

ஈ) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது

விடை: ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

 

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் …………. ஆவார்

விடை: தர்ம பாலர்

2. கி.பி ……………….. இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்

விடை: 712

3. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் …….. ஆவார்

விடை: சிம்மராஜ்

4. காந்தர்யா கோவில் ………………. ல் அமைந்துள்ளது

விடை: மத்தியப் பிரதேசம்

 

 

III. பொருத்துக.

1. கஜுராகோ – அபு குன்று

2. சூரியனார் கோவில் – பந்தேல்கண்ட்

3. தில்வாரா கோவில் – கொனார்க்

விடை:

 

1. கஜுராகோ – பந்தேல்கண்ட்

2. சூரியனார் கோவில் – கொனார்க்

3. தில்வாரா கோவில் – அபு குன்று

 

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையைக் டிக் (✓) இட்டுக் காட்டவும்.

1. கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.

காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

அ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கமே.

ஆ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று தவறு. காரணம் சரி.

ஈ) கூற்றும், காரணமும் தவறு.

விடை: ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

 

 

2. கூற்று : மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்துவிரிவுபடுத்த முடியவில்லை .

காரணம் 1 :மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவார்.

அ) I சரி

ஆ) II சரி

இ) I மற்றும் II சரி

ஈ) | மற்றும் பதவறு

விடை: இ) மற்றும் 1 சரி

3. கூற்று : இந்தியாவில் இஸ்லாமியக்காலக்கட்டம் கி.பிபொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை. இந்த

காரணம் : கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

ஆ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு. காரணம் சரி –

விடை: அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

 

 

4. கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.

காரணம் : ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை..

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று சரி, காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு, காரணம் சரி. 

விடை: இ) கூற்று சரி, காரணம் தவறு

 

 

5. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.

i. ரக்ஷாபந்தன் என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது.

ii. வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.

iii. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

அ) கூற்று சரியானது.

ஆ) கூற்று ii சரியானது.

இ) கூற்று iii சரியானது.

ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை.

விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை

Join the conversation